உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி விளக்கம் அளிக்க மறுப்பு; கட்சி விரோத நடவடிக்கை பாயுமா?

அன்புமணி விளக்கம் அளிக்க மறுப்பு; கட்சி விரோத நடவடிக்கை பாயுமா?

திண்டிவனம்: அன்புமணிக்கு இரண்டாவது தடவையாக ராமதாஸ் தரப்பில் அனுப்பப்பட்ட விளக்க நோட்டீசின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், அவர் மீது கட்சி விரோத நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரி அரு கே உள்ள சங்கமித்ரா திருமண நிலையத்தில் கடந்த ஆக., 17ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு சுமத்தியது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆக., 31க்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விவாதித்தது. பின், குழு உறுப்பினர்கள், அன்புமணி மீதான தங்கள் கருத்துகளை தனித்தனியாக சீலிட்ட கவரில் வைத்து ராமதாசிடம் ஒப்படைத்தனர். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து, ராமதாஸ் இறுதி முடிவெடுப்பார் எனவும் அறிவித்தனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி ராமதாஸ் கூறும்போது, 'ஏற்கனவே அனுப்பியுள்ள நோட்டீசிற்கு அன்புமணி விளக்க கடிதம் கொடுக்கவில்லை. அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்., 10ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்' என்று கூறினார். இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துள்ள நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரவில்லை. இதை தொடர்ந்து, இன்றை ய பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அன்புமணி மீதான கடும் நடவடிக்கை குறித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிடுவார் என கட்சி வட்டாரங்கள் கூறி ன.

ராமதாஸ் தரப்பு

கேவியட் மனு

தாக்கல்

பா.ம.க., நி றுவனர் ராமதாசிற்கும், மகன் அன்புமணிக்கும் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம், தாங்கள் தான் உண்மையான பா.ம.க., என்று முறையிட்டு, அதற்கான ஆவணங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை ஐகோர்ட் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கட்சிக்கும் சின்னத்திற்கும் அன்புமணி தரப்பினர் உரிமை கோரி வழக்கு தொடுத்தால், தங்கள் தரப்பில் கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என கூறியிருக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 11, 2025 13:42

தேர்தல் வரப்போற நேரத்துல இப்படி கட்சியைக் குதறிப் போடுவாய்ங்களா >>>>


Appan
செப் 11, 2025 13:10

அப்பனும், மகனும் சேர்ந்து கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்ற இப்படி நாடகம் போடுகிறார்கள். பாவம் வன்னியர்கள்.. கடைசியில் அவர்களின் அடாவடித்தனத்தால் ராமதாஸ் பெரும் பணக்காரன் ஆனார்.. சராசரி வன்னியர்களை ரோட்டில் விடப்பட்டார்கல்


R.MURALIKRISHNAN
செப் 11, 2025 10:42

வயசு பையன் பீல்டில் இருக்கேனும், வயசான பேசாம வீட்டில இருக்கேனும். இது தெரியாதவன் கட்சியை ஏன் நடத்தோனும். கொஞ்சமாவது கட்சியின் பெயர் நல்ல நிலையில் இருப்பதற்கு அன்பு மணிதான் காரணம். அது சரி நல்ல நிலையில் நடத்துபவனுக்கு யார் ஆதரவு தருவாங்க


சந்திரன்
செப் 11, 2025 08:46

நாங்களே வாரிசை புகுத்துவோம் வாரிசிடம் கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்புவோம். திரும்ப திரும்ப அனுப்புவோம் எந்த புள்ள அப்பன மதிக்குது.


Vasan
செப் 11, 2025 08:04

Daddy Doctor and Son Doctor will continue this drama till this year end, and will keep both DMK and ADMK in suspense in order to forge a better alliance in terms of number of seats.


Premanathan S
செப் 11, 2025 10:05

இதுதான் உண்மை


பிரேம்ஜி
செப் 11, 2025 07:25

வாரம் ஒருமுறை நோட்டீஸ் அனுப்பப்படும்! அன்புமணி விளக்கம் தரும் வரை இந்த நடைமுறை தொடரும்! இது மகன் என்பதால் தரப்படும் சலுகை! மற்றவர்களுக்கு உடனடி பதவி கட்சி உறுப்பினர் நீக்கம் தான்! ஏனென்றால் இது ஜனநாயக கட்சி!