உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 34,384 பேருக்கு மட்டுமே அரசு வேலை; தி.மு.க., அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

34,384 பேருக்கு மட்டுமே அரசு வேலை; தி.மு.க., அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'கடந்த நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், 34,384 பேருக்கு மட்டுமே, அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை,6.50 லட்சமாக அதிகரித்துள்ளது என, அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., அரசு படுதோல்வி அடைந்துள்ளது; இதற்கு இதை விடபெரிய சான்று தேவையில்லை.டி.என்.பி.எஸ்.சி., சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, கடந்தநான்கு ஆண்டுகளில்,34,384 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும், பதிவு செய்யாமலும், 1.30 கோடி பேர், அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், ஆண்டுக்கு 10,000 பேருக்கு மட்டும், அரசு வேலை வழங்குவது,இளைய தலைமுறையினருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம்.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எல்லா பணியிடங்களிலும்,ஒப்பந்த முறையிலும், குத்தகை அடிப்படையிலும், ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். இதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை.மூச்சுக்கு முன்னூறு முறை சமூக நீதி என்று பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மையாகவே, சமூக நீதியில் அக்கறை இருந்தால்,தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள,6.50 லட்சம் காலி பணியிடங்களையும், உடனே நிரப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