மேலும் செய்திகள்
'விடிவுகாலம் பிறந்துடும்!'
03-Dec-2024
தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணா மலை, தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என கூறியுள்ளார். தமிழகத்தில் எவ்வளவோ பேர் ஷூ, செருப்பு அணியாமல் தினந்தோறும் நடந்து செல்கின்றனர். அதில் ஒருவராக தன்னையும் இருத்திக் கொள்ள விழைந்த அண்ணாமலை, அதை ஒரு பெரிய ஆர்ப்பாட்டம், போராட்டம் என அறிவித்திருக்கிறார். இப்படியெல்லாம் புதுசு புதுசா எதையாவது கண்டுபிடிப்பதில் அண்ணாமலை கில்லாடி. அதுமட்டுமல்ல, தி.மு.க.,ஆட்சியை அகற்றாமல் விடமாட்டேன், அதுவரை ஷூ அணியமாட்டேன் என்றும் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. இனிமேல் தன்னால் எக்காலத்திலும் ஷூ அணிய முடியாது என்பதை மறைமுகமாக தெரிவிக்கவே அப்படி சொல்லியிருக்கிறார். பொன்முடி, தமிழக அமைச்சர்
03-Dec-2024