உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர் எல்.முருகனை மோசமாக கையாண்ட போலீசார்: டி.ஜி.பி.,க்கு அண்ணாமலை கடிதம்

மத்திய அமைச்சர் எல்.முருகனை மோசமாக கையாண்ட போலீசார்: டி.ஜி.பி.,க்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: '' திருப்பரங்குன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனை தடுக்க முயற்சித்ததுடன், அவரை போலீசார் மோசமாக கையாண்டனர்,'' என டி.ஜி.பி.,க்கு அனுப்பிய கடிதத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக அந்த கடிதத்தில் அண்ணாமலை கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர் முருகன் கடந்த 17 ம் தேதி திருப்பரங்குன்றம் வந்த போது அவரது பாதுகாவலர்களை போலீசார் தவறாக யைாண்டதுடன், அவரை கோவிலுக்குள் நுழைவதை தடுக்கவும் முயற்சி செய்தனர். திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய இரண்டிற்கும் வர மத்திய அமைச்சர் போலீசிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தார். இருந்த போதும், கோவில் வாசலில் அவரை போலீசார் மோசமாக கையாண்டது வருத்தம் அளிக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8v004ni0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனுமதி பெற்றும் தன்னை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம் என மத்திய அமைச்சர் முருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு, கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாக போலீசார் கூறியது இன்னும் வருத்தம் அளிக்கிறது.ஒரு எம்.பி.,யின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ள ஒரு கட்டத்தில், அவர் விரும்பும் இடத்தில் வழிபடும் உரிமையை போலீசார் அப்பட்டமாக தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது பொது மக்கள் இடையே கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது. சமீப நாட்களில் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீப நாட்களாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பீதியடைந்துள்ள பொது மக்கள் இடையே, போலீசாரின் இந்த நடவடிக்கை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு எம்.பி.,யும், மத்திய அமைச்சரே இப்படி அவமானப்படுத்தப்பட்டால், சாதாரண மக்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பி உள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

netrikannan
பிப் 20, 2025 08:41

முஸ்லீம் மக்களுக்கு மட்டும் தான் திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி.


Siva Balan
பிப் 19, 2025 23:22

தமிழக அரசு பாகிஸ்தானின் கைகூலியாக மாறிவிட்டது.


Rajathi Rajan
பிப் 19, 2025 19:56

இவர் என்ன எம்பி எம்பி குதித்தா எம்பி ஆனார், கொல்லைப்புற வழில வந்தால் இவ்வளவு தான் ..... கிடைக்கும் , அதுக்கு ஆட்டுக்குட்டி ஏன் எம்பி எம்பி கொதிக்குது???


visu
பிப் 19, 2025 19:17

மத்திய அமைச்சரை அடித்து உதைத்தால் கூட பிஜேபி அரசு கடும் நடவடிக்கை எடுக்காது.கோலெடுத்தால் தான் குரங்காடும் என்பார்கள். இதுகூட தெரியாமல் மத்திய அரசு இருந்தால் இப்படித்தான் ...


Dharmavaan
பிப் 19, 2025 18:57

எல்லாவற்றுக்கும் காரணம் மோடியின் மென்மையான அணுகுமுறையே . ஆளுநரும் ,பிஜேபி மந்திரிகளும், பிரதமரும் தூஷிக்கப்பட காரணம் தண்டனை கடுமையானால்தான் பயப்படுவார்கள்


M Ramachandran
பிப் 19, 2025 17:37

தமிகத்தில் சட்டம் அழுகி நாற்றம் எடுக்குது


venugopal s
பிப் 19, 2025 17:35

பாத்ரூமில் வழுக்கி விழ வில்லையா ?


Iniyan
பிப் 19, 2025 15:56

இந்த மிக்சர் முருகன் ஒரு தண்டம். ௮வரை வைத்து கொண்டு பா ஜா க வளர்ச்சி காணாது. அண்ணாமலை உண்மையான தலைவன்


pmsamy
பிப் 19, 2025 15:19

அண்ணாமலை சவுக்கால அடிச்சுக்கோடா கடிதம் எல்லாம் வேஸ்ட்


Bala
பிப் 19, 2025 17:11

சாமி உன்னுடைய கருத்திலேயே நீ குடும்ப கொத்தடிமைனு தெரியுது. நீ போய் ஓசி பிரியாணி அடி


Bala
பிப் 19, 2025 15:13

பட்டியல் இனத்தை சார்ந்த கூட்டணி கட்சி தலைவர்களையும், மத்திய மந்திரியையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் கூட்டம் இந்த திராவிட மாடல். ஒரே தீர்வு 2026 சட்டசபை தேர்தல். தமிழக மக்கள் தங்களுடைய வாக்குகளால் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எதிர்க்கட்சிகளில் எது பலமான கூட்டணியோ அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்


Rajathi Rajan
பிப் 20, 2025 11:33

கொத்தடிமையே உன்னால் மட்டும் இல்ல உன் அப்பாவே நினைத்தாலும் திமுக வை வீட்டுக்கு அனுப்ப முடியாது


முக்கிய வீடியோ