உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க சட்ட திருத்த மசோதா தாக்கல்

10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க சட்ட திருத்த மசோதா தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அனுமதி கட்டண அடிப்படையில் நடத்தப்படும், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள், 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் வகை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில், தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி சட்டம், 2017 முதல் அமலில் உள்ளது.அதில், கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனத்தாலும், அனுமதி கட்டணத்துடன் நடத்தப்படும், இசை, நாடகம் மற்றும் காட்சி நிகழ்ச்சிகளுக்கு, கேளிக்கை வரி விதிக்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.எனவே, இசை, நாடகம், காட்சி நிகழ்ச்சிகளுக்கு, அனுமதி கட்டணம் மீது உள்ளாட்சிகள், 10 சதவீதம் கேளிக்கை வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் வகை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக உள்ளாட்சி அமைப்புகள், கேளிக்கைகள் வரி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வழி செய்யும் சட்ட மசோதாவை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.இதே போல, தமிழக வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. தமிழக தனியார் கல்லுாரிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் தொடர்பாக, 2022ல் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதவை, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று திரும்ப பெற்றார்.தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி சட்டத்திருத்த மசோதா, தமிழக வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதுல் சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றுக்கு, அ.தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
டிச 10, 2024 10:45

நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலைகளை அழிக்க மட்டுமே உதவும். ஒரு சந்தேகம் . கோவன் இசைவாணி கச்சேரிகளுக்கு வரிவிலக்கு உண்டுதானே?


ஆரூர் ரங்
டிச 10, 2024 10:42

யூடியூப் போன்றவை வந்தபின் எல்லாவித இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் மிகக்குறைவு. வருமானம் குறைவு என்பதால் பல திறமையாளர்கள் இவற்றைத் தொழிலாக எடுத்துக் கொள்ளவே தயங்கும் நிலையில் டிக்கெட்டுக்கு வரி போடுவது கலைகளை அழிப்பதில்தான் முடியும். இயல் இசை நாடக மன்றம் அமைத்து கலைகளை வளர்க்கும் அரசு அதே கலைகளுக்கு ஊறு விளைவிக்கலாமா?


rasaa
டிச 10, 2024 09:00

தமிழக மக்கள் அனைவரும் இனிமேல் 10% கேளிக்கை வரி கட்டாயம் செலுத்தும் நிலை தமிழக அரசியல் கோமாளித்தனத்தால் ஏற்பட்டுள்ளது.


sankar
டிச 10, 2024 08:57

சைடுல கவனிக்க இந்த ஏற்பாடு


GMM
டிச 10, 2024 08:22

தமிழக மாநில நிர்வாகம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேவைக்கு அதிக, இஷ்டம் போல் வரிவிதிக்க அதிகாரம் கூடாது. எல்லை பாதுகாப்பு நிதி சுமை இல்லாத மாநில நிர்வாகம் கடன் வாங்க, மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் எந்த வரியும் கூடுதலாக புதிதாக வசூலிக்க அதிகாரம் ,ஒப்புதல் கொடுக்க கூடாது.


raja
டிச 10, 2024 07:19

எல்லாத்துக்கும் வரியாடா...கட்டண களிப்பிடத்தில் உடன் பிறப்புகள் அநியாயமா வசூலிக்கிறானுவோ அதுக்கும் வரி போடுங்க்கடா...


அப்பாவி
டிச 10, 2024 07:14

ஐயய்யோ... தினந்தோறும் நம்ம பெரிய ஜீ, விடியல், அண்ணாஜீ, இ.பி.எஸ், தமில்மியூசிக், திருமாஜீ, விஜய்ஜீ போன்றவர்களின் காமெடி பேச்சுக்களைக் கேட்டாலே பின்னாடி வந்து வரி வசூலிச்சிடுவாங்களா கோவாலு?


Kumar
டிச 10, 2024 10:02

மாட்டாங்க. பெரிய,சிறிய தத்திகளின் காமெடிக்கு மட்டும் தான் வரி.


சாண்டில்யன்
டிச 10, 2024 06:37

அந்த காலத்தில் செம்மறி ஆட்டு கூட்டமாக இருந்தவர்கள் இன்றோ நெல்லிக்காய் மூட்டையாகிப் போனார்களே ஊருக்கு ஊர் நாளுக்கு நாள் மாறிமாறி பேசும் தலைகள் முளைத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பிக் கொண்டுள்ளனர் ரிசல்ட் பூஜ்யம் நோட்டாவுடன் மல்லுக்கு கட்டு நோட்டாவை கண்டு பிடித்தவன் அறிவாளி என்கிறார்கள்


Kasimani Baskaran
டிச 10, 2024 05:48

மாநில அரசின் பொறுப்பற்ற நிதி மேலாண்மையை ஈடு செய்ய இது போல எதற்க்கெடுத்தாலும் வரி என்ற திராவிட மாடல் கோட்பாடு சிறந்ததுதான்.


nagendhiran
டிச 10, 2024 05:48

அனுபவிங்க விடியலை


புதிய வீடியோ