உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜியின் பதவியை நீக்க வேண்டும்: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

செந்தில் பாலாஜியின் பதவியை நீக்க வேண்டும்: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: ஜாமின் பெறுவதற்காக, பொய்சொல்லி சுப்ரீம் கோர்ட்டை ஏமாற்றிய செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.அண்ணாமலை அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lvnd1oaz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமின் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமினில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, சுப்ரீம் கோர்ட் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று சுப்ரீம் கோர்ட் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜாமின் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, சுப்ரீம் கோர்ட்டையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ray
ஏப் 13, 2025 17:28

ஜெராக்ஸ் காப்பி அனுப்பி புத்திசாலித்தனத்தைக் காட்டி ஏமாத்தியதைவிடவா கேவலம்.


Ray
ஏப் 13, 2025 17:26

ஆளுனர்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா நீநீநீநீநீநீநீநீக்கிடமாட்டாரா?


Venkatesan.v
மார் 25, 2025 04:37

ஆட்டு குட்டிக்கு அவன பார்த்து எவ்வளவு பயம்..... செந்தில் பாலாஜி என்கிற பெயர் கேட்டாலே சும்மா அதிருதில்ல. அவன் ஒரு மொள்ளமரி என்று அனைவரும் அறிந்ததே... ஆனா, ஆடு யேன் இவன பாத்து பயந்து சாவுறான்


Ray
ஏப் 14, 2025 07:50

மொள்ளமாரி / மொல்லமாரி என்றால் பேச்சை மாற்றிப் பேசுபவன் அல்லது பொய் சொல்பவன் என்று பொருள். இப்போ உலகறிந்த மொள்ளமாரி யாருன்னு புரிஞ்சு போச்சு. தங்கமலை ரகசியம்னு ஒரு படம் வந்துச்சே.


K.n. Dhasarathan
மார் 24, 2025 21:45

அண்ணாமலை முதலில் ஒரு விஷயம் செந்தில் பாலாஜி இன்று சட்டப்படி ஜாமினில் வெலியில் இருக்கிறார், சட்டப்படி விசாரணை கைதி யாக ஒன்றரை வருடம் இருந்தார், இவ்ளவு நாளாக குற்றங்களை நிரூபிக்க முடிந்ததா ? என்ன கழட்டினீர்கள் ? என்ன ஆதாரம் காட்டினீர்கள் ? பாலாஜி அவராக ஒத்துக்கொண்ட குற்றங்களை தான் இன்னும் பாட்டு பாடினீர்கள், நீங்கள் என்ன நிரூபித்தீர்கள் ? ஒன்றும் இல்லை, வெறும் வடை சுட்டது மட்டும்தான், அவர்தான் குற்றம் செய்ய வில்லை என்கிறாரே குற்றம் செய்தால்தான் தம்பி தண்டனை சும்மா வயி சவடால் விட்டால் தண்டனை கொடுக்க மாட்டார்கள். பதவி நீக்க கோரா முடியாது அம்பி


Ramesh Sargam
மார் 24, 2025 20:50

திமுக ஆட்சியையே நீக்கவேண்டும் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்.


ரத்னம்
மார் 24, 2025 20:43

க்கும் நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.


vbs manian
மார் 24, 2025 19:22

இவர் சொன்னார் என்பதற்காகவே அது நிச்சயம் நடக்காது. பொது வாழ்வின் பாதாளம்.


மாறண்
மார் 24, 2025 18:15

ஏதோ டைம் பாஸ்


முக்கிய வீடியோ