உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து

அண்ணா பல்கலை வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4wmil207&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் போலீசார் செயலால் பதில் அளித்து உள்ளனர். விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம். தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் போலீசார் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளனர் என மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது.பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசு.அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான தி.மு.க., அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அ.தி.மு.க., தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றி வருகிறோம்.அதனால் தான் யார் அந்த SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். FIRல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது தி.மு.க., அரசு?SIRஐ காப்பாற்றியது யார்? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.தமிழக பா.ஜ., தலைவர், நயினார் நாகேந்திரன்அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நிலுவையில் உள்ள ஏனைய பாலியல் வழக்குகளிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். அரக்கோணம் வழக்கில் இன்னும் எப்.ஐ.ஆர்., கூடப் பதிவு செய்யப்படாமல் தாமதப்படுத்துவது ஏன்? இதற்கான விளக்கத்தையும் மக்கள் மன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பிக்க வேண்டும்.

அமைச்சர், கீதா ஜீவன்

பெண்களை இழிவாக கருதும் சமூக விரோதிகளுக்கு, ஞானசேகருக்கு அளிக்கப்பட்ட 30 ஆண்டுக்கால சிறை தண்டனை மூலம் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விரைவான நடவடிக்கைக்கு கிடைத்த தீர்ப்பாகும் .இதன் மூலம் பெண்கள் இனிமேல் தைரியமாக புகார் தெரிவிக்க வருவார்கள்.தமிழக காங்., தலைவர், செல்வ பெருந்தகைஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியிடம் காட்டுமிரண்டித்தனமாக நடந்து கொண்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு குறைப்பு இல்லாத 30 ஆண்டுகள் ஆயள் தண்டனையுடன், ரூபாய் 90 ஆயிரம் அபராதம் வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதியின் தீர்ப்பை தமிழக காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையானது, பெண்கள் சமூகத்தில் பாதுகாப்பாக உணரவும், வன்கொடுமைகள் இல்லாத சமூகமாக உருவாக காரணமாகவும் அமையும். குற்றம்சாட்டப்பட்ட 5 மாதத்திற்குள் விரைந்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறேன்.பா.ம.க., செயல் தலைவர், அன்புமணிஅண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது. மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அவர்களை பாதுகாக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. அவர்கள் யார் ? என்பதைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா.ஜ., மூத்த தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கி இருக்க வேண்டும். ஞானசேகரன் குற்றம் செய்ய சம்பவத்திற்கு பின்னணி என்ன? யார் அந்த சார் என்பதற்கு பதில் தெரியவில்லை.அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன்அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை, தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் அன்றாடம் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வகையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

V Venkatachalam
ஜூன் 02, 2025 22:19

கீதா ஜீவன் அக்கா என்னா சொல்லுது? இந்த தீர்ப்பினால் இனிமே பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க வருவார்கள்.. ஆஹா அக்காவோட கண்டுபிடிப்பு அருமையோ அருமை.. இந்த அக்கா இனிமே இந்த மாதிரி குற்றங்களே நடக்காது ன்னு சொல்ல துப்பில்லை.


Ganesan
ஜூன் 02, 2025 18:47

பல பெண்களுடன் உறவு அந்த புகாரில், "என்னுடைய கணவர் சுபம் குப்தா, பல பெண்களுடன் முறைகேடான உறவை வைத்திருக்கிறார்.. உடலுறவு கொள்ளும்போது அதனை வீடியோவாக பதிவிட்டுக்கொள்ளும் பழக்கமும் அவருக்கு உள்ளது.. என்னை மனம் மற்றும் உடல் ரீதியாக என்னுடைய கணவர் துன்புறுத்தியிருக்கிறார்.. என்னை வலுக்கட்டாயப்படுத்தி ஆபாச படங்களை பார்க்க வைத்தார்.. 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சுபம் குப்தாவிடம் உள்ளது தன்னுடைய அம்மா, ஒரு பாஜக தலைவர் என்றும், தன்னை எதுவும் செய்ய முடியாது என்றும் சுபம் குப்தா என்னை மிரட்டுகிறார். தனக்கு பெரிய தலைவர்களுடன் தொடர்பு இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றும் சொல்கிறார்.. என்னை அவருடைய வீட்டில் அடைத்து வைத்து சாப்பாடு போடாமல் பட்டினி போட்டார்" என்றெல்லாம் ஷீத்தல் தன்னுடைய புகாரில் தெரிவித்திருக்கிறார்.. ஷீத்தல் தந்துள்ள இந்த புகாரின் பேரில் சுபம் குப்தா, சீமா உள்பட போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. எனினும் இந்த அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.


