உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு

அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் உறுதி செய்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த, இரு ஆண்டுகளிலேயே, விஜய் ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார். அதை பின்பற்றி தமிழக அரசியலில், புதிய பாதையில் பயணிக்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இது குறித்த விபரத்தை, பா.ஜ., தலைமைக்கு தெரிவித்து, கட்சியிலிருந்து விலகுவதற்காக, கடந்த 1ம் தேதி, டில்லி சென்றார்.பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய அமைப்பு பொது செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, கட்சியில் இருந்து விலகும் முடிவை தெரிவித்தார். தற்போது பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு அண்ணாமலை சென்னை திரும்புகிறார்.யார் இந்த அண்ணாமலை?தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கே.அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றினார். கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.,வின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் அழைப்பை ஏற்று, போலீஸ் பதவியை ராஜினாமா செய்து, 2020ல் பா.ஜ.,வில் இணைந்தார்.

2021ல்...

கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும், அதே ஆண்டு ஜூலையில், தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார். மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்தும், நடைபயணம் சென்றும், பா.ஜ.,வை பலப்படுத்தினார்.

2024ல்...

கடந்த, 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., மேலிட தலைவர்கள் விரும்பினர். அதற்கு, அண்ணாமலை உடன்படவில்லை. அதனால், பா.ஜ., தனி அணி அமைத்து போட்டியிட்டு தோற்றது; கோவையில் போட்டியிட்ட அண்ணாமலையும் தோல்வியை தழுவினார்.

2025ல்...

சட்டசபை தேர்தலில் கூட்டணி சேர, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் வைத்த நிபந்தனை காரணமாக, தமிழக பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை, 2025 ஏப்ரலில் நீக்கப்பட்டார்; நயினார் நாகேந்திரன், அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

2026ல்...

பிறகு கட்சி பணிகளில் பெரிய ஈடுபாடோ, ஆர்வமோ காட்டாமல், அண்ணாமலை ஒதுங்கியே இருந்த நிலையில் தற்போது பாஜவில் இருந்து விலகி உள்ளார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!அண்ணாமலை ராஜினாமா ஏற்பு: தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புலைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Baskar
ஜூன் 05, 2026 18:53

பிஜேபி கொழப்பினதுவே நம்ம தமிழ் மக்கள் தலைவர்கள் தாண்டா . ஏன் கட்சியை திட்டறீங்க ?


Suppan
ஜூன் 05, 2026 16:38

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாஜக தலைமையின் தவறுதான். ஆனால் பாஜகவுக்கு திட்டமிட்டு திராவிடக்கட்சிகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகளை அண்ணாமலை எடுத்த முடிவு சரி


V RAMASWAMY
ஜூன் 05, 2026 14:59

திரு அண்ணாமலை போன்ற படித்த அறிவுள்ள இளைஞரை பா ஐ க தமிழகத்திற்கு சரியான முறையில் பயன்படுத்தி கட்சியை வேரூன்றவைக்க தவறிவிட்டது அந்தக் கட்சி. இது அந்தக்கட்சிக்குத்தான் பெருத்த நஷ்டம். அந்தக்கட்சி தென் மாவட்டங்களில் நல்ல திறமை மிக்க வல்லமையான அந்தந்த மாநில மொழி பேசும் பேச்சாளர்களைக் கொண்டு அந்தக்கட்சியின் செயல்பாடுகளை மக்கள் மனங்களில் பதியும்படி செய்யத் தவறிவிட்டார்கள். இது பெரும் இழப்பு அவர்களுக்கு. பொய்யோ புரட்டோ தி மு க வில் இருக்கும் பேச்சாளர் களைப் போன்றவர்களை இனியாவது அடையாளம் கண்டு பா ஜ க கட்சியை தென் மாநிலங்களில் வளர்க்க பெருமுயற்சி எடுத்தால் தான் நல்லது.


விருமாண்டி
ஜூன் 06, 2026 10:27

மே. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி எம்எல்ஏ என்று எல்லாரையும் பாஜக லஞ்ச மழையில் குளிக்க வைத்து கூண்டோட விலைக்கு வாங்கியதை போல இங்கேயும் செய்தால் மட்டுமே அண்ணாமலைக்கு சட்டமன்றத்தில் நுழையவே முடியும். தமிழ்நாட்டில் அது முடியவே முடியாது.


nms
ஜூன் 05, 2026 14:32

அவப்பெயரை தேடிக்கொண்டது பி ஜே பி. எந்தஒரு காலத்திலும் தமிழ் நாட்டில் பி ஜே பி தலை காட்ட முடியாது. அண்ணாமலை ஒருவரால்தான் தமிழ் நாட்டில் பி ஜே பி பற்றி மக்களுக்கு தெரிந்து இருந்தது.


DINESH ARAVINDH B
ஜூன் 05, 2026 14:30

பாஜக விற்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய பின்னடைவு இது. அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கியதில் இருந்து பாஜக விற்கு சறுக்கல் ஆரம்பித்து விட்டது. இனி பாஜக வலுவாக கால் ஊன்ற 15 வருடங்கள் ஆகும்.


