உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜிவ் கொலையாளிகளிடம் பரிவு; காயம்பட்டோரிடம் வெறுப்பு: ராகுல் மீது அதிருப்தியில் வெளியேறினார் அனுசுயா

ராஜிவ் கொலையாளிகளிடம் பரிவு; காயம்பட்டோரிடம் வெறுப்பு: ராகுல் மீது அதிருப்தியில் வெளியேறினார் அனுசுயா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -ராஜிவ் கொலையாளிகளுக்காக பரிந்து பேசும் ராகுல் மற்றும் பிரியங்கா, அந்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டோரையும் சந்திக்காதது மன வேதனை அளிக்கிறது என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த போலீஸ் அனுசுயா வெளியேறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=07ijdn3f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒன்பது பேர், காங்கிரசார் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர, போலீஸ் அதிகாரிகள் பலர், பலத்த காயம் அடைந்து செயல்பட முடியாமல் உள்ளனர்.அவர்களில் ஒருவர் தான் தமிழக போலீசில் ஏ.டி.எஸ்.பி.,யாக இருந்து ஓய்வு பெற்ற அனுசுயா. அவர் தனது பணி ஓய்வுக்கு பின், ராஜிவ் கொலையாளிகளுக்கு துாக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டது.ராஜிவை கொன்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என, கவர்னர் ரவியை சந்தித்தும் முறையிட்டார். ஆனாலும், உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்; இதனால், மிகவும் சோர்ந்து போனார்.இதற்கிடையில், விடுதலை புலிகள் பெயரைச் சொல்லி, பலரும் அவருக்கு மிரட்டல்கள் விடுத்தனர். அதனால், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரசில் இருந்து அவர் விலகியுள்ளார்.அனுசுயா கூறியதாவது: ராஜிவை கொல்வதற்காக விடுதலை புலிகள் நடத்திய குண்டு வெடிப்பில், என் இடது கை முழுமையாக பாதிக்கப்பட்டது. என்னை போலவே பலரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட ராஜிவ் குடும்பத்தினர் எங்களுக்கு ஆதரவாக இருப்பர் என்று நினைத்து, காங்., கட்சியில் சேர்ந்தேன்.ஆனால், கொலையாளிகள் மீது ஆத்திரம் காட்ட வேண்டிய ராஜிவ் குடும்பத்தினர், ஆதரவும், பரிவும் காட்டத் துவங்கினர். வேலுார் சிறையில் இருந்த நளினியை, சிறைக்கே சென்று சந்தித்தார் பிரியங்கா. என்ன நடந்தது என்ற உண்மையை அறிய போனார் என்று சொன்னார்கள்.என்னை போன்றவர்களும் நம்பினோம். ஆனால், கேரள வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்காவுக்கு ஆதரவாக, ராகுல் பிரசாரம் செய்யும் போது, வேலுார் சிறைக்கு சென்று, நளினியை பிரியங்கா சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.நளினிக்காக, தானும் குடும்பத்தினரும் மன வேதனைபட்டதாக தெரிவித்திருக்கிறார்.கொலையாளிக்காக பரிந்து பேசும் ராகுல், பிரியங்கா ஆகியோர், குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. என்னை போன்ற பாதிக்கப்பட்டோரையும் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. கொலையாளிகளோடு கைகோர்த்து செயல்படுவது போல நடக்கின்றனர்.இப்படிப்பட்ட குடும்பத்தினரிடம் தான் காங்., கட்சி உள்ளது. அவர்களை நம்பி, இனி அக்கட்சியில் இருந்து பிரயோஜனம் இல்லை. எனவே, அக்கட்சியில் இருந்து விலகி விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

jayvee
நவ 08, 2024 18:08

இந்தம்மாவின் பேட்டியை பார்த்திருக்கேன்.. ஆனால் இவர் காங்கிரஸில் இருக்கார் என்பது இவருக்கு இப்போதுதான் தெரிந்திருக்கும்.. இல்லைஎன்றால் இவருக்குத்தான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் MP பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கவேண்டும் ..மேலும் ராஜீவ்காந்தியை ......... கட்சியிலே சேர்ந்தால் எப்படி நீதி கிடைக்கும் ?


J.V. Iyer
நவ 08, 2024 17:57

நேரு குடும்பம் ஹிந்துஸ்தானுக்கு செய்த அட்டூழிங்கள் போதும். மக்கள் இந்த வின்சி குடும்பத்தை அடியோடு நிராகரிக்க வேண்டும்.


Rasheel
நவ 08, 2024 17:53

படுகொலைகளை நடத்திய கட்சி தனது குடும்பத்திலேயே அதை பார்ப்பது அதிசயம் இல்லை தானே? காஷ்மீரிலும், டெல்லியிலும் பார்க்காததா?


