உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கைதிகள் போராட்டத்தால் பரபரப்பு

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கைதிகள் போராட்டத்தால் பரபரப்பு

வேலூர் : அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவாக, வேலூர் சிறைக் கைதிகள், ஒரு மணி நேரம் தாமதமாக உணவு சாப்பிட்டனர். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே நேற்று எட்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இவருக்கு ஆதரவாக, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள 750 கைதிகள், நேற்று காலை மற்றும் மதிய நேர உணவை, ஒரு மணி நேரம் தாமதமாகச் சாப்பிட்டனர்.இது குறித்து, சிறை அதிகாரிகள் கேட்ட போது, 'ஊழலை ஒழிக்கப் போராடி வரும் அன்னா ஹசாரேக்கு, தங்களால் எதுவும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு மணி நேரம் தாமதமாக உணவு சாப்பிடுவது, அவரது போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் என, கைதிகள் தெரிவித்தனர்' எனக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை