உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் வாழ்க என்று எழுதுவதை தவிர, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்; தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

தமிழ் வாழ்க என்று எழுதுவதை தவிர, தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்; தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுதான் திராவிட மாடல் தி.மு.க., அரசு தமிழை வளர்க்கும் முறையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை இணைந்து திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி வரும் 14ம் தேதி நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு திமுக அரசு அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு, கூட்டம் நடப்பதற்கு ஒரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? முதலிலேயே காவல்துறைக்குத் தெரியாதா குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாமா? கூடாதா என்று? அந்த இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாதென்றால் மாற்று இடத்தை முன்பே வழங்கி இருக்கலாமே? அதனை விடுத்து போராட்டம் நடத்தவே அனுமதி மறுப்பது ஏன்? எதனால்? யாருக்குப் பயந்து, யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறை முதலில் வழங்கிய அனுமதியை தற்போது மறுக்கிறது? திருச்செந்தூர் காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய அறமற்றச்செயல், தி.மு.க., ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு தரம்தாழ்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. வெட்கக்கேடு!ஹிந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த தி.மு.க., அரசு கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டது. 6 முறை தி.மு.க., தமிழர் நிலத்தை ஆண்டபிறகும் தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும்.அரசு அலுவலகங்களில் 'தமிழ் வாழ்க' என்று எழுதியதைத் தவிர, தி.மு.க., அரசு அன்னை தமிழின் வளர்ச்சிக்குச் செய்த நன்மை என்ன? தமிழ் வாழ்க என்று அரசு நிறுவனத்தில் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவனங்களைத் தமிழில் பெயர் வைக்கக்கோரி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து கொடுமையும் புரிந்தது தி.மு.க., அரசு.தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி தமிழர்களைப் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளி இருப்பதும், அந்தப் போராட்டத்திற்கும் அனுமதி மறுப்பதும் எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். இதன் மூலம் 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்ற வசனங்கள் எல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பது மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

புரொடஸ்டர்
ஜூன் 13, 2025 08:55

மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே தமிழ் மொழி முழு வளர்ச்சி அடைந்துவிட்டது சீமான்.


vivek
ஜூன் 13, 2025 11:45

தமிழை வளர்த்து விட்டது டாஸ்மாக் டாஸ்மாக் டாஸ்மாக் சரியா protestor


MP.K
ஜூன் 13, 2025 05:05

தமிழ் மண்ணில் உள்ள கோயில்களுக்கு கண்டிப்பாக தமிழில் தான் குடமுழுக்கு உள்ளிட்ட ஏனைய வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் இதுவே இயற்கை நீதி


Kasimani Baskaran
ஜூன் 13, 2025 04:07

அந்த வாசகத்தை எத்தனை தமிழக மந்திரிகள் தவறில்லாமல் எழுதுவார்கள், உச்சரிப்பார்கள் என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும்.


Matt P
ஜூன் 12, 2025 21:59

சீநி சக்கரை சித்தப்பா பேப்பரில் எழுதி நக்கப்பா என்பார்கள். தமிழ் வாழக என்று எழுதி நக்குங்க.


Matt P
ஜூன் 12, 2025 21:57

தமிழ் வளர்ச்சிக்கு முடிந்த அளவு தமிழில் பேச முயற்சியுங்கள். திரைபடங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். தமிழ் மக்களை சுரண்டுவதை நிறுத்துங்கள். வாய் கிழிய பேசி தங்களை தாங்களே உயர்த்தி கொள்ளவது தான் இன்றைக்கு தமிழ் வளர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இங்க்லிஷ் வேகமாக வளர்ந்து தமிழ் மெல்ல மெல்ல சாகும் நிலைதான் வரும் போல தெரிகிறது. இங்கிலீஷ் தமிழர்களின் வளர்ச்சிக்கு தேவை தான். அதற்காக எங்கும் இங்கிலீஷு எப்போதும் இங்கிலீஷு என்ற நிலை வரக்கூடாது.


Naga Subramanian
ஜூன் 12, 2025 21:15

உண்மை


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 12, 2025 21:06

தமிழ் THEISYAM என்று சொல்லும் மலையாளி நீ்ங்க , தமிழ் பற்றி கவலை , பிரபாகரன் போட்டோ வைத்து திரள் நிதி வாங்கி பிழைக்கும் நீங்க பேசுறீங்க


vivek
ஜூன் 13, 2025 06:34

அப்போ சீமான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதில் இல்லை...


Matt P
ஜூன் 13, 2025 10:38

அதென்னப்பா ...தமிழ் தேசியம்...தேசியம் என்பதற்கு தமிழ் வார்த்தை கிடைக்கவில்லையா?


ராஜா
ஜூன் 12, 2025 20:42

அந்த சிவகாமி பாட்டு தான் ஞாபகம் வருது , அதான் அந்த லட்சுமி ஆச்சி கிட்ட கேட்டாதான் தெரியும் , இந்த சாதனையாளர் பற்றிய முழு விவரம் தெரிய வரும்,


V RAMASWAMY
ஜூன் 12, 2025 19:49

தமில் டிவி நிகள்ச்சிகளிலும் செய்திகளிளும் பாருங்கல், தமில் எப்படி வாளுகிறது, வலர்க்கப்படுகிறது என்பது புரியும். சமீபத்திய சங்கரா tv யி ள் ஒலி பரப்பப்படும் பேச்சுப்போட்டியிள் கூட உச்சரிப்புக்கல் தாறுமாறாக இருக்கிண்றண. மொளி சொள்ளிக்கொடுக்கும் ஆசிரியர்கலுக்குத் தெரிந்தாள் தாணே சரியாக சொள்ளிக்கொடுப்பார்கள்.


Pazhani Murugan
ஜூன் 13, 2025 08:32

Mr Ramasamy. Please do not kill Tamil language as evidenced from your letter. Please try to learn how to write Tamil letters with correct and appropriate alphabets


Joseph
ஜூன் 13, 2025 08:34

Of late Mr Seeman started speaking with sense


தத்வமசி
ஜூன் 12, 2025 19:43

நியாயமான கேள்வி. இதற்கு பதில் உண்டு. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலில் மூடப்பட்ட துறை தமிழ்த்துறை. பலப்பல தமிழ் பண்டிதர்களை அறிஞ்ர்களை உருவாக்கிய மிகப் பெரிய கல்லூரிகளிலும் இன்று தமிழ்த் துறை பழைய பெருமையோடு காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. அல்லது மூடப்பட்டு விட்டது. தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றி ஒரு படம் கூட வந்தது. இன்றைய மாணவர்களுக்கு ள வராது, ழ வராது, ர-ற வித்தியாசம் தெரியாது, எங்கு க்,ச்,ட்,த்,ப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. தமிழ் வாழ்க போய், தமில் வாழ்க என்றாகி இனி டமில் வாழ்க என்று சொல்வதை காணலாம். இன்று நாற்பது ஐம்பது வயதில் உள்ளவர்கள் மட்டும் அன்று தமிழ் படித்தார்கள். அதன் பிறகு தமிழைப் படித்தார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை