உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர்தான்; அதான் ஆதாரம் இருக்கே; சீமான்

அண்ணா பல்கலை குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர்தான்; அதான் ஆதாரம் இருக்கே; சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: அண்ணா பல்கலை குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பது, கட்சியின் பேனர் மற்றும் அமைச்சர்களின் போட்டோக்களின் மூலம் தெரிய வந்துள்ளதாக நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை வன்கொடுமை சம்பவத்தில் முதலில் 2 பேருக்கு தொடர்பு என்றார்கள். அதன்பிறகு, ஒருத்தர் என்கின்றனர். அண்ணா பல்கலை நிர்வாகிகள் அனுமதியில்லாமல் உள்ளே போக முடியாது என்றால், இவரு எப்படி உள்ளே சென்றார். நேர்மையான அமைப்பு விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும். மகளிர் ஆணையம் விசாரிப்பதை வரவேற்கிறேன். கைதான நபர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்று அண்ணாமலை வெளியிட வேண்டியதில்லை. அமைச்சர் மா.சுப்ரமணியம் கைதான நபரின் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிறார். துணை முதல்வர், அமைச்சரோடு அந்த நபர் இருக்கும் போட்டோக்கள் எல்லாம் வெளியாகியுள்ளது. கட்சியின் பேனரில் அவருடைய பெயர் இருக்கிறது. முரசொலியில் அந்த நபரின் பெயர் போட்டு வெளியிட்டு இருக்கிறார்கள். கட்சியில் இருக்காரு, இல்லை. இதுபோன்ற தவறுகளை கட்டுப்படுத்த வேண்டும்.ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலை அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்தது மிகவும் இழிவானது. தி.மு.க.,வில் பிரச்னையே இல்லையா? ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் முரண்பாடே இல்லையா? ஊடகத்தில் வெளிவந்ததால் தான் பிரச்னை. இந்த பிரச்னையால் மக்களுக்கு பாதிப்பு இருக்கா? அதனை ஏன் கேலி செய்து பேசணும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
டிச 30, 2024 08:22

அண்ணே...... பிரியாணி சேகரன் சொன்ன அந்த சார் யார் என்பதை... உங்கள் பாஷையில் சொல்லி விடுங்கள்.


பிரியாணிபாபு
டிச 30, 2024 06:38

அந்த ஆடி கார், சார் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைய முடியுமா? நாளக்கி டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாளில் கேட்டா என்ன செய்வது?


Matt P
டிச 29, 2024 22:49

சாதிக் பாக்ஷா, ஞ்ஆன சேகரன் என்று பல பேரும் தலைமைக்கு தெரிந்த குற்றவாளிகளாகவே இருக்கிறார்கள். எந்த கட்சியிலும் குற்றவாளிகள் இருக்கலாம் தான் . இப்படி தலைமைக்கு தெரிந்து இருந்தால், அவர்களுக்கு நடப்பது நமது கட்சி யாரும் அசைக்க முடியாது என்ற திமிர் தான் காரணமாக இருக்க முடியும் குற்றங்கள் நடப்பதற்கு. ஏற்கெனவே பல பெரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. ரமேஷ் ,சாதிக் பாக்ஷஆ கொலை, ராமானுஜம் கருணா நகரில் ஒரு அதிகாரி குடும்பம் இந்த கொலைகளுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. இணைய தளம் வந்த பிறகு மக்கள் விமரிசிக்க முடிகிறது தலைமையும் மிரள்கிறது. இதற்க்கு முன் பல் ஆண்டு திமுக ஆட்சியில் என்னென்ன நடந்ததோ. ஸ்டாலினும் கருணாநிதியிடம் அரசியல் படித்தவர் தானே. ஆண்டவனுக்கே வெளிச்சம். நமக்கெல்லாம் இருட்டு. எங்கோ உதைக்கிறது.


புதிய வீடியோ