உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் வழக்கு: தொடர்கிறது நீதிபதிகள் விலகல்!

அமைச்சர்கள் வழக்கு: தொடர்கிறது நீதிபதிகள் விலகல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி விலகி உள்ளார்.2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இருந்தனர். அப்போது இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 2022ம் ஆண்டு விடுவித்தது. ஆனால் அவர்கள் இருவருக்கு எதிரான வழக்குகளை சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு ஆய்வுக்கு எடுத்தார். கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.இதற்கு எதிராக தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரும் மேல் முறையீடு செய்த போது, மறு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந் நிலையில், மறு விசாரணையை எதிர்த்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவித்தார். தாம் இடம்பெறாத அமர்வில் இந்த வழக்கை பட்டியலிடவும் உத்தரவிட்டார். அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டனர். முக்கிய வழக்குகளில் நீதிபதிகள் விலகல்இதற்கு முன், டாஸ்மாக் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இருந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ரமேஷ், செந்தில் குமார் ஆகியோர் மார்ச் 25ல் விலகிக்கொண்டனர். போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. (2024 டிச., 21)அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் விலகிக்கொண்டார். (2023 நவம்பர் 15)அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகிக்கொண்டார். (2023 ஜூன் 13)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Chandrasekaran Balasubramaniam
ஏப் 09, 2025 12:24

ஏன் இவ்வ்ளோ விலகள். ஏதோ ஒரு சம்பவம் இருக்கிறது நீதியில். நிதியிருந்தால் நீதி விலகுமோ? நீதி தேவதை பார்த்துக்கொள்ளும். எதுவும் நிரந்தரமில்லை.


Ravi Kulasekaran
ஏப் 09, 2025 05:17

எல்லாம் மிரட்டல் அச்சுறுத்தல் பணபலம் ஆள் பலம் அதிகார பலம் காரணம் நேர்மையான நீதிபதிகள் ஒதுங்கி கொள்வது இயற்கை


Tetra
ஏப் 08, 2025 12:24

என்னே ஒரு நேர்மை. திமுக வழக்கு என்றால் ஏன் இப்படி தள்ளிக் கொண்டேபோகிறது. திமுக பூச்சாண்டியாகி விட்டது


Sundaresan S
ஏப் 08, 2025 12:02

அமர்வில் இருந்து விலக விருப்பம் தெரிவிக்கும் நீதிபதிகள் விசாரணைக்கு முன்பாகவே விலகியிருந்தால் பாராட்டலாம். ஆனால் விசாரணையும் நடத்தி விசாரணைக்கும் தடை விதித்து பின்னர் விலகுவதாக அறிவிக்கும் நீதிபதிகளுக்கு வேறு விசாரணை எதையும் செய்ய முன்வரக்கூடாது நிறைய சந்தேகங்கள் எழுவதை சாதாரணமாகவே யூகிக்க முடிகிறது.


G.Ranganathan
ஏப் 08, 2025 11:38

காரணம் கூறாமல் விலகும் நீதிபதிகளின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.


Venkatasubramanian
ஏப் 08, 2025 10:11

இந்தியாவில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் முதுகெலும்பில்லாத ஊழல் புரையோடிப்போன துறைகளாக மாறிப் போய் பல வருடங்களாகி விட்டன.நீதித்துறை ஏறக்குறைய சவமாகி விட்டது.இங்குள்ள அரசியல்வியாதிகள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரிகளாக மாறி பல வருடங்கள் உருண்டோடி விட்டன.அரசு நிர்வாகம் ,மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி செயலிழந்து விட்டது.ஏழைகளுக்கு இங்கு எதிர்காலமில்லை.இலங்கை மற்றும் பாகிஸ்தானின் நிலை இங்கு வர வெகு காலமில்லை.


அப்பாவி
ஏப் 08, 2025 09:57

குற்றம் நிரூபணமானால் மட்டும் என்ன தூக்கிலா போடப் போறீங்க?


Ajay M
ஏப் 08, 2025 09:38

எதுக்கு சட்டம் படிச்சீங்க நீதியரசர்கள் ஏழ்மயனான மக்கள்ட்ட மட்டும் சட்டம் தன் கடமையை செயும் நீதியரசர்கள் நீங்களும் மக்களை ஏமாத்துறிங்க பெற்ற பிள்ளைகளுக்கு பாவத்தை சேக்காதிங்க


ஆரூர் ரங்
ஏப் 08, 2025 09:00

எல்லோருக்கும் குடும்பம் புள்ளகுட்டி இருக்கிறதே


KSB
ஏப் 08, 2025 07:20

The common man fails to understand such attitudes of the Judges. If its by anyone else, it will be termed " dereliction of duty". Judges take oath and they have to be impartial while conducting cases. Such was the tem in our country where even his own son was punished by the king Its pitiable that the Judges receive the tax-payers money as salary and still fail to perform their moral responsibility.


புதிய வீடியோ