வாய்மையே வெல்லும்
நவ 08, 2024 17:19

இந்த மூதாட்டி கண்டிப்பாக உண்மையை மறைக்க எதோ பெரிய தொகை இல்லாங்காட்டி பதவி / அந்தஸ்த்து கான் க்ராஸ் இடம் எதிர்பார்த்து அது கிடைக்காத சோகத்தில் காலம்கடந்த நேரத்தில் இப்படியொரு விலகல் அறிவிக்கிறார் என என்னுடைய புரிதல். முதலில் காங்கிரஸ் கட்சியில் சேரவேண்டிய காரணம் என்ன அதுவே இவங்க சொல்லவில்லை. பிறகென்ன பித்தலாட்ட பேச்சு


Rpalnivelu
நவ 08, 2024 15:19

போலி காந்தி பேமிலியை நம்பியோர் கண்டிப்பாக கை விடப் படுவார். போலி ரஹூல் காந்தியுடைய கொள்கை பற்றி யாராவது புரிந்தவர்கள் சொல்லுங்க. பட்டாயாவிலிருந்தும் பதில் அளிக்கலாம்


Ganapathy
நவ 08, 2024 13:14

என்ன ஒரு ஈனத்தனமான கேனத்தனமான கருத்துப்பதிவு? உன் புத்தி ஒரு வக்கரபுத்தி. உண்மையான காங்கிரஸ் உறுப்பினர்கள் இவன் முகத்தில் காறித் துப்பவேண்டும் இப்படிப்பட்ட கருத்தை பதிந்ததற்காக.


sankar
நவ 08, 2024 15:40

காரிதுப்பவேண்டியது சோனியா கம்பெனிமீது


பேசும் தமிழன்
நவ 08, 2024 19:28

பார்த்து.... நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் முகத்தில் ஏற்கெனவே காறி துப்பி விட்டார்கள்...இன்னும் எத்தனை முறை தான் கான் கிராஸ் கட்சி மீது துப்ப ???நாட்டை பிடித்த கேடு கான் கிராஸ் கட்சி.


வைகுண்டேஸ்வரன்
நவ 08, 2024 11:13

போலீஸ் அனுசுயா? இப்படி ஒரு கேரக்டர் இருப்பதே இதுவரை யாருக்கும் தெரியாது. இவர் இருந்த போதும் ஒரு பயனும் இல்லை. இப்போ விலகினால் ஒரு நஷ்டமும் இல்லை.


visu
நவ 08, 2024 11:51

ஹாஹா அதனால் தான் காங்கிரெஸ் இந்த நிலைக்கு ஆளாகி விட்டது கட்சியில் இருப்பவர்களை அலட்சியப்படுத்த கூடாது


Mettai* Tamil
நவ 08, 2024 13:48

ஆமா எப்படி தெரியும், பாதிக்கப்பட்டவங்கள பார்த்தால் தானே யாருக்கும் தெரியும் .நீங்க பார்ப்பதெல்லாம் கொலை குற்றவாளிகளை தானே . கரெக்ட் டா சொன்னீங்க , பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் நஷ்டம் . உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.......


தமிழ்வேள்
நவ 08, 2024 11:10

அப்பனும் மகனும் பரஸ்பரம் கொலை செய்து ஆட்சியை பிடித்தல் இஸ்லாமிய பண்பாடு ....ராஜீவுக்கு பின்பான காங்கிரஸ் நிலைப்பாடு , அரசு அமைப்பு , முஸ்லீம் நாடுகள் ஆதரவு -இவற்றை கூட்டி கழித்து பார்த்தால் உண்மை விளங்கும் ...இந்த கச்சடா பண்பாடு பாரத பண்பாடே அல்ல ..


Anand
நவ 08, 2024 10:21

இதென்ன பிரமாதம், இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவிக்க துணை போன கூட்டுக்களவாணிகளை நாம் ஒட்டு போட்டு ஜெயிக்க வைத்தோம். அப்போது இல்லாத ரோஷம் இப்போ மட்டும் ஏன் பொத்துக்கொண்டு வருகிறது.


பேசும் தமிழன்
நவ 08, 2024 19:30

அது தானே.....


Madhavan Balan
நவ 08, 2024 09:33

உங்களுக்கு பிரச்சனைகள் வரும்போது அவனை ராகுல் குற்றம் சாட்டுகிறீர். அவன் நம்நாட்டை வெளிநாட்டில் சென்று இகழுந்து பேசும்போது தமிழர்கள் அதைபற்றி பேசுவதே இல்லை.


புதிய வீடியோ