Prasanna S
ஜூன் 02, 2025 18:32

யார் அந்த சார் என்று உங்கள் அரசு மற்றும் காவல்துறையால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்களும் உங்கள் மக்கள் விரோத அரசும் அந்த குற்றவாலளியை காப்பாறியிருக்கிரறீர்கள் ஸ்டாலின் அவர்களே


Kannapiran Arjunan
ஜூன் 02, 2025 23:18

நீதிபதி வேறு குற்றவாளிகள் கிடையாது என்றும் தீர்ப்பில்..எனவே இந்தமாதிரி சார் கேள்விகள் எழுப்புகிறவர மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம்


D.Ambujavalli
ஜூன் 02, 2025 18:24

அந்த 'சார்' பெயரை சொல்லாமலா இருந்திருப்பான், அல்லது விசாரித்த குழுதான் கேட்காமல் இருந்திருக்குமா? அந்த பகுதியை அப்படியே அமுக்கிவிட்டுக் கொடுத்த அவசரத் தீர்ப்பு அந்தப் பெண்ணும் கூறியிருக்கிறார் அவன் யாருடனோ பேசினான் என்று முழுப் பூசணிக்காயை சோற்றுப் பருக்கையாலேயே மறைக்கப் பார்க்கும் அவசரத் தீர்ப்பு


சங்கி
ஜூன் 02, 2025 18:11

இது மாசு இல்லா தீர்ப்பு. மாலை சூடி சுப்பிரமணியனை வணங்குவோம். அந்த சார் தானாக அகப்படுவார்.


Abdul Rahim
ஜூன் 02, 2025 18:01

நீயெல்லாம் பேச தகுதி இருக்கா உன் ஆட்சியில நடந்ததற்கு அடுத்த ஆட்சி வந்துதான் தண்டனை வாங்கி தந்திருக்கு ,


Narayanan
ஜூன் 02, 2025 17:07

மேல் முறையீட்டிற்கு அனுமதி கொடுத்திருப்பது தவறு .


theruvasagan
ஜூன் 02, 2025 14:54

தா.கிருட்டிணன் மதுரை கவுன்சிலர் லீலாவதி சாதிக்பாஷா கார் ரமேஷ் இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பேர் போன காட்டுலாந்து போலீசு என்னத்தை கிழிச்சுது.


தமிழன்
ஜூன் 02, 2025 14:52

வழக்கை விரைவாக முடிக்கும் போதே, புரியவில்லையா அந்த சார் காப்பாற்ற பட்டு இருக்கிறார் என்று..? இதை வைத்தே சிறையில் அவருக்கு ராஜ மரியாதை கிடைக்கும்.. அந்த ராஜ மரியாதை அவருக்கு கிடைக்க வில்லை என்றால், அதை தப்பி தவறி சொல்லி சாரயை காட்டி கொடுத்து விடுவார் என்றால், எங்கோண்டெர் நடக்கும். அவ்வளவு தான் தமிழகம்.. இன்னுமா இந்த கட்சியை அடுத்த 50 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்யவில்லை.. இல்லை என்றால் இது முடிவல்ல தொடரும்..


தமிழன்
ஜூன் 02, 2025 14:48

அவருக்கு என்ன பிரச்சனை வந்து விட போகிறது.. வெளியே எப்படி சன்தோஷமாக இருந்தாரோ.. அதே போல உள்ள சகல வசதிகளுடன் இருப்பார்.. பிரியாணி சாப்பிட்டவர்கள் சும்மா விடுவார்களா என்ன?


சமீபத்திய செய்தி