உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!

அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8,980க்கும், சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) ஆபரண தங்கம் கிராம், 8,940 ரூபாய்க்கும், சவரன், 71,520 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 29) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 8,980 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 71,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 30) அட்சய திருதியை என்பதால் எல்லாரும் தங்க ஆபரணங்கள் வாங்குவது வழக்கம். இதனால் தங்கம் விலை உயருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. ஆனால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8,980க்கும், சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அட்சய திருதியை என்பதால், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகை கடைகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 20% வரை கூடுதல் விற்பனை நடக்கும் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Chess Player
ஏப் 30, 2025 11:02

முற்றிலும் சரி. சாஸ்திரங்களின்படி, நீங்கள் தானம் மற்றும் தர்மம் செய்ய வேண்டும். ஒருவர் செய்யும் எந்த நன்மையும் செழிக்கும். தங்கம் வாங்குவது செல்வத்தைப் பெருக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இந்த நாள் செல்வத்தைப் பெருக்குவதற்கான நாள் அல்ல, இந்த நாள் நல்ல செயல்களைப் பெருக்குவதற்கான நாள்.


C G MAGESH
ஏப் 30, 2025 10:14

அட்சய த்ரிதியை வியாபாரத்தை வைத்து தான், தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த படுகிறது. மக்கள் இதை புரிந்து கொண்டு, இன்று அரிசி, உப்பு போன்ற பொருட்களை வாங்க வேண்டும். இதனால், விவசாயிகள் பயன் பெறுவார், தங்க நகை வியாபாரிகள் அல்ல.


Iniyan
ஏப் 30, 2025 10:07

இந்த நாளில் தானம் தர்மம் செய்வது நல்லது. தங்கம் வாங்கினால் ஒரு புண்ணியமும் இல்லை. நகை கடைகாரனுக்கு லாபம் அவ்வளவே.