உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை கோரும் பா.ஜ.,

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை கோரும் பா.ஜ.,

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.பா.ஜ.,வின் மையக்குழு கூட்டத்திற்கு பின் நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மீது நம்பிக்கையில்லை. மாநில அரசின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மாநில அரசின் கையாளாகாததனத்திற்கு எதிராக பெண்கள் போராடினால், அவர்களையும் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். போராடுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் அனுமதி உள்ளது. அவற்றை புறந்தள்ளி கைது செய்து அடக்குமுறையை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=anscv4pg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஞானசேகரன் தி.மு.க., ஆதரவாளர் என முதல்வர் மெதுவாக சொல்லும் நிலை உள்ளது. இங்கே மாநில அரசு மீது நம்பிக்கையில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலை மாணவி பாலியல் தொந்தரவு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பெண்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளது. எதிர்க்கட்சிகளின் குரல்வளை ஏன் நசுக்கப்படுகிறது. அமுக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட குரல் எழுப்புவதற்கு அனுமதி மறுக்கிறீர்கள். இங்கு என்ன ஜனநாயகம் இருக்கிறது. அவசர நிலை போல் அனைவரின் குரல்வளை நெரிக்கப்படுவது ஏன்?முதல்வர் இந்த விவகாரத்தை மென்மையாக கையாள்கிறார். தமிழக அரசு மீது பெண்கள் நம்பிக்கை இழந்து கொண்டு உள்ளனர்.தி.மு.க., நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள். யாரையும் கைது செய்யாதது ஏன்? தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்தினால் பாதிக்கப்படுமா? இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.

பொறுப்பேற்க வேண்டும்

பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியதாவது: சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் பேசும் போது, கைது செய்யப்பட்டவர் எங்கள் கட்சி அனுதாபி எனக்கூறியுள்ளார். வழக்கு தொடர்பு இல்லாத விஷயங்களை சேர்க்கிறார். பொள்ளாச்சி விஷயத்தை பற்றி பேசுகிறார். உங்களைத் தான் மக்கள் ஆட்சி அமைக்க அதிகாரம் கொடுத்து உள்ளார்கள். தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு செய்து உள்ளீர்களா எனக் கூறுவதை விட்டுவிட்டு, முன்பு ஆட்சியில் இருந்த கட்சி செயல்பாட்டை பற்றி அதிகளவில் பேசுகிறார். எப்.ஐ.ஆர்., விஷயத்தில் மத்திய அரசை குறை கூறினார். ஒரு சில அமைச்சர்கள் கவர்னர் மீது புகார் சொல்கின்றனர். பல்கலை வளாகத்தில் நடந்ததால் கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றால், பொது வெளியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு முதல்வர் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rafiq Ahamed
ஜன 09, 2025 08:13

பெண்களை துன்புறுத்துபவர்கள், கொடுமை செய்பவர்கள், தவறான பாதையில் தள்ளி விடுபவர்கள், இவர்களுக்கு இறைவனின் கடுமையான தண்டனை காத்துருக்கிறது அனுபவிங்க...


அப்பாவி
ஜன 08, 2025 22:40

அந்த ஞானபிரியாணியை குண்டுக்கட்டாக அந்தமானுக்கு தூக்கிட்டுப் போய் லாடம் கட்டி விசாரிச்சா அந்த சார், மோர் விஷயமெல்லாம் வெளியே வந்துரும்.


பல்லவி
ஜன 08, 2025 22:29

கனியாமுத்தூர் மாணவி , தாம்பரம் இரு மரணம் கொடநாடு கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டுகின்றனரா ?


Ramesh Sargam
ஜன 08, 2025 22:07

ஒருவேளை அந்த மாணவி ...ஆக இருந்திருந்தால், திமுக அரசு என்ன செய்யும்?


Mario
ஜன 08, 2025 21:36

அந்த மணிப்பூர்?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 08, 2025 22:13

அந்த மணிப்பூரை அவர்கள் பார்த்து கொள்வார்கள்... உங்களுக்கு என்ன கவலை தவிர மணிப்பூரிகள் யாரும் வந்து அண்ணா பல்கவைகழக விவகாரத்தை கேட்க வில்லை....கேட்பது நம் தமிழிசை அக்கா....!!!


பேசும் தமிழன்
ஜன 09, 2025 07:48

முதலில் நீ இருக்கும் தமிழ்நாட்டில் நடப்பதை பற்றி பேசு... மணிப்பூர்.. நாகாலாந்து என்று லாட்டரி சீட்டு விற்க போய் விட்டாய்.. அங்கே நடந்த குற்றங்களுக்கு அவர்கள் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்கள்.. இங்கே நடந்த குற்றத்தின் பின்னணியில் இருக்கும் அந்த சார் யார் ???


Priyan Vadanad
ஜன 08, 2025 21:03

மிக்கேல்பட்டி பள்ளியை வம்புக்கு இழுத்து அப்பள்ளியின் பெயரை கெடுக்க அவ்வளவு போராடிய பாவக்காயினர்தான் இவர்கள். ஆனால் NCPCR அமைப்பு என்ன சொன்னது? அந்த கேஸ் என்ன ஆனது? உண்மை ஜெயிக்கும். பாவக்காயினர் இப்போது அரசை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் அவர்கள் செய்வது பாதிக்கப்பட்ட பெண்ணை இன்னும் வகை வகையாய் மானபங்கப்படுத்துவது மட்டுமே இவர்கள் பாவக்காயினர் அல்ல. அசிங்ககாயினர்.


Kasimani Baskaran
ஜன 08, 2025 20:41

முதல் நாளே முன்னுக்குப்பின் முரணான தீம்காவின் சொதப்பல்களை உலகமே புரிந்து கொண்டது. அன்றே இதை வலியுறுத்தி இருக்கவேண்டும். தும்பியை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதைதான்.


தாமரை மலர்கிறது
ஜன 08, 2025 20:36

பாலியியல் குற்றவாளிகளை காப்பாற்றும் திராவிட நல்லரசு.


அப்பாவி
ஜன 08, 2025 20:30

இப்பிடி கூவுனா மத்திய அமைச்சர் ஆயிடலாம். சி.பி.ஐ சுவரேறி குதிச்சு கைது ஆனவனெல்லாம் இன்னிக்கி எம்.பி. இதிலேருந்தே சி.பி.ஐ லட்சணம் தெரியல?


சாண்டில்யன்
ஜன 08, 2025 19:24

பொள்ளாச்சி வழக்கையே இன்னும் முடிக்க முயாம விழி பிதுங்கிக்கிட்டு இருக்காங்க இந்த கேஸையும் கொடுத்தா அப்படியே மூடிடலாம்னு பாக்குது பிஜேபி


சமீபத்திய செய்தி