உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அம்மா உணவகங்களில் 2 நாட்கள் இலவச உணவு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அம்மா உணவகங்களில் 2 நாட்கள் இலவச உணவு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலை தள பதிவின் விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1vfn8fqc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று அதிக அளவில் பெய்த வட கிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.இவ்வாறு தமது எக்ஸ் தள பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Matt P
அக் 17, 2024 22:14

கரண்டியில் இருக்கற சாம்பாரை இப்படி பாக்காரு. வெண்டைக்காய் இருக்குதா இல்லையா என்றா?


Matt P
அக் 17, 2024 22:07

தலைவர் கை காசை போட்டு எம்ஜி ஆர் போல வூருக்கே கொடுக்க ஆரம்பிச்சுட்டார் போலிருக்கு. நல்லது நடந்தால் சரி .


panneer selvam
அக் 16, 2024 21:03

Stalin ji , not only Amma Canteen , the free meal should be extended even to Sangeetha , Saravana Bhavan , Geetha cafe , Balaji cafe and other known veg restaurants so that every one in that area could have free food for next two days and not to worry about RED or Orange alerts


கிஜன்
அக் 16, 2024 20:49

மனித நேயமிக்க செயல்கள் ...மகிழ்ச்சியளிக்கிறது ..... மாண்புமிகு அம்மா அவர்கள் இப்போது இல்லை ... எனவே அரசியல் இல்லாமல் இந்த உணவகங்கள் சிறப்பாக தொடர வேண்டும் .... தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ... என்ற கூற்றுக்கிணங்க ..அன்னபூரணியாக அம்மா அவர்கள் செயல்பட்டார்கள் ... அப்படி செய்தால் அதிமுக வினரின் ஓட்டுக்களும் உங்களுக்கு தான் ...


prlakshmitamil
அக் 16, 2024 17:11

நான் திருவொற்றியூரில் மார்க்கெட் அம்மா உணவகத்தில் 9.45 காலையில் சென்றபோது பணம் கொடுத்தாலே உணவு இல்லை என்று சொன்னார்கள் .


sankaranarayanan
அக் 16, 2024 13:27

அம்மா உணவகங்களில் இரண்டு நாட்கள் இலவச உணவு அளிக்க அப்பா அறிவிப்பு வரவேற்கிறோம்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 16, 2024 13:22

அரசு நடத்தும் அம்மா உணவகங்களில்தான் இலவச உணவு ..... கட்சிக் காசில் அல்ல... கட்சிபணத்தை தேர்தலுக்கு மட்டும் வாரி இறைப்போம் ......


ஆரூர் ரங்
அக் 16, 2024 13:09

3000000000000 எனக்கு. ஓட்டுப் போட்ட உங்களுக்கு உணவக ஓஷிச்சோறு மட்டுமே .


வைகுண்டேஸ்வரன்
அக் 16, 2024 15:45

பரம்பரை பரம்பரை யா வாழ்ந்து கிட்டு இருக்கும் ஊரைப் பற்றி இப்படி எதிர்மறையாகவே கருத்து போட்டுக்கிட்டு எப்படிய்யா நீங்க எல்லாம் இருக்க முடிகிறது? எப்ப பாத்தாலும் டாஸ்மாக் னு புலம்ப வேண்டியது, இல்லன்னா அரசை திட்ட வேண்டியது? எப்படி உங்களுக்கெல்லாம் படுத்தா தூக்கம் வருமா? உண்ட சோறு செரிக்கிறதா?? எப்ப பாத்தாலும் நெகடிவ் எண்ணங்கள், எதிர்மறை கருந்துகள். யாருக்குமே பாசிட்டிவ் சிந்தனையே இல்லாம எப்படி உங்களால் வாழ முடிகிறது?? இப்படி இருப்பதில் என்ன கிடைக்கிறது? அதுவும் சில மாமூல் வாசகர்களுக்கு எப்போதும் எதிர்மறை வார்த்தை கள் தான். அவர்களின் குடும்பத்தினரை நினைத்தால் பாவமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிண்டே இருப்பார்களே??


sridhar
அக் 16, 2024 12:58

ஒவ்வொரு மழைக்கும் இப்படி தாயுள்ளததோடு சாம்பார் சாதம் போடுங்க , அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துடாதீங்க . தமிழக மக்களுக்கு நீண்ட கால , நிரந்தர தீர்வை விட ஆயிரம் ரூபாயும் சாம்பார் சாதமும் தான் பிடிக்கும் .


Nallavan
அக் 16, 2024 12:50

வேஷக்கார ஈஸ்வர இவங்களுக்கு நல்ல புத்திய கொடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை