உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ்சில் பட்டாக்கத்தி தாக்குதல் அண்ணாமலை கண்டனம்

பஸ்சில் பட்டாக்கத்தி தாக்குதல் அண்ணாமலை கண்டனம்

சென்னை: அரசு பஸ்சில் இரண்டு பேர் சேர்ந்து, பட்டாக்கத்தியால் ஒருவரை தாக்கும் வீடியோவை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது குறித்து, அவரது அறிக்கை: அரசு பஸ்சில் பட்டப்பகலில் பட்டாக்கத்தியால் தாக்கும் சம்பவம் நடக்கிறது. இதுதான் தமிழகத்தில், தி.மு.க., அரசின் சட்டம் - ஒழுங்கு நிலை. இன்று, பொது இடங்களில் பாதுகாப்பு என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இது, கனவாக மாறி வருகிறது. கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சி, தமிழகத்தை, 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்று விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 31, 2025 06:46

அண்ணாமலை சார் ...பஸ்சில் பட்டாக்கத்தி தாக்குதல் என்று சொல்லாதீர்கள் பஸ்ஸில் முறைகேடான சண்டை பயிற்சி ,,,முறைகேடான வீர விளையாட்டு... என்று சொல்லுங்கள் ..


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 31, 2025 06:27

அரசு பஸ்சில் பட்டப்பகலில் பட்டாக்கத்தியால் தாக்கும் சம்பவம் நடக்கிறது..சங்ககால தமிழர்களின் வீரத்தை மீட்டெடுக்க டிராவிடமாடல் செய்யும் முயற்சியை விமர்சிக்காதீர்கள் ... இதை வன்முறையாக பார்க்காதீர்கள் ...பார்த்தால் மதவாதம் உள்ளே புகுந்து விடும் ...


நிக்கோல்தாம்சன்
ஜூலை 31, 2025 06:16

அப்படியே அந்த 23ம் படத்தை நம்முன்னே நிறுத்துகிறான் ஒரு பிட்டுபேப்பர் ஆட்சியாளன்


சமீபத்திய செய்தி