உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேரம் வரும் போது கூட்டணி குறித்து அறிவிப்பு: அண்ணாமலை

நேரம் வரும் போது கூட்டணி குறித்து அறிவிப்பு: அண்ணாமலை

சென்னை: '' சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. நேரம் வரும் போது, தே.ஜ., கூட்டணியில் யார், யார் இருப்பார்கள். எந்தெந்த கட்சி இருக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னையில் அவர் அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது: புதிய கல்விக் கொள்கைக்காக தமிழகம் முழுதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கப் போகிறோம். ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை ஜனாதிபதியிடம் அளிக்கப் போகிறோம்.

பொதுக்கூட்டம்

இதற்காக மார்ச் 23ல் திருச்சியில் மார்ச் 29 ல் நெல்லையில்ஏப்., 5 ல் வேலூரில்ஏப்.,12 ல் காஞ்சிபுரத்தில்ஏப்.,19 ல் சேலத்தில்ஏப் 26 ல் சென்னையில்மே 3 ல் மதுரையில்மே 11 ல் கோவையில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.மே 11 ல் நடக்கும் கூட்டத்தை பார்த்து முதல்வரே முடிவை மாற்றுவார் என நம்பிக்கை உள்ளது.போட்டி அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. மக்களின் விருப்பத்திற்கு நேர்மாறாக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர் என்பதை காட்ட சமுதாய இயக்கமாக எடுத்துச் செல்கிறோம். 2026 ல் தமிழகத்தில் புதிய ஆட்சி வரும் போது புதிய கல்விக் கொள்கை அடிப்படை விஷயமாக கொடுக்கப்பட வேண்டும். தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும் போது இது நடக்கும்.

அவசியம் என்ன

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு அமைய வேண்டும் என்பது காங்கிரசின் நிலைப்பாடு. இதனை பிரதமர் மோடி கடுமையாக எதிர்த்து உள்ளார். எதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது என புரியவில்லை. மத்திய அரசு எதையும் சொல்லவில்லை. விகிதாச்சார அடிப்படையில் என்ற வார்த்தையை அமித்ஷா பயன்படுத்தி உள்ளார். ஆனால், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

ராகுலுக்கு போன் செய்திருந்தால், இந்த கூட்டம் நடந்திருக்காது. தொகுதி மறுசீரமைப்பை வாஜ்பாய் தான் முதலில் தள்ளிவைத்தார். முதல்வர், தனது அறிக்கையில் வாஜ்பாய் பெயரை சொன்னால் குறைந்துவிடுவாரா? ஏன் 2000 ம் ஆண்டில் வாஜ்பாய் தான் செய்தார் என சொல்ல மறுக்கிறார். அந்தளவு அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறதா? முதல்வர் நடத்திய அனைத்து கட்சி கூட்டம் முகம் சுழிக்க வைக்கிறது. முக்கிய விஷயம் பற்றி பேசாமல் இருப்பதன் காரணம் என்ன?. மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவதற்கு தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. மத்திய அரசில் யாரும் சொல்லாத போது, இந்த கூட்டத்தில் பங்கேற்று எப்படி அங்கீகாரம் கொடுக்க முடியும்?.

அடிப்படை வேலை

ராஜ்யசபா சீட் குறித்து அ.தி.மு.க., தே.மு.தி.க., தான் முடிவு செய்ய வேண்டும். அதனை நாங்கள் வெளியில் இருந்து பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கட்சி அடிப்படை வேலை பார்க்கிறோம். அதில் வேகம் எடுத்து உள்ளோம். தே.ஜ., கூட்டணி எப்படி இருக்கும். எந்தெந்த தலைவர்கள், கட்சிகள் இருக்கும் என நேரம் வரும் போது சொல்கிறோம்.

காலத்தின் கட்டாயம்

தமிழக பா.ஜ., மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு ஆகியன காலத்தின் கட்டாயம். பல ரயில்களுக்கு வேலு நாச்சியார் உள்ளிட்ட பல தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. அந்த ரயில்களை முதல்வர் ஏன் பார்க்கவில்லை. பார்லிமென்டில் செங்கோலை நிறுவும் போது தி.மு.க., பங்கேற்கவில்லை. அப்போது எம்.பி.,க்களை ஏன் அனுப்பவில்லை?

விமர்சனம்

காசி தமிழ் சங்கமத்தின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரோ, அவரது பிரதிநிதி யாரும் பங்கேற்கவில்லை. சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போதும் பிரதமர் மோடி நேரடியாக அழைப்பு விடுத்தும், ஸ்டாலின் பங்கேற்கவில்லை.காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., அங்கம் வகித்த போது தமிழ் பெயர்களில் ஏன் ரயில்கள் கொண்டு வரப்படவில்லை. அறைகளில் அமர்ந்து கொண்டு பிரதமர் மோடி, பா.ஜ, வை விமர்சனம் செய்யவே முயற்சி செய்கிறார்.

