உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்

பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணியை நீக்கி, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பா.ம.க.,வில் அப்பா -மகன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவது, புதியவர்களை நியமிப்பது என, போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் அன்பு மணி பக்கம் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை ராமதாஸ் நியமித்தார்.பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் பக்கம் உள்ளனர். சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் அன்புமணி பக்கம் உள்ளனர். தனக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருளை, கடந்த 2ம் தேதி கட்சியிலிருந்து அன்புமணி நீக்கினார்.இதை ஏற்காத ராமதாஸ், 'பா.ம.க.,விலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. இணை பொதுச்செயலர், நிர்வாகக் குழு உறுப்பினர், எம்.எல்.ஏ., ஆகிய பொறுப்புகளில் அருள் தொடர்வார்' என அறிவித்தார்.இந்நிலையில், இன்று (ஜூலை 06) பா.ம.க., புதிய நிர்வாக குழுவை ராமதாஸ் அறிவித்தார். குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 21 புதிய பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். ராமதாசுடன், ஜி.கே.மணி, சிவப்பிரகாசம், அருள்மொழி உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர். தற்போது, பா.ம.க.,வில் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

montelukast sodium
ஜூலை 06, 2025 12:47

DMK-PMK ராமதாஸ் ஐயா AIADMK -PMK அன்புமணி ஐயா சூப்பர் DMK WIN2026


Jack
ஜூலை 06, 2025 14:31

திமுக மீண்டும் வெல்வது எதிர்காலத்துக்கும் வருங்கால சந்ததிக்கும் நல்லதல்ல …இந்தியாவில் முகலாயர் ஆட்சி நடந்தது போல தாத்தா அப்பா மகன் பேரன் என்று தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆட்சி காணாமல் போகும் ..


VSMani
ஜூலை 06, 2025 12:16

பேசாமல் அன்புமணி தன் அப்பாவிடம் கட்சியைக்கொடுத்து விட்டு தான் படித்த மருத்துவ தொழில் செய்யலாம். ஏன் வயதானவரிடம் போய் சண்டை போட்டுக்கொண்டு? விட்டுக்கொடுத்தால் கெட்டு போவதில்லை. பொதுவாக அரசியலுக்கு வந்தபின் யாரும் வேறு வேலை செய்வதில்லை ராமதாஸ், அன்புமணி, தமிழிசை, கிருஷ்ணசாமி போன்றவர்கள். அரசியல் செய்வது என்பது நல்லா ஊர் சுற்றலாம் நிறைய ஆட்களை பார்க்கலாம் செய்தியாளர்களை சந்திக்கலாம். நல்லா ஜாலி .


சுந்தர்
ஜூலை 06, 2025 12:15

ராமதாஸ் ஐயா அவர்களுக்கு அன்பு வேண்டாம். மணி மட்டுமே வேண்டும். திமுகவிற்கு தாவிடுவார். அவருக்கு வேண்டியது கிடைக்கும்.


R.MURALIKRISHNAN
ஜூலை 06, 2025 11:37

பாட்டாளி மக்கள் கட்சி இனி பாட்டாளி மக்கள் குழு 1, பாட்டாளி மக்கள் குழு 2 என்ற வாட்ஸ் அப் குழுக்களாக செயல்படும். ஒன்றிற்கு அட்மின் ராமதாஸ் இரண்டிற்கு அன்புமணி. விருப்பம் உள்ளவர்கள் தேவையான குழுவில் இணைந்து எங்கள் விளையாட்டை கண்டு களிக்கலாம்


Nada Rajan
ஜூலை 06, 2025 11:26

அப்பா மகன் சண்டை யை விட்டு தள்ளுங்க.... அவங்களை ஒரு ஆளாக மதிக்க வேண்டாம்


krishnan
ஜூலை 06, 2025 11:19

சின்ன அய்யா பெரிய அய்யாவை நீக்குவாரு, பெரிய அய்யா சின்ன அய்யாவை நீக்கிட்டாரு, இரு "வாருக்கு" ம், இருவருக்கும் இடையில் எவரும் இருக்க மாட்டாரு, அப்புறம் யாரு, யாரு கட்சியில இருப்பாரு, தெரியாது


Kulandai kannan
ஜூலை 06, 2025 10:54

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் கேடு.