உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்

சென்னை: தமிழக தேர்தல் கமிஷனராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ கடந்த 2018 ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட போது இவருக்கு, கூடுதல் பொறுப்பாக தமிழக கால்நடைத்துறை செயலர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=41o4h0zi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெயர் இவருக்கு கிடைத்து உள்ளது.தற்போது இவர் தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக உள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முன்நின்று நடத்தும் வாய்ப்பு இவருக்கு உருவாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 2002ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.,பணியில் சேர்ந்தார். கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார். கோவையின் முதல் பெண் கலெக்டர் என்ற பெருமை இவருக்கு உள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaranarayanan
நவ 09, 2024 10:28

அதனென்னாயா ஒரிசா மாநிலத்தவரர்களே தமிழக தேர்தல் அதிகாரிகளாக வருகிறார்கள் வேறு மாநிலததவர்கள் கிடைக்கவில்லையா


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2024 12:56

முன்பு இருந்த நரேஷ் குப்தா மத்திய பிரதேசத்துக் காரர். அவர் கழகத்துக்காக அரும்பாடு படவில்லையா? சிவகங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவை அப்படியே மாற்றித்தரவில்லையா?


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2024 08:39

நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். எப்படியும் இரு நூறு இடங்களில் வெற்றி பெற புதிதாய் கழகத்தில் இணைந்திருக்கும் அடிமை திறம்பட உழைப்பார் என்றே எதிர்பார்க்கலாம். ஏற்கனவே இருந்த ஊழலில் ஊறிப்போன அடிமைக்கு சரியான நேரத்தில் சரியான பரிசு காத்திருக்கிறது


Dharmavaan
நவ 09, 2024 08:08

சாஹு ஒரு ஊழல் பேர்வழி திமுகவிடம் கையூட்டு வாங்கி கொண்டு அதன் தில்லு முல்லுகளை கண்டுகொள்ளாத திருடன்


Dharmavaan
நவ 09, 2024 07:59

தேர்தல் அதிகாரியை மாநில அரசு தேர்ந்தெடுப்பது தவறு.இது மத்திய அரசுக்கு விட வேண்டும் இல்லையேல் திமுக செய்யும் எந்த தேர்தல் அட்டூழியமும் வெளியே தெரியாது பிஜேபி கோர்ட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் .


Matt P
நவ 09, 2024 03:56

ஸ்டாலினை சந்தித்து ஆசி பெறுங்கள். புதிய தேர்தல் அதிகாரி அவரை சந்திக்கவில்லை என்பற்காக. உங்க சக்தியே தேர்தல் காலங்களில் தான். அந்த நேரத்தில் உறுதியாக இருந்தால் பாராட்டப்படலாம்.


Matt P
நவ 09, 2024 13:26

புதிய தேர்தல் அதிகாரி அவரை சந்திக்கவில்லை என்பற்காக. கருணாநிதி திட்டினார் ஒரு தடவை.


Nandakumar Naidu.
நவ 09, 2024 02:30

சத்ய பிரதா சாவு போல ஆளும் கட்சியின் கொத்தடிமையாக இல்லாமல் இருந்தால் சரி. இவர் காலத்தில் தேர்தல் நேரத்தில் ஊழல் தழைத்தோங்கியது எல்லோருக்கும் தெரியும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 08, 2024 22:57

பொதுவாக திமுகவிற்கு உயர் பதவியில் பெண்கள் இருந்தாலே பிடிக்காது. இவராவது திமுகவின் அடிமையாக இல்லாதிருக்க வேண்டும். காலம் தான் பதில் சொல்லும்.


Ramesh Sargam
நவ 08, 2024 22:25

வாழ்த்துக்கள். திராவிட கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.


mahalingamssva
நவ 08, 2024 22:14

வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை