உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.வில் நிகழும் அடுத்த திருப்பம்: 3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி

பா.ம.க.வில் நிகழும் அடுத்த திருப்பம்: 3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய பகீர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.பா.ம.க.,வில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வந்த உட்கட்சி பூசல் நேற்று பகிரங்கமாக வெடித்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., இளைஞரணி தலைவர் முகுந்தன் நியமனம், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு, பொதுக்குழுவை கூட்டி அவரை நீக்குவேன் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அன்புமணிக்கு எதிராக முன் வைத்தார். கண்கலங்கிய நிலையில் தைலாபுரத்தில் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டி அக்கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந் நிலையில், உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை உள்ளிட்டோரை இன்று சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.சென்னை சோழிங்கநல்லூரில் மாவட்டம்தோறும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே 30) முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது நிர்வாகிகளுடன அவர் ஆலோசனை நடத்துவார்.கட்சியில் தமக்கான இடம் எது என்பதையும், பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு பதிலளிக்கும் விதமாகவும் அவர் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது. 2026 தேர்தல் கூட்டணி, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் நிர்வாகிகள் கருத்தை கேட்டறிவார்.3 நாட்கள் தீவிர ஆலோசனைக்கு பின்னர் தமது இறுதியான நிலைப்பாட்டை அன்புமணி அறிவிப்பார் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raja
மே 30, 2025 12:08

சென்ற பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸ் சொல்படி பா.ம.க. , அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், சுமார் 8 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும். அதைவிட்டு விட்டு, திமுக ஸ்லீப்பர் செல் அண்ணாமலை பேச்சை கேட்டு சௌமினியம், அன்புமணியும் தவறான முடிவெடுத்து கட்சியை முட்டு சந்துக்கு கொண்டு சென்று விட்டனர்.


angbu ganesh
மே 30, 2025 11:22

உள்கட்சி பூசலேயே சரி செய்ய முடியல


KumaR
மே 30, 2025 10:57

முத்து அவர்களே அப்படி பார்த்த உங்க திமுகவும் தான் பிஜேபி கூட கூட்டணில இருந்துச்சி..


PR Makudeswaran
மே 30, 2025 10:28

இதில் உள்கட்சி வெளிக்கட்சி என்று ஒன்றுமே இல்லை. விட்டு கொடுத்து போகாத குடும்ப சண்டை. ஒரு பழமொழி. வினை விதைத்தவன் வினை தான் அறுப்பான்.


veeramani
மே 30, 2025 09:47

தென் பாண்டி நாட்டின் வாசகர் கருத்து .... தெற்கு சீமையிலே மரம்வெட்டி கட்சி இல்லை. மேலும் எந்த ஒரு கட்சிக்கும் மாறுதல் தேவை. எழுபதுகளில் டிரங் கால் போட்டு பேசிபழகிய நாங்க, இன்று கைபேசியில் அமெரிக்காவில் உள்ளவர்களை வீட்டில் இருந்தபடி தொடர்பு கொள்ளமுடிகிறது. அதேபோல மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான் வயதானவர்களுக்கு அழகு .திரு அன்புமணி அவர்கள் சீரான செழுமையான திறமையான ஒரு அரசியல்வாதி. அவர் தலைமையில் கட்சி செழிக்கட்டும்.


RAAJ68
மே 30, 2025 08:42

உங்கள் கட்சி அழிய வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. தேர்தலுக்கு தேர்தல் இனி யாருடனும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துவிட்டு வெட்கம் மானம் எதுவும் இல்லாமல் மறுபடியும் அணி சேர்ந்து அணிமாறி பெட்டி பெட்டியாக சம்பாதித்து நீங்கள் பதவி சுகத்தை அனுபவித்தீர்கள் மக்களுக்கு என்ன பயன். மக்களுக்கு என்ன செய்தீர்கள் உங்கள் கட்சி தொண்டர்களுக்கு என்ன செய்தீர்கள். அப்பனுக்கும் மவனுக்கும் கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் பேசுங்கள். உங்கள் கட்சி அழிந்து விடும்


Narayanan Muthu
மே 30, 2025 08:21

பழமொழி சொல்லுவாங்க ஆமை புகந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாதுன்னு. இப்ப புதுமொழியாய் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கட்சியும்ன்னு சேர்த்துக்கலாம்


PR Makudeswaran
மே 30, 2025 10:17

காழ்ப்பு உணர்ச்சி வேண்டாம். பிஜேபி உடன் சேர்ந்த எந்த கட்சி இந்த நிலைக்கு வந்துள்ளது? நெஞ்சை தொட்டு எழுத்துங்கள்..


Yes your honor
மே 30, 2025 10:48

ஆமாமாம். ஆமை புகந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது, இப்ப புதுமொழியாய் உதயநிதி கூட சேர்ந்த யாரும் உருப்படவே முடியாது, ஊழல் தான், திஹார் தான் முடிவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை