உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜவுக்கு தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை தேர்தல் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் நிலையில், அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணியும் சுற்றுப்பயணத்தை துவக்கி உள்ளார்.இந்த தேர்தலை சந்திக்க அதிமுகவுடன் பாஜ கூட்டணி சேர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணியை உறுதி செய்தார். தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும், அதற்கு மேலிட தலைவர்களை அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இதன்படி தேர்தல் பொறுப்பாளராக - பைஜெயந்த் பாண்டா ( தேசிய துணைத்தலைவர்)இணை தேர்தல் பொறுப்பாளராக - முரளிதர் மொஹோல் ( மத்திய இணையமைச்சர்) ஆகியோரை நியமித்து பாஜ தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K V Ramadoss
செப் 25, 2025 20:28

யார் இவர்கள் ? யாருக்குத்தெரியும் ? ........தோல்வி வரும் பின்னே அதன் மணி ஓசை வரும் முன்னே


pakalavan
செப் 25, 2025 20:15

அன்னாமலைய கழட்டிவிட்டுட்டானுங்களா ? இனிமேலு ஒத்த ஓட்டுதான்


Venugopal S
செப் 25, 2025 18:55

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர்களை எடுக்கும் போது பார்த்து மாட்டிக் கொள்ளாமல் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள் அல்லவா?


Priyan Vadanad
செப் 25, 2025 18:50

மலையாரை பீஹாருக்கு அனுப்பினால்தான் என்ன?


ஆனந்த்
செப் 25, 2025 18:13

இதன் பலன் தேர்தல் முடிவில் தெரியும்.


தாமரை
செப் 25, 2025 17:56

தமிழ் தெரியுமா? நாலஞ்சு கோஷ்டிகள் இருப்பது தெரியுமா?


Sesh
செப் 25, 2025 17:56

அவர்களுக்கு தமிழ்நாடு எங்கு உள்ளது என்று தெரியுமா ?. ஏன் தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் யாருமில்லையா .


புதிய வீடியோ