உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஒரு சம்பவம்; தி.மு.க., நிர்வாகியைக் குற்றம் சாட்டும் அண்ணாமலை!

மீண்டும் ஒரு சம்பவம்; தி.மு.க., நிர்வாகியைக் குற்றம் சாட்டும் அண்ணாமலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நர்சிங் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சந்தேகத்திற்குரிய நபரைக் கைது செய்ய விடாமல் தி.மு.க., நிர்வாகி அழுத்தம் கொடுப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க., நிர்வாகி என்று அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wnuhpyhw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஞானசேகரன் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர்.இதனிடையே புதுக்கோட்டையில் மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், தி.மு.க., நிர்வாகியின் உறவினர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை கைது செய்ய விடாமல் போலீசாருக்கு அழுத்தும் கொடுப்பதாகவும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயின்று வரும் மாணவி, வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மாணவியின் பெற்றோர்கள், மணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மணிகண்டன் என்ற நபர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் என்பவரின் உறவினர் என்பதால், காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது. காவல்துறை எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், உண்மைக் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

pmsamy
டிச 29, 2024 10:42

அண்ணாமலை இப்போ நீ நூறு சவுக்கடி போட்டுக்கோ. திமுக என்ன தப்பு பண்ணாலும் உன்னை அடிச்சுக்கணும் சரியா


vvera
டிச 29, 2024 12:31

ஆயிரம் பீலா சாமிகள் சேர்த்தாலும் உண்மை வெளிவரும்


Balajee
டிச 29, 2024 06:52

இதுதான் திராவிட மாடலா? பலே வெள்ளைய தேவா


J.V. Iyer
டிச 29, 2024 05:21

அடுத்த மாதம் நம் ஊரில் நடக்கும். அடுத்த வாரத்தில் நமது தெருவில். பிறகு நம்வீட்டிலிலேயே நடக்க வாய்ப்பு. அப்போது தெரியும் வலி என்றால் என்ன என்று. ஆனால் அதற்குள் மரத்துவிடும் நமக்கு, டாஸ்மாக் மதுவை குடித்து, அல்லது போதைப்பொருட்களுக்கு அடிமையான பின்பு. நாம் எல்லாம் மாடல் ஆட்சியின் அடிமைகள் என்று பறைசாற்றுவோம்.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 28, 2024 22:18

கலைஞர் நூல்களை நாட்டுடமை ஆக்கிய கோளாறா அல்லது கட்சிக்காரர்கள் அனைவரும் முன்பே கலைஞர் நூல்களை படித்துவிட்டனரா?


sankaranarayanan
டிச 28, 2024 20:56

உய்ரநீதிமன்றம் இந்த வழக்கையும் திரும்ப திறக்கவைத்து ஆராய்ந்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை வழக்கவேண்டும்


konanki
டிச 28, 2024 19:23

திராவிட மாடல் அரசின் சாதனை


konanki
டிச 28, 2024 19:22

மணிகண்டன் 2026 ல் சட்ட மன்ற தேர்தலில் எம் எல் ஏ பதவிக்கு வர வாய்ப்பு


rama adhavan
டிச 28, 2024 18:53

உறவினர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு கொண்டு வரலாமே? அதற்கு பாஜக உதவலாமே?


ராமகிருஷ்ணன்
டிச 28, 2024 18:48

லஞ்சம், கமிஷன் என்று எக்குத்தப்பாக திமுகவினருக்கு பணம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அதனால வாழ்க்கையை முறைகேடாக அனுபவிக்க துடிக்கிறார்கள். தவறுகள் நடக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். ஆக அடிப்படை திமுகவினரின் திருட்டு ஊழல் ஆட்சி.


Palanisamy Sekar
டிச 28, 2024 18:35

வன்கொடுமை செய்தவன் பெயரோடு புகார் கொடுக்கும்போது போலீஸ் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்காமல் தடுக்கும் தீயசக்தியை லத்தியால் அடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டாமோ? இந்த செய்தியும் கூட அண்ணாமலையின் முயற்சியால் வெளியே வந்துள்ளது. எதிர்கட்சியோ தூங்குகின்றது. ஆளும் தரப்புக்கு எந்த கவலையும் இல்லை. திராவிட கட்சிகளை வரும் தேர்தலோடு நிராகரிக்க வேண்டும். நீதிநிலைக்க பெண்களுக்கு பாதுகாப்புக்காக அண்ணாமலையை இனியேனும் ஆதரிக்க பாருங்கள்.


சமீபத்திய செய்தி