DINESH ARAVINDH B
ஜூன் 05, 2026 14:25

பா.ஜ.கவிற்குதான் நஷ்டம். இனி தமிழ்நாட்டில் பா.ஜ. க மீண்டும் வலுவாக கால் ஊன்றுவதற்கு சுமார் 15 வருடங்கள் ஆகும்.


A.Kennedy
ஜூன் 05, 2026 14:12

அண்ணாமலை அவர்கள் பிஜேபியிலிருந்து விலகினார் என்பது அல்ல, அவர் பிஜேபியிலிருந்து விலக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் தமிழிசை, வானதி போன்றோர் இஷ்டத்துக்கு பேட்டி அளிப்பது, அண்ணாமலை அவர்களை மதிப்பதில்லை என்பதே உண்மை. கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு யாரை ஊடகங்களுக்கு பேச பிரிதிநிதியாக நியமித்து இருக்கிறார்களோ அவர்கள் தான் பேச வேண்டும். வேட்பாளர் பெயரே அரிவிக்காத நிலையில் தமிழிசை அவர்கள் எடப்படியார் வாகனத்தில் ஏறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இனியாவது இவர்கள் திருந்த வேண்டும்.


sanjit
ஜூன் 05, 2026 13:54

how can we trust Annamalai, can he give statement that at any cost he will not go alliance with bJP in future?


Raman
ஜூன் 05, 2026 20:09

Why not? Annamalai and Modi, the best combo..whats the problem...its people with your mindset spoiled TN


V RAMASWAMY
ஜூன் 06, 2026 14:50

He has not said he is against BJP in fact he praises even now BJP and Mr Modi but for certain differences of opinion. BJP is a very big National Party which has to take care of interest of all States. Of course what Mr Annamal has quoted as reasons for quitting BJP are sensible and understandable. Perhaps BJP may and should think about them. Anyways everything is for good in the light of TVK following the footsteps of the previous Government particularly with respect anti Hindu stand. If TVK does not correct themselves, TN has a better native and hope in Mr Annamalai.


அம்பி குமார் பாலக்காடு
ஜூன் 05, 2026 13:28

டெல்லி B J P எடுத்த சரியான முடிவு கட்சியில் இருந்து கொண்டு கட்சியில் குடைச்சல் கொடுக்கும் ஒருவரை கட்சியில் வைத்து இருப்பது விட்டு வைப்பது கட்சிக்கு நல்லது இல்லை ஜெயலலிதா ஜி அதிமுக வில் அண்ணாமலை மாதிரி இருந்தால் ஜெயலலிதா ஜி உடனே கட்சியை விட்டு நீக்கி இருப்பார் கட்சிக்குள் இருந்து கொண்டு குடைச்சல் கொடுப்பவரை பிரச்சனை செய்பவரை கட்சியில் வைத்து இருக்க கூடாது டெல்லி B J P சரியான முடிவு எடுத்தது டெல்லி B J P க்கு வாழ்த்துக்கள்


தியாகு
ஜூன் 05, 2026 14:07

கட்சியில் இருந்து கொண்டு....ஹி...ஹி...ஹி...தமிழ்நாட்டில் பாஜக என்ற ஒரு கட்சி இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும்.


Gokul
ஜூன் 05, 2026 14:38

அண்ணாமலையை தலைமை நீக்க வில்லை. அவர் தான் ராஜினாமா செய்தார். இரண்டிற்கும் பெரிய வித்யாசம் உள்ளது.


அம்பி குமார் பாலக்காடு
ஜூன் 05, 2026 15:33

அண்ணாமலையை B J P ஓரம் கட்டி வைத்தது நாமாக ( B J P ) அண்ணாமலையை கட்சியை விட்டு நீக்க வேண்டாம் அண்ணாமலை கோபப்பட்டு அவராக கட்சியை விட்டு போகட்டும் என்று தான் டெல்லி B J P ஏற்கனவே முடிவு செய்தது இது நிர்வாகம் செய்பவர்களின் ஒரு விதமான அணுகுமுறை அண்ணாமலையை கட்சியில் வைத்து இருந்தால் B J P கட்சிக்கு மிக பெரிய ஆபத்து டெல்லி B J P சரியான முடிவு எடுத்தது ராஜினாமா வை ஏற்றது டெல்லி B J P க்கு வாழ்த்துக்கள்


Raman
ஜூன் 05, 2026 20:16

Mr Ambi You got it Totally wrong. We are all huge PM Modi supporters. However in TN, you need people like Annamalai to take on pseudo dravida groups. TN BJP didnt allow Annamalai to work efficiently and centre couldnt do much to put out old, outdated bjp politicians who continue to be backing DMK or admk.. Under these circumstances not many options for Annamalai. Hopefully in future Annamalai in TN and BJP at centre would be great. Will happen. Ram


Narasimhan
ஜூன் 05, 2026 13:21

உ பி கள் தனித்து விடப்பட்டுள்ளதால் புலம்போ புலம்பு தான். எல்லோரும் ஆந்திராவுக்கு ஓடி விடுங்கள்


சமீபத்திய செய்தி