புது ரேஷன் கார்டு 35,000 பேருக்கு வழங்க ஒப்புதல்
சென்னை:தமிழகத்தில் தனி சமையல் அறையுடன் வசிப்பவருக்கு, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதற்கு, 'ஆதார்' கார்டு கட்டாயம். ரேஷன் கார்டு கேட்டு, 1.22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. விடுபட்ட மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வாயிலாக, அரசு மனுக்களை பெற்று வருகிறது. எனவே, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், அதை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு ஏற்ப விண்ணப்பங்களை பரிசீலித்து, கார்டு வழங்க உணவு துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நிலுவை விண்ணப்பங்களில் ஆய்வு முடிவடைந்த 35,000 பேருக்கு ரேஷன் கார்டுகள் அச்சிட்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.