உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராய வியாபாரிகளுக்கு அரணாக செயல்படும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

சாராய வியாபாரிகளுக்கு அரணாக செயல்படும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' மக்களுக்கு அரணாக செயல்பட வேண்டிய தி.மு.க., அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.கடந்த 3ம் தேதி மதுரையில் நீதிப் பேரணியில் பங்கேற்க சென்ற திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., மகளிர் அணியினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை பார்க்க சென்ற திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் பழனி கனகராஜ்,அருகில்இருந்த தனியார் மதுபானக் கூடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்று, சட்டவிரோதமாக அங்கு மதுபானம் விற்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு போலீசாரை விமர்சனம் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o7btxz9y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சம்பவம் தொடர்பாக மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, ஊழியர்களை தாக்கியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பழனி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பழநி கொடைக்கானல் சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தனியார் மதுக்கடையைக் காலை 8 மணிக்கே திறந்து வைத்து மது விற்பனை செய்ததை பா.ஜ.,வின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ், ஊடகங்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தியதற்காக அவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்று அவசர அவசரமாகக் கைது செய்திருக்கிறார்கள். இந்த கைது சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களுக்கு அரணாகச் செயல்பட வேண்டிய தி.மு.க., அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகக் காவல்துறையும் தி.மு.க.,வின் ஒரு பிரிவு போல் செயல்படாமல் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

pmsamy
ஜன 06, 2025 12:15

விளம்பரம் கிடைக்கும் உனக்கு


Barakat Ali
ஜன 06, 2025 10:27

அந்தக் குடும்பத்தில் யாரும் சாராய யாவாரத்தில் ஈடுபடலையா ???? அதைக்கேளுங்கண்ணா ....


Matt P
ஜன 06, 2025 09:41

சாராயா வியாபாரிகளே அவர்கள் என்கிறபோது அவர்களுக்கு ஏன் அரண் தேவை?


Sampath Kumar
ஜன 06, 2025 09:21

நீ வந்து அவனுகளுக்கு மாடி வீடு கட்டி கொடு யாரு வேண்டாம் என்கிறான்


பேசும் தமிழன்
ஜன 06, 2025 08:10

திமுக எதிர்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எத்தனை முறை போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி இருப்பார்கள் ....ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆன பிறகும் ...சாரயகடைகளை மூட ...ஒரு சிறு துறும்பையும் கிள்ளி போடவில்லை ....மக்கள் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன ???


sankar
ஜன 06, 2025 07:11

தவறு செய்தவனை விடுத்து, குற்றம் சொன்னவர் கைது, சூப்பர் சார். மேலிட ஆணையை சிறப்பாக நிறைவேற்றும் காவல்துறையின் ஸ்காட்லான்டு நுண்ணறிவு, மெய்சிலிர்க்க வைக்கிறது.


N.Purushothaman
ஜன 06, 2025 06:53

ஏன் இவ்வளவு அடக்குமுறை? விதி மீறலை சொன்னாலே கைதா? அரசும் அரசு தரப்பும் இதை நேர்மையாகத்தானே எடுத்து கொள்ள வேண்டும்? அப்படி செய்தால் தானே விதிமீறல்களை அரசும் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தி நல்லாட்சி வழங்குகிறது என்கிற நிலைப்பாடு உருவாகும் ....அதை விடுத்து புகார் சொல்பவர்களை கைது செய்து அவர்கள் மேல் வழக்கு தொடுத்து மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்? காவல்துறையை இயக்குவது யார்? ரஷ்ய ஸ்டாலினுக்கு நிகரான கொடுங்கோல் ஆட்சியை விடியா முதல்வர் கொடுத்து கொண்டு இருக்கிறார் ....


N.Purushothaman
ஜன 06, 2025 06:46

சமச்சீர் கல்வியறிவு பெற்ற திருட்டு திராவிடனுங்க சமூக நீதியை காப்பாத்த நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை எல்லாம் நாங்க கண்டுக்கிட மாட்டோம் ...


raja
ஜன 06, 2025 06:20

ஐயோ ஹையோ ... சாராய வியாபாரிகள் தான் அரசையே. நடதுறாங்கன்னு தெரியாம இவரு ஒருத்தரு...


Mani . V
ஜன 06, 2025 06:11

அந்த திமுக வுக்கு பாதுகாப்பாக செயல்படுவது நம்ம பாஜக தான் பாஸ்.


பேசும் தமிழன்
ஜன 06, 2025 08:13

... பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.... பொய் சொல்லலாம் ஆனால் இப்படி ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.


சமீபத்திய செய்தி