மேலும் செய்திகள்
அரசு விரைவு பஸ் பயணம்; பரிசுக்கு 13 பேர் தேர்வு
05-Nov-2024
சென்னை:சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனராக, கடந்த 2001ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்வரன் சிங் நியமிக்கப்பட்டார். அவர் சிறப்பாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றனர்.மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக, கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ் நியமிக்கப்பட்டார். தற்போது, போக்குவரத்து துறை கூடுதல் செயலராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கார்மேகம், சேலம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களின் தலைவர் மற்றும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த லில்லி, போக்குவரத்து துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுஉள்ளார்.
05-Nov-2024