உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயை கைது செய்யுங்கள்: அர்ஜுன் சம்பத் ஆவேசம்

விஜயை கைது செய்யுங்கள்: அர்ஜுன் சம்பத் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ''கரூரில் நடந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ள தி.மு.க., அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்,'' என்று, திருப்பூரில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். நேற்று, அவர் அளித்த பேட்டி: வங்கதேச இஸ்லாமியர், ஒரு கோடி பேர் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். அவர்களுக்கு, காங்., - தி.மு.க., - மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஆதரவளித்து ஓட்டுரிமை கோரி போராடி வருகின்றனர். இதை முறியடிக்க மத்திய அரச நடவடிக்கை எடுத்து வருகிறது. திருப்பூரில் ஏராளமான வங்கதேசத்தினர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து, நாடு கடத்த வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bp13n6jp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அரசு வரி சீரமைப்பால் பொருட்கள் விலை குறைந்தது. ஆனால், திருப்பூரில் அமெரிக்க வரி விதிப்பால் பொருளாதாரம் சீர் கெட்டுள்ளது என தவறான தகவல்களை, வெறுப்பு பிரசாரத்தை பரப்புகின்றனர். எதிர்கட்சிகள் கூட்டத்தை சீர்குலைப்பது அரசின் நோக்கம். தி.மு.க. ஆட்சியை கவர்னர் 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். சாராய மரணத்தின் போது முதல்வர் நேரில் செல்லவில்லை. கரூர் உயிரிழப்புகளுக்கு, த.வெ.க. காரணம் என்றால், அக்கட்சியை தடை செய்யுங்கள். விஜயை கைது செய்யுங்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்கு பரப்புரை செய்ய வேண்டும். உங்களை முதலில் பாருங்கள