உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகாவிஷ்ணு மீது மற்றொரு வழக்கு பதிவு

மகாவிஷ்ணு மீது மற்றொரு வழக்கு பதிவு

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை கோரி, திருவொற்றியூரை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்க மாநில தலைவர் சரவணன், 34, திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில், பொய் சாட்சியம் புனைதல், பொய் சாட்சியம் என தெரிந்தே அதை பயன்படுத்துதல், அரசு ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்தல், மாற்றுத்திறனாளியை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுதல், மிரட்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ், போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர். இதேபோல, வடிவேலன் என்ற மாற்றுத்திறனாளி, முத்தியால்பேட்டை காவல் நிலையத்திலும், மகாவிஷ்ணு மீது நேற்று புகார் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி