உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க மதுரை வருகிறார் அமித் ஷா

ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்க மதுரை வருகிறார் அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ஜ., தொண்டர்களை சந்தித்து, தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும், 8ம் தேதி மதுரை வருகிறார். தமிழகத்தில், 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு, 11 மாதங்களே உள்ளதால், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o26s0v5r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஏப்., 11ல் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை அறிவித்தனர்.இந்நிலையில், அமித் ஷா வரும், 8ம் தேதி மதுரை வருகிறார். அவர், தென் மாவட்டங்களை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து, தேர்தல் பணிகள் தொடர்பாக அறிவுரை வழங்க உள்ளார். இதற்காக அன்றைய தினம் மாலை 4:00 மணிக்கு, பிரமாண்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகிறார் அமித் ஷா. இதில் மாநில அளவில் கிளை அமைப்புகளுக்கு மேலான, மாநில அமைப்புகள் வரையான நிர்வாகிகள் 12,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இவர்களோடு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். மதுரையில் இம்மாதம், 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'எந்த ஷா வந்தாலும், தமிழகத்தை ஆள முடியாது. டில்லிக்கு தமிழகம் எப்பவுமே, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' தான்' என்றார். இதற்கு, பதிலடி கொடுக்கவே அமித் ஷா, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் ஏற்பாட்டை செய்து மதுரைக்கு வருவதாக கட்சி நிர்வாகிகள் கூறினர். இப்படியொரு கூட்டத்தை, கோவையில் கூட்டி அமித் ஷாவை தமிழகம் அழைத்து வரத்தான் ஏற்பாடாகி இருந்தது. தி.மு.க., பொதுக்குழு மதுரையில் நடந்து முடிந்தபின், அமித் ஷாவே, நிகழ்ச்சியை மதுரையில் நடத்துமாறு கூறிவிட்டதாக பா.ஜ., வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Palanisamy T
ஜூன் 06, 2025 17:38

தன் கைகளில் சகல அதிகாரங்களை அரசின் நிதிபலத்தை வைத்துப் கொண்டவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், மற்றவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் தக்க பதிலடிகள் கொடுக்கலாம். இன்று பாஜக தமிழகத்தில் வேரூண்றுவது நாளைய தமிழகத்திற்கு நல்லதாகயிருக்காது. மக்கள் சிந்திக்கவேண்டும்


ராஜா
ஜூன் 06, 2025 15:36

ரயில் எரிப்பு வாதை இவர்கள் மீது படிந்தது போக்க இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் விடாமல் தொடரும்


Iyer
ஜூன் 06, 2025 09:50

எந்த ஷா வந்தாலும், தமிழகத்தை ஆள முடியாது. இப்படித்தான் டெல்லியில் கெஜ்ரிவால் கொக்கரித்தார். சாராய ஊழல் செய்து - அதே சாராயத்தில் கெஜ்ரி அரசும் மூழ்கியது. தமிழகத்திலும் சாராய ஊழல் DMK மூழ்கி மறையும் நாள் வெகு தூரம் இல்லை.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 06, 2025 07:33

இத்தனை நாளா அண்ணாமலை தூங்கிட்டு இருந்தாரா? வழக்கு நடக்கும்போதே இவரும் ஆஜராகி, தன் கையில் இருக்கற ஆதாரத்தை குடுத்து தானும் ஒரு சாட்சியா வழக்காடலாமே? ஆதாரம் இருந்தால் தானே கொடுப்பதற்கு, இதுவும் ரபில் பில் மாதிரிதான். நீதிமன்றத்திற்கு சென்றிருந்தால்... இவர் பொய்கள் எல்லாம் வெளிப்பட்டு அவமானமாகி இருக்கும். வெளியே நின்று உதார் விட்டால். பத்திரிகை செய்தி வரும். விளம்பர கோஷ்டி தானே. வேல வெட்டி இல்லை என்றால் ஊர் வம்புதானே பேசுவார்கள். அதுவும் இவர் அப்படித்தான். நீங்க என்ன தான் செய்தாலும், முதலில் நீர் வாராமல் மோடி வந்தால் டெபாசிட் ஆவதே தேறும், நீர் வந்தால் BINARY நோட்டா லெவல் தான்


Murugesan
ஜூன் 06, 2025 15:18

மண்டையில மூளையற்ற தகுதியற்ற தத்திகளை தலைவராக கொண்ட 200 ஊபி, தமிழக காவல்துறை தான் திமுக அடிமைகளாக மாறி, குற்றவாளிகளை தப்பிக்க வேண்டுமென்றே ஆதாரங்களை அழிக்க உதவி உள்ளனர், எந்த ஒரு தனி நபரும் தாமாக கோர்ட்டில் பேச முடியாது,


ராஜா
ஜூன் 05, 2025 23:23

அந்த ஷா வந்தாலும் இந்த மூர்த்திகள் வந்தாலும் எதுவும் மாறாது , மாற்றவும் முடியாது, தைலாபுரம் தோட்டத்தில் குட்டயை கலக்கி விட்டு மீன் பிடிக்க முடியாது, ஏற்கனவே கொக்குகள் கொண்டு போய் விட்டது,மனோகரன் கட்டிய மனக்கோட்டை கதையை ஞாபகப்படுத்துகின்றது,


venugopal s
ஜூன் 05, 2025 18:30

நாம் பேசுவது இவருக்கு புரியாது, இவர் பேசுவது நமக்கு புரியாது, அப்புறம் என்ன பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்?


Iyer
ஜூன் 06, 2025 09:58

மொழியால் - சில பிரச்னைகள் உருவாகுவது உண்மை. ஆனால் எந்த நாட்டு மக்களும் ஊழல் இல்லாத, நாட்டுப்பற்று கொண்ட கட்சிகளையே விரும்புவார்கள். தமிழக மக்கள் DMK ஐ தூக்கி எரிந்து பிஜேபி ஐ ஆட்சியில் அமர்த்தும் நாளும் வரத்தான் போகிறது. இந்தி பேசாத மாநிலங்களான - ஒரிசா, கர்நாடக, ஆந்திர போல் கேரளா, தமிழ் நாடு, மேற்கு வங்க ராஜ்யங்களில் தாமரை மலரதான் போகிறது.


Rengaraj
ஜூன் 05, 2025 17:09

கருணாநிதி காலத்தில் இருந்த கொள்கை பிடிப்பு இன்னைக்கு எத்தனை திமுக உடன்பிறப்புகளிடம் உள்ளது.


Krishnamoorthy
ஜூன் 05, 2025 15:17

waste of time


புரொடஸ்டர்
ஜூன் 05, 2025 13:19

அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.


vivek
ஜூன் 05, 2025 15:19

சில கொத்தடிமைகள் ஊளையிடும்


Krishnamoorthy
ஜூன் 05, 2025 16:15

சில கொத்தடிமைகள் வரவேற்கும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 05, 2025 10:36

நாங்க கே கே ஷாவையே பார்த்தவங்க ..அமிதாஷா எம்மாத்திரம், எங்கள் எதிர்ப்பை காட்ட ..வீரத்துடன் ..போர்படையை த்திரட்டி .. அணிவகுத்து ..அமித்ஷாவை நோக்கி முன்னேறி... மண்டியிடா மானத்துடன் உடனே வெள்ளை குடையை ரெடிபண்ணுவோம் பிடித்து ....அமித்ஷாவே வருக அருமையான ஆட்சியை தருக ..ஏற்று கோஷம் எழுப்போவோம் ..அமித் அதிர்ந்து போவார் ....யார் கிட்ட


முக்கிய வீடியோ