உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்ட அனிதா

 அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்ட அனிதா

து ாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சட்டசபை தொகுதியில், தி.மு.க.,வை சேர்ந்த மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொடர்ந்து ஏழாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 2006 தேர்தலில் வென்ற அவர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தார். கடந்த 2009ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ளார். இந்நிலையில், பரமன்குறிச்சியில் திறந்த ஜீப்பில் நின்றபடி நேற்று பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: இந்த பகுதியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளீர்கள். முதல்வராக ஸ்டாலின் மீண்டும் வருவதற்கு, உங்கள் சகோதரனான எனக்கு, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். ஜீப்பில் அவருடன் இருந்தவர்கள், அவரது தவறை சுட்டிக்காட்டியதும், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்ட அமைச்சர், பிரசாரத்தை உடனே முடித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