உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம் வாபஸ்

அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,23) இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை இரு மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்கலை வளாகத்தில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மாணவியின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலையின் பதிவாளர் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தி வந்த போராட்டத்தை மாணவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K V Ramadoss
பிப் 11, 2025 01:01

போதாது மாணவர்களே...


Vijay
டிச 25, 2024 23:30

மதத்தை தாண்டி யோசிக்காத சிறுபான்மையினர், தங்கள் குடும்ப நலத்தை மட்டுமே யோசிக்கும் சுயநல அரசு ஊழியர்கள், எலும்பு துண்டிற்காக ஜால்ரா அடிக்கும் ஊடகங்கள், பணத்திற்கு ஓட்டை விற்கும் கும்பல், மற்றும் சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள் இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருக்கும். இது நம் தலை விதி.


Velayutham rajeswaran
டிச 25, 2024 18:59

இது உண்டியல் குரூப் மாணவர்கள் சங்கம் மாணவர்களே அவனுகளை நம்பாதீர்கள்


jayvee
டிச 25, 2024 18:26

திராவிட போலீசை கண்டு திராவிட மாணவர்கள் வாபஸ் ..இது உள்கட்சி விவகாரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை