உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறுவர்'' என சட்டசபையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி வழங்கும் மசோதா தாக்கல் செய்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் 493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணி பெற்றுள்ளனர். அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.1,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் தங்களுக்கான வாய்ப்புகளையும், பிறப்புரிமையையும் சமமாகப் பெற புதிய சட்ட மசோதா உதவும். 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் கிடைக்கும். இந்த சட்ட முன்வடிவை கொண்டு வந்ததை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறுவர். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுகிறது. குரலற்றவர்களின் குரலாக தி.மு.க., ஆட்சி உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaranarayanan
ஏப் 16, 2025 19:32

உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு இது போன்று பேசி பேசித்தான் நாட்டையே குட்டிச்சுவராக ஆக்கி விட்டார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய வசதிகளை கொடுப்பதில் இவர்களுக்கு எந்தவித ஆர்வமே இல்லை அவர்களின் வாக்குகளை எப்படி சேகரிப்பது என்பதே குறிதான்


Keshavan.J
ஏப் 16, 2025 18:04

இவர்களும் லஞ்சம் வாங்குவார்களா


Keshavan.J
ஏப் 16, 2025 18:04

இவர்களும் லஞ்சம் வாங்குவார்களா


HoneyBee
ஏப் 16, 2025 16:39

தேர்தல் வருது அதனால் எல்லாம் வரும்


Kumar Kumzi
ஏப் 16, 2025 14:28

சரிங்க அந்த கப் வென்ற மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரருக்கும் நியமனம் கெடைக்குமா


P Karthikeyan
ஏப் 16, 2025 13:52

துரைமுருகன் பேசிய பேச்சுக்கு பரிகாரம் செய்கிறார் ஸ்டாலின்


GMM
ஏப் 16, 2025 13:45

உள்ளாட்சியில் நியமனம். சட்ட பேரவை அல்லது மேல்சபை நியமனம் நீடிக்க முடியாதா? சர்வாதியால முடியும். சலுகை பெறும் நபர்கள் ஓட்டளிக்கும் தகுதியை இழக்க வேண்டும். சலுகைகள் பெறுபவர்கள் பொது நலம், தேச நலம் கருதி வாக்களிக்க போவது இல்லை. பிறர் உரிமையை பறித்து தான் சலுகை தர முடியும்.


hariharan
ஏப் 16, 2025 13:36

திமுகவில் மாற்றுத்திறனாளி சட்டசபை உறுப்பினர்கள் யாருமே இல்லை. சமூகநீதி பற்றி பேசும் இவர்கள் 1957 முதல் சட்டசபையில் அங்கம் வகிக்கின்றனர். எனக்குத் தெரிந்தவரை மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் எவரும் இல்லை. இதுவே திராவிட சமூகநீதி.


Barakat Ali
ஏப் 16, 2025 13:09

இப்படி பலரைப் பல விதங்களிலும் திருப்திப் படுத்தி , திருப்திப் படுத்தி ஆட்சியை ஒட்டிக்கிட்டு இருக்கோம் ...... அதுக்குள்ளே தாவு தீர்ந்து போவுது .... ரொம்ப சிம்பிளா, பல விதமா அரசியல் சட்ட விரோத காரியங்களை செஞ்சு வாக்குவங்கியை உருவாக்கி பலனடையிறோம் ன்னு சொல்லிடறாங்க ....