தமிழில் பெயர்

காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா யோஜனா, ராஜிவ் யோஜானா என்ற பெயரில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது தி.மு.க., ஏற்றுக் கொண்டது. நாங்கள் எந்த தலைவரின் பெயரையும் பயன்படுத்தவில்லை. பிரதமரின் பெயரை மட்டும் தான் பயன்படுத்தினோம். இதனை தமிழகத்தில் முதல்வர் காப்பியடிக்கிறார்.தமிழகத்திற்கு வரும் திட்டங்கள் தமிழில் தான் வருகிறது. விவசாயிகள் ஊக்கத்தொகை, செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை முதல்வர் ஏன் விளம்பரப்படுத்தவில்லை. மக்கள் மருந்தகம் என தமிழில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

கட்சி தலைவர்களுடன் சந்திப்பு

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கும் கடிதம் எழுதப் போகிறோம். சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற வித்தியாசம் இல்லாமல், முதல்வர் அழைப்பு விடுத்த 45 கட்சிகளுக்கும் கடிதம் எழுதுவோம். அக்கட்சி தலைவர்களை பா.ஜ., தலைவர்கள் சந்திப்பார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சந்தேகம், தவறான புரிதல், அச்சம் இருந்தால், அவற்றிற்கு தனித்தனியாக விளக்குவோம். தி.மு.க., தெரிவித்த அச்சத்தை விளக்க தயாராக இருக்கிறோம். கமல், இன்று தனக்கான ராஜ்யசபா சீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

கையெழுத்து இயக்கம் துவக்கம்

இதனைத் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை அண்ணாமலை துவக்கி வைத்தார். முன்னாள் கவர்னர் தமிழிசை முதலில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அண்ணாமலையும் கையெழுத்து போட்டார். கையெழுத்து தொடர்பான இணையதள இணைப்பையும்( http://puthiyakalvi.in ) பா.ஜ., வெளியிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
மார் 06, 2025 09:44

யாருக்கும் கொள்கைன்னு ஒண்ணு கிடையாது. தேர்தல் வரும்போது கண்டவனுடன் கூட்டணி வெச்சு ஜெயிக்கிறது தான் கொள்கையே.


தாமரை மலர்கிறது
மார் 05, 2025 22:29

தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்தால் போதும். எடுபிடியை எப்ப கூப்பிட்டாலும் வருவார். வராவிடில், ரைடு வரும்.


DHURVESH
மார் 05, 2025 22:12

இருக்கலாம் ஆனா நேரம் சரி இல்லையே


வரதராஜன்
மார் 05, 2025 21:48

நண்பர்களே தமிழ்நாடு அமைச்சர் ஒருவர் இந்திய செய்தி சேனலுக்கு மும்மொழி கல்வி பற்றி கேட்ட கேள்விகளுக்கு அவ்வளவு அருமையா பதில் சொல்லி இருக்காரு நடுலையாளர்கள் அதை கேளுங்க பதில் சொன்ன மினிஸ்டர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பிஜேபி காரங்க இதை கேளுங்க அப்பா வார் உங்களுக்கு ஏதாவது கொஞ்சம் புலப்படுதான் பாருங்க


naranam
மார் 05, 2025 20:23

அப்படியே நீங்க கூட்டணி சேர்ந்துட்டாலும் அதற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது. ஏனென்றால் உங்களுக்கும் பழனிக்கும் ஏழாம் பொருத்தம். நம்பகத்தன்மை மிக மிகக் குறைவு.


orange தமிழன்
மார் 05, 2025 20:17

தயவு செய்து தீயமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்புங்க.....


Narayanan Muthu
மார் 05, 2025 20:09

நேரம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்பு என்பதன் மூலம் எந்த கட்சிகளை படுகுழியில் தள்ள போகிறோம் என்பதை முடிவு செய்வார்கள்.


மாலா
மார் 05, 2025 19:00

குழிதோண்டிமூடாம இருந்தாசரி


கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர் ஓங்கோல்
மார் 05, 2025 19:56

கண்டிப்பாக திமுகவை குழி தோண்டி மூடி விடுவார் பாஜக தலைவர் அண்ணாமலை.


surya krishna
மார் 05, 2025 18:40

ADMK BJP PMK NTK DMDK TMC alliance will make changes in tamilnadu politics


Narayanan Muthu
மார் 05, 2025 20:07

கனவு காண்பது அவரவர் உரிமை.


அப்பாவி
மார் 05, 2025 18:29

இப்போ ஆட்சியில் இருக்கிறவங்களைப் பாக்கும் போது வாஜ்பாய்க்கு கோவில் கட்டி கும்பிடலாம்..


Nagendran,Erode
மார் 05, 2025 19:58

அப்புசாமி அப்படியே வழக்கமா அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க மறந்துட்டீங்க


புதிய வீடியோ