உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிளாம்பாக்கத்தில் இன்று முதல் கூடுதலாக 120 பஸ்கள் இயக்கம்

கிளாம்பாக்கத்தில் இன்று முதல் கூடுதலாக 120 பஸ்கள் இயக்கம்

சென்னை : கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் குறித்தும், அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறித்தும், பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, சாலை மறியலில் பயணியர் ஈடுபட்டது, பெரிய விஷயமாக மாற்றப்பட்டது. குறிப்பிட்ட அட்டவணைப்படி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், வார இறுதி, விடுமுறை உள்ளிட்ட தினங்களில் திட்டமிடப்படாத பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.இரவு 11:00 மணிக்கு மேல், வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைக்கப்படும். நள்ளிரவு 12:00 மணிக்கு மேலும் பேருந்துகள் இயக்கப்படும் என நினைத்து, திடீரென 200, 300 பேர் வந்தால், அது எப்படி சாத்தியம். அதிகாலை நேரத்தில் பயணம் செய்வது என்பது ஆபத்தானது, விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தான், அந்த நேரங்களில் பேருந்து போக்குவரத்து தவிர்க்கப்படுகிறது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருச்சிக்கு பேருந்துகள் இல்லை என்று பிரச்னை ஏற்பட்டது. ஆனால், அன்று தினமும் இயக்கக்கூடிய 133 பேருந்துகள் மட்டும் இல்லாமல், கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள், மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இன்று காலை முதல், கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,215 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன. இனியும் வதந்தி பரப்புவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிளாம்பாக்கத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த, மக்களின் கருத்துகள் கேட்டு, சரி செய்யப்பட்டு வருகிறது. ஆறு ஏ.டி.எம்.,கள் மற்றும் 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

DHESIKAN
பிப் 16, 2024 17:17

கலைஞர் பேரை பார்த்தாலே ஒரே போர் அடிக்குது. வேற யாராவது பேர் வைக்கலாமே. அடுத்த 50 வருsaத்துக்கு தி மு க வருவது கஸ்டம். 1964 to 2026. DMK End.


Sivagiri
பிப் 16, 2024 13:19

மாநகர பேருந்துகளை உள்ளே உள்ள மெயின் கேட் அருகில் பயணிகளை இறக்கி விட்டு பின் மாநகர பஸ்ஸ்டாண்டில் சென்று நின்று கொள்ள வேண்டியதுதானே , கார்களில் வருபவர்கள் மட்டும் உள்ளே மெயின் வாசல் வரை வர அனுமதி உள்ளது , பல பேர் இப்போ பஸ்ஸ்டாண்ட் உள்ளே வர மாட்டேன் என்கிறார்கள் , மெயின் ரோட்டிலேயே நின்று கொள்கிறார்கள் - வெளியே கிளம்பி வரும் பஸ்களில் கையை காட்டி நிறுத்தி , ஏறிக்கொள்கிறார்கள் -


krishnan
பிப் 16, 2024 12:57

how omni buses stops and pick up people in many places in city?


N SASIKUMAR YADHAV
பிப் 16, 2024 11:30

பஸ் கிளம்பாதபாக்கம் என பெயர் வைத்துவிட்டால் யாரிடமும் எந்த பதிலும் சொல்ல தேவையிருக்காது. எதெதற்கோ பெயர் மாற்றம் செய்யும் தமிழக மொதல்வர் இந்த பெயரையும் பரிசீலிக்க வேண்டும்


g.s,rajan
பிப் 16, 2024 10:39

முதல் கோணல், முற்றிலும் கோணல் ...


Rajarajan
பிப் 16, 2024 09:55

கிளாம்பாக்கத்தில் மாநகர பேருந்து பணிமனை (டிப்போ) அவசியம். இதனால், 24 மணிநேர, சென்னை மாநகர இணைப்பு கூடுதல் பேருந்துகள் சாத்தியமாகும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல், கூடுவாஞ்சேரி/வண்டலூர் ரயில் நிலையம் வரை, கட் சர்வீஸ் பேருந்துகளை அதிக அளவில் இயக்கவேண்டும். தமிழக அரசு வீண் கவுரவம் பார்க்காமல், உடனடியாக மத்திய அரசை தொடர்புகொண்டு, செங்கல்பட்டு - பீச் இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழ்வேள்
பிப் 16, 2024 11:11

2010 க்கு முன்பே வண்டலூர் பூங்காவுக்கு எதிரில் [கிளாம்பாக்கத்துக்கும் எதிரில்தான்] தெற்கு ரயில்வே ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க முன்வந்த பொது, தேவையான இடம் ஒதுக்காமல் அக்கப்போர் செய்தது தமிழக அரசு... இப்போது தலையை சொரிந்துகொண்டு நிற்கிறது... வண்டலூர் ரயில் நிலையம் வரை வரும் பேருந்து காலியாகத்தான் செல்கிறது ...தற்போது அனைத்து பஸ்களும் தாம்பரம் வரை வந்து பின்பு கிளாம்பாக்கம் திரும்பி செல்வதால், பயணிகளுக்கு தாம்பரம் ரயில்நிலையம் வரை செல்லும் ஒரு சிறு வசதி மட்டும் கிடைத்துள்ளது ....


S.Balakrishnan
பிப் 16, 2024 09:40

முன் திட்டமிட்டு பஸ் நிலையத்தை திறக்க வக்கில்லை. ஒரு மாதம் கழித்து கூடுதல் பஸ் இயக்கம் செய்ய மக்கள் கருத்து கேட்கும் அளவுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறீர்கள். இந்த லட்சணத்தில் குறை கூறுவோர் மீது வதந்தி பரப்புவோர் என்று நடவடிக்கை பாயும் என்று அச்சுறுத்தல். திறமையான திராவிட மாடல் அமைச்சர் எப்படி மக்களை இழிவு படுத்துகிறார் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Kuppan
பிப் 16, 2024 09:25

கிளம்பாக்கத்தில் தான் எந்த பிரச்னையும் இல்லை என்று விடியல் முதல்வர் தெரிவித்த பின்பு எதற்கு இந்த மாதிரி 120 பேருந்துகளை வீணாக விடுகிறார், முதல்வர் பேச்சை யாரும் கேட்பது இல்லையா ? இந்த 120 பேருந்தும் காலியா சுத்தி வருமா? யாரு வீட்டு பணம்?.


S. Gopalakrishnan
பிப் 16, 2024 08:52

பால் வளத்துறை மந்திரி, கொழுப்பச்சத்து செறிந்த பால் ஹிருதய நோயை வரவழைக்கும் என்று சொல்லி செறிவூட்டப்பட்ட பால் விற்பனையை நிறுத்தினார். இந்த மந்திரி ராத்திரியில் பிரயாணம் செய்ய வேண்டாம்: என்று சொல்லி பேருந்துகளை நிறுத்துகிறார் ! என்னே என் பாக்கியம் !


S. Gopalakrishnan
பிப் 16, 2024 08:47

ஒரு பேருந்து நிலையத்தை ஒழுங்காக நடத்த இயலாத சர்க்கார். கடந்த இருபது தினங்களில் இந்த மந்திரியின் எத்தனாவது ஆய்வு ஆகும் ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை