உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்.,: தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் சென்னை போலீஸ்!

பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்.,: தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் சென்னை போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரை ஆன்லைனில் வெளியிட்ட போலீசார், அதை இப்போது முடக்கியுள்ளனர். யாரேனும் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.சென்னை அண்ணா பல்கலையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் ஏற்கனவே மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பகலில் பிரியாணி கடை நடத்திக் கொண்டு, இரவில் அண்ணா பல்கலை வளாகத்திற்குள் சென்று, மாணவிகளை இதுபோன்று பாலியல் சீண்டலுக்கு ஆளாக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3xpv9kp5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை, போலீஸ் இணையதளத்தில் ஆன்லைனில் வெளியானது. அதில் மாணவியின் பெயர் விவரங்கள் இருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், போலீசார் அந்த எப்.ஐ.ஆர்., லிங்க்கை முடக்கியுள்ளனர். எப்.ஐ.ஆர்., யாரேனும் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.பெற்றோருக்கும், பல்கலை நிர்வாகத்துக்கும் வீடியோவை அனுப்பி விடுவேன் என்று வன்கொடுமை செய்த குற்றவாளி, மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பற்றியும் போலீஸ் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 96 )

Naga Subramanian
டிச 30, 2024 16:21

கட்டான மாவுடன், சொகுசுக் காரில் பயணம். என்னே அழகு


venkataraman muthuswamy
டிச 29, 2024 13:35

Every time I see the cuprit of the Anna University incident the cuprit has bandage on his different leg. It shows how much TN police are confused and struggle to cover the incident. The leg bandage itself is a drama and they cant remember which leg he had bandage very first time..


R.MURALIKRISHNAN
டிச 27, 2024 20:10

கட்டிட மேஸ்திரிய வைத்து கட்டு போட்டிருப்பான்க போலிருக்கு. இல்ல அஸ்திவார ஒயரத்துக்கு பூசி மெழுகியிருக்காங்க


அப்பாவி
டிச 27, 2024 08:48

எந்த கடைலடா இட்லி மாவு வாங்குனீங்க? இவ்ளோ பெரிய கட்டாகீதே. இல்லே புரோட்டா மாவா?


அப்பாவி
டிச 27, 2024 08:47

போலூஸ் துறை மந்தி எங்கே போயிட்டாரு?


BalaG
டிச 27, 2024 01:18

இதை கேட்க துப்பில்லாத அதிகாரிகளும், அரசியல் வியாதிகளும்


Muthu Subramanian
டிச 26, 2024 21:29

குற்றவாளி தமது கட்சிக்காரர் என்றால் கழகம் கடைசி வரை துணை நிற்கும் என்பது வரலாறு. அதற்கு சமீபத்திய சான்று வேங்கை வயல்.


தமிழ்வேள்
டிச 26, 2024 20:10

பிரச்சினை சிக்கல் ஆகாமல் தவிர்க்க திமுகவுக்கு தெரிந்த ஒரே வழி- என்கவுன்டர்..... அதுதான் நடக்கப்போகிறது....தான் தப்பிக்க எத்தனை கட்சிக்காரர்கள் ஐ வேண்டுமானாலும் தயங்காமல் பலி கொடுக்கும் திராவிட கும்பல் அரசுகள்....அப்படி என்கவுன்டர் நடந்தால் பெரிய கை ஏதோ இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிவிடும்


தமிழ்வேள்
டிச 26, 2024 20:04

கை முறிந்தது என்று கூறியது திமுகவின் போலீஸ்..பார்த்தால் சாதாரண காயக்கட்டு போலத்தான் தெரிகிறது.. கால் முறிந்து அடிவாங்கிய வலியின் முகச்சுளிப்பு தெரியவில்லை..நடிக்க சொன்னது போல உள்ளது...மாவுக்கட்டும் செட் அப் போல உள்ளது..ஏதோ பெரிய தொடர் பாலியல் நடவடிக்கைகள் செய்து ஒன்றில் மட்டும் சிக்கியது போல உள்ளது....உபி ஐ போலீஸ் பொத்தி பாதுகாப்பது தெரிகிறது....


T.sthivinayagam
டிச 26, 2024 19:56

வன்கொடுமை செய்தவனை இந்த் ஜாதி இந்த மதம் இந்த கட்சி என்று அரசியல் செய்வது மிக கேவலமானது மற்றவர்கள் புகார் அளிக்க அச்சமே ஏற்படும்


சமீபத்திய செய்தி