உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிகத்தில் முதலீடு முதல்வருடன் அனில் அம்பானி பேச்சு

தமிகத்தில் முதலீடு முதல்வருடன் அனில் அம்பானி பேச்சு

சென்னை:இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்களும் அந்த மின் நிலையங்களை, தமிழகத்தில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த முகேஷ் அம்பானியின் சகோதரரும், தொழில் அதிபருமான அனில் அம்பானி, தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில், தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் உயர் மட்டத்தினருடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாயிலாக, தமிழகத்தில் பசுமை மின் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் கட்டுவதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அனில் அம்பானி, முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