உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமரன் படம் ராணுவத்துக்கு சமர்ப்பணம்; அண்ணாமலை பாராட்டு

அமரன் படம் ராணுவத்துக்கு சமர்ப்பணம்; அண்ணாமலை பாராட்டு

லண்டன்: ராணுவ வீரர்களுக்கும், உயிர் தியாகம் செய்தவர்களுக்கும் அமரன் படம் சமர்ப்பணம் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பாராட்டி உள்ளார்.இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கைவண்ணத்தில், சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் அமரன். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்ட உருவான இப்படம் பலரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந் நிலையில் லண்டனில் உள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அங்கிருந்த படியே அமரன் படத்தை பார்த்துள்ளார். படம் பார்த்த அவர், எக்ஸ் வலைதள பதிவில் அமரனை புகழ்ந்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அந்த பதிவின் விவரம் வருமாறு; அமரன் படத்தை பார்க்க நேர்ந்தது. பல்வேறு தருணங்களில் இந்த படம் மிக முக்கியமான ஒன்று. நமது ராணுவ வீரர்கள் துணிச்சல். தைரியம், நேர்மையின் மூலம் மக்களுக்காக எத்தனையோ தியாகங்களை செய்கின்றனர். ஒரு ராணுவ வீரர் தமது நாட்டுக்காக தம்மையே அர்ப்பணிக்கும் போது, அவரது குடும்பம் அனுபவிக்கும் வேதனையை மிக சிறப்பாக இப்படம் பதிவு செய்துள்ளது.சிலர் என்றுமே நாம் நினைப்பதை விட மிகவும் சிறப்பு உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உடையை பெருமையுடன் அணிந்து விருப்பத்துடன் ஆபத்தை எதிர்கொள்வதே அதற்கு காரணம். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல ஆண்டுகளுக்கு ஊக்கம் தரும் கதை. 2014ம் ஆண்டு நாட்டுக்காக அவர் செய்த தியாகம், நம்மில் ஏதோ ஒன்றை நாம் இழந்துவிட்டது போன்ற உணர்வை தருகிறது. நான் காக்கி சீருடையில் இருந்த அக்காலக்கட்டத்தில் எதிர்கொண்ட உணர்ச்சிகர தருணங்கள் நினைவுக்கு வருகின்றன.ராஜ்குமார் பெரியசாமியின் சிறப்பான இயக்கம், சிவ கார்த்திகேயனின் அபாரமான நடிப்பு, திரை வாழ்க்கையில் வேறு யாராலும் செய்திருக்க முடியாத சாய் பல்லவியின் கதாபாத்திரம், விறுவிறு இசை, ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. படத்தை தயாரித்த கமல்ஹாசனுக்கு நன்றிகள். இப்படம் பணியின் போது உயிரை அர்ப்பணம் செய்த அனைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பணியில் உள்ள வீரர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்கிறது. நமது ராணுவ படைகள் நீடுழி வாழ்க. நீங்கள் தான் சிறந்தவர்கள் என்பதை பெருமையுடன் கூறுகிறோம். படத்தை கொடுத்த அமரன் படக்குழுவுக்கு வாழ்த்துகள்.இவ்வாறு தமது எக்ஸ்வலை தள பதிவில் அண்ணாமலை கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Smba
நவ 04, 2024 15:50

10008 பிரச்சண இரு க்கு அதபாரு ஓரளவு தோரலாம்


BalaG
நவ 04, 2024 23:36

அந்த 10008 பிரச்சனையை விட பாதுகாப்பு முக்கியம். அந்த பாதுகாப்பை நமக்கு தரும் ராணுவத்தை பற்றிய கதைதான் இது. யாருய்யா நீங்கள்ளாம்?


Vijay D Ratnam
நவ 04, 2024 15:08

அமரன் படத்தை அண்ணாமலை திரையில் பார்த்து பாராட்டுதலை தெரிவித்த செய்தியை பார்த்தோம்.


பாமரன்
நவ 04, 2024 11:36

அடடே ஆடு ஸார்... நீண்ட பதிவுன்ன உடனே இன்னிக்கு செம்த்தியா காமெடியா இருக்கும்னு பார்த்தால்... சுருக்கமா முடிஞ்சிடுத்து... இந்த பீஸ் மாதிரி கிடைச்ச சேவை செய்யும் வாய்ப்பிலிருந்து ஓடி வராமல் நாட்டுக்காக உயிரை நீர்த்த வீரனின் வாழ்வை... யாவாராத்துக்காக இருந்தாலும்... காசு போட்டு கஷ்டப்பட்டு யாரோ உருவாக்கினதை பத்து பைசா செலவில்லாம பார்த்துட்டு இவர் நோகாமல் நாட்டுக்கு அர்ப்பனிப்பாராமாம்... பகோடாஸ் கூட இந்த காமெடிக்கு சிரிப்பாய்ங்க... படிக்க போறேன் அதனால் அரசியல் அவியல் பண்ண டைம் இல்லைன்னு எங்களுக்கு நகைச்சுவை கம்மி பண்ணிட்டு அங்க என்ன சினிமா வேண்டி கிடக்கு... யூ ப்ளடி ராஸ்கோலு... ஒழுங்கா படிச்சி கிழிச்சிட்டு வரவோனும்... இங்கிட்டு காமெடி இல்லாமல் காஞ்சி கெடக்கோம்ல....


படித்தவன், யாதும் ஊரே
நவ 04, 2024 13:16

ராணுவத்தைப் போற்றும் ஒரு திரைப்படம். அதை பாராட்டி ஒரு தேசப்பற்றாளரின் பதிவு. பதிவு செய்தவர் மேல் மோசமான வார்த்தைகளால் ஒரு விமர்சனம். அண்ணாமலை அவர்களின் பேச்சில் ஒவ்வொன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவார்ந்த வார்த்தைகள். அண்மை காலத்தில் இது போன்றதொரு நேர்மையான அறிவுபூர்வமான வாதங்களை வைக்கக்கூடிய அரசியல்வாதியை தமிழகம் கண்டதில்லை. சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு அனுமதி மறுக்கும் நீங்கள் இதை அனுமதித்தது எப்படி. ஆச்சரியமாக உள்ளது.


N Sasikumar Yadhav
நவ 04, 2024 13:52

வேலைவெட்டியில்லாமல் உங்களுக்கு 200 ரூபாய் கொடுக்கும் திருட்டு திராவிட மாடல் தலைவர் போய் பார்த்தாரே அதைப்பற்றியும் பேசுங்க திருட்டு திராவிட மாடல் ஊ....பிஸே


Raa
நவ 04, 2024 17:53

பாமரன் என்ன சொல்லவருகிறார் என்று சரியாக சொல்பவர்களுக்கு அமரன் பட டிக்கெட் இலவசம். கோவத்தில் உளறுது என்ற பதில் முன்னமே சொல்லிவிட்டதால் வேறு ஏதாவது ட்ரை பண்ணவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை