உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நலத்துறை நலத்திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு

சமூக நலத்துறை நலத்திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு

கோவை:சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு, குடும்பத்தின் வருவான உச்சவரம்பு, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசாணையில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள, பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டினை உறுதி செய்யும் நோக்கில், சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கான, ஆண்டு குடும்ப வருவாயின் உச்ச வரம்பு, 72 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமூகநலத்துறையின் கீழ், செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டங்களில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித்திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் ஆகிய, மூன்று திருமண நிதி உதவி திட்டங்களுக்கும், வருமான உச்சவரம்பு ஏற்கனவே முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.22 கோடியில் 4 சுற்றுலா மாளிகை

கடலுாரில் 6 கோடி ரூபாய், காஞ்சிபுரத்தில் 3 கோடி ரூபாய், திருவள்ளூரில் 3 கோடி ரூபாய், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 9.90 கோடி ரூபாய் என, 21.90 கோடி ரூபாயில் புதிய சுற்றுலா மாளிகைகள் கட்டப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 2.50 கோடி ரூபாய், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 5 கோடி ரூபாய், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 கோடி ரூபாய் என, 9.50 கோடி ரூபாயில், மூன்று ஆய்வு மாளிகைகள் அமைக்கப்படும்.- வேலு, பொதுப்பணித் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !