உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் இளையராஜா: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு

இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் இளையராஜா: ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் இளையராஜா என ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக, ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழகத்துக்கே தனி பெருமைத் தேடி தந்தவர் இளையராஜா.

இசை மேதை

இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்.

மட்டற்ற மகிழ்ச்சி

குறிப்பாக திரை இசையைக் கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில், அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி எனும் சாதனை, ஒவ்வொரு இசை கலைஞருக்கும் இசைத் துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக் கூடிய சாதனையாக இருக்கிறது. அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெரும் மகிழ்ச்சிகொள்கிறேன்.

எல்லாப் புகழும்

இளையராஜாவின் பொன் விழா ஆண்டை தமிழக அரசே ஒருங்கிணைத்து கொண்டாடுவதை இளையராஜாவுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே. இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிட்டுக்குருவி
செப் 14, 2025 21:00

ரஹ்மானின் எவ்வளவு பெரிய பெருந்தன்மை . அவ்வ்ளவு பெரிய கூட்டத்தில் மற்ற இசைக்கலைஞ்சர்களையெல்லாம் தேடி தேடி பார்க்கின்றேன் ஒருவரையும் காணோம் .மற்ற இசைக்கலைஞர்களையெல்லாம் முன்வரிசையில் பார்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் .அழைக்கவில்லையா அல்லது வரவில்லையா ?


Vasan
செப் 14, 2025 19:19

All the music directors of Tamil cinema are do humble. MSV, Chandrabose, Ilayaraja, Gangai Amaran, T.Rajendar, AR Rehman, Harris Jayaraj, Anirudh, so on... Hats off to them all.


புதிய வீடியோ