உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ்கள் பராமரிப்பில் திமுக அரசின் அலட்சியத்தால் தொடர் விபத்துகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு

பஸ்கள் பராமரிப்பில் திமுக அரசின் அலட்சியத்தால் தொடர் விபத்துகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: பஸ்களின் பராமரிப்பு, டிரைவர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றில், திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவாகவே தொடர் விபத்துகள் நடக்கின்றன என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசுப் பேருந்து மோதி, 9 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபகாலமாக, அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும், மிகவும் அதிகரித்திருக்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் அரசு பஸ் விபத்துகள், பஸ்களின் பராமரிப்பு, டிரைவர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றில், திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இந்த தொடர் விபத்துகள். அரசுப் பேருந்துகள் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா, அந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது.கடந்த மாதமே, அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த அலட்சியத்தைப் பற்றி எச்சரித்திருந்தோம். ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு தான் நேற்றைய பேருந்து விபத்து. தொடர் விபத்துக்களையும், அது தொடர்பான எச்சரிக்கைகளையும் உதாசீனப்படுத்திய திமுக அரசே இந்த விபத்துக்கான முழு பொறுப்பு. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

G Mahalingam
டிச 25, 2025 19:36

அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஊழல்கள் இருக்கு. டயர் 500 டயர்கள் வாங்குவார்கள. பில் 1000 டயருக்கு இருக்கும். பில் போவது தலைமை அலுவலகம் டயர்கள் போவது ஒர்க் ஷாப். இப்போதும் நடை பெறுகிறதா என்று தெரியவில்லை.


N Annamalai
டிச 25, 2025 18:53

பேருந்து மேல் கடன்கள் இருப்பதால் விற்கவும் முடியாமல் நிறுத்தவும் முடியாமல் அரசு தவிக்கிறது .புது பஸ்ஸ்டாண்ட் கட்டி கட்சிக்கார எல்லோருக்கும் வருமானம் வருகிறது .மால் கட்டி அரசுக்கு வருமானம் வருமா ?.இல்லை கோவில் நிலம்போல் மண்ணாகிவிடுமா ?.வருமானம் பெருகவேண்டும் .இவர்களால் பஞ்சர் போட்டு டீசல் ஊத்த மட்டும் தான் முடியும் தெரியும் .இலவசம் தேவை இல்லை தரமான பஸ் குறித்த நேரத்தில் வந்தால் போதும் .டிக்கெட் விலை ஒரு அளவு சரியாக இருக்க வேண்டும் .பேருந்து இயக்குவதால் அரசுக்கு வருமானம் வரவேண்டும் .அவர்களை சரியாக மதிக்க வேண்டும் .வெறும் ஆசிரியர்கள் மட்டும் அரசு ஊழியர் இல்லை .


Barakat Ali
டிச 25, 2025 18:11

விஜய் மக்கள் பிரச்னைகளை பேசாமல் ஓட்டு வாங்கிட்டுப் போயிடுவார் ....... நீங்க ரொம்பவே மெனக்கிடுறீங்க .....


GMM
டிச 25, 2025 18:00

அரசு நிர்வாகம் மட்டும். தனியார் அல்லது கூட்டுறவு சங்க மூலம் தொழில். டி. வி. எஸ். நிறுவன கருணாநிதியின் தேச உடமை ஒரு சட்ட விரோத நடவடிக்கை. மாநில நிர்வாக அதிகாரத்தில் வராது? ஊழல் போக்கு வரத்து கழகம், சில வாரியம் எதிலும் லாபம் தேட அவசியம் இல்லை? இருந்தும் அதிக உயிர் பலிகள். பஸ், பஸ் நிலையம் தனியாரிடம் ஒப்படைப்பது நல்லது. திமுக நிர்வாகம், கம்யூனிஸ்ட் சங்கம் எதையும் உருப்பட விடாது.


Svs Yaadum oore
டிச 25, 2025 17:47

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் 3 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்ப்பாம் .......இதை கண்டு, நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் பலரும் அதிர்ச்சியாம் ..இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் இலவசமாக இடம் கிடைக்குதுன்னு சமூக விரோதிகள் இந்த விடியல் ஆட்சியில் கஞ்சா செடி வளர்க்கறானுங்க .. ....இவ்வளவு படு கேவலமான ஆட்சி நடக்குது ...இதை கவனிக்க விடியலுக்கு துப்பில்லை ....


Chola
டிச 25, 2025 17:39

Thank you annamalai for raising this. Lethargic government, not showing interest to maintain the condition of existing bus. Keen on buying new volvo buses.. corruption commission sick politicians


Sesh
டிச 25, 2025 17:19

அரசு பஸ் மோதி இறந்தால் 5 கோடி இன்சூரன்ஸ் தொகை வருமாறு செய்யவேண்டும் அதுவும் 2மாதங்களுக்குள் இழப்பீடு தொகை கொடுக்கவேண்டும். மனித உயிர்கள் இங்கே மிகஉவும் மலிவாக மதிக்கப்டுகிறது.


Apposthalan samlin
டிச 25, 2025 17:09

tyre வெடித்தால் இந்த அரசு என்ன செய்யும் கொஞ்சம் up ராஜஸ்தான் போய் பாருங்கள் சும்மா கம்பு சுத்தக்கூடாது


Svs Yaadum oore
டிச 25, 2025 17:49

மணிப்பூர் , ஜபல்பூர் - ராய்பூர் இங்கே சிறுபான்மை மீது தாக்குதலாம் ....இவர்கள் எல்லாம் வடக்கனுங்க படிக்காதவனுங்க பான் பீடா பனி பூரி காரனுங்க .....இப்ப மட்டும் இவனுங்க மேலே திராவிடனுங்களுக்கு எப்படி மத சார்பின்மையாக அக்கறை , அப்படியே கண்ணில் தண்ணீர் வடியுது ??...


Indian
டிச 25, 2025 17:53

Maintenance அர்த்தம் தெரியுமா உடன் peppe


vivek
டிச 25, 2025 18:50

அப்போதலா... அது தரமில்லாத டயர்...


PalaniKuppuswamy
டிச 25, 2025 16:43

திராவிடன் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்ய அல்ல. முடிந்த அளவுக்கு சுருட்டுவதற்கு . மறைத்து உருடுவதற்கு . காலம் காலமாக இதுவே பிழைப்பு .


ems
டிச 25, 2025 16:06

ஓட்டுநர் கைது.... அதிர்ச்சி தருகிறது... இந்த பேருந்தை பராமரிக்காமல் விட்ட அனைத்து அன்பர்களும் கைது செய்யப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை