உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 28ல் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.கடந்த டிச.,23ம் தேதி, இரவு, 8:00 மணியளவில், சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் மகளிர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன், 37, என்பவரை கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=edgol9lt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பவ இடத்தில், ஞானசேகரன் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு 'சார்' என்று அழைத்து பேசியதாக தகவல் வெளியானது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளம் வணிக வளாகத்தில் செயல்படும், மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவு அடைந்தது. இந்த வழக்கில், மே 28ல் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Nagarajan S
மே 26, 2025 13:09

மாணவி ஏன் இரவு தனிமையில் சந்திக்க வேண்டும் அவன் யார் வெளியே வரவில்லை இது வரை


venugopal s
மே 25, 2025 19:50

குஜராத் கலவர வழக்கு தீர்ப்பு போல் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் தீர்ப்பு இருந்தால் சரி தான்!


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 25, 2025 18:14

என்னையும் விட ஆபத்தான அந்த சாரை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன்னு சொல்லிருப்பானோ ??


Venugopal, S
மே 25, 2025 16:25

இவன் மீதுள்ள மற்ற வழக்கில் என்ன நடந்ததோ அதே தான் நடக்கும். அடுத்த நிகழ்வுக்கு இவன் போகலாம். அப்புறம் அந்த சாருக்கு யார் சேவகம் செய்வர்...? நீதி மன்றம் கருணையின் குறியீடாக விளங்கும்


திருட்டு திராவிடன்
மே 25, 2025 16:16

யார் அந்த சார் என்று யாரும் இல்லை. தம்பி எந்தவித தவறும் செய்யாத பரிசுத்தன். இதற்கு எல்லாவற்றிற்கும் முழு முதல் காரணம் அந்தக் கல்லூரி மாணவிதான்.


roy
மே 25, 2025 15:22

நம்ம நீதிமன்றத்தை எப்படி நம்புவது


Kasimani Baskaran
மே 25, 2025 14:06

மாநில அரசு விசாரித்து உண்மை வெளிவந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.


SUBBU,MADURAI
மே 25, 2025 17:00

இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் இந்த நபர் மீது சந்தர்ப்ப சாட்சிகளால் இவர்தான் குற்றம் செய்தார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக நிரூபிக்கப் படவில்லை எனவே சந்தேகத்தின் பலனை இவருக்கு அளித்து வழக்கம் போல இவரை விடுதலை செய்கிறோம்.


selvelraj
மே 25, 2025 14:03

ஞான சேகரின் கதி என்ன? எல்லாம் தெய்வசெயல்


Yaro Oruvan
மே 25, 2025 14:02

யார் அந்த ஸார் ?? விடியல் அஸ்தமனம்


Venkatasubramanian krishnamurthy
மே 25, 2025 13:45

எப்படியும் "யார் அந்த சார்" என்பதற்கு விடை தெரியப் போவதில்லை. இதற்கு எதற்கு ஒரு நல்ல முஹூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்தார்கள் தீர்ப்பு சொல்வதற்கு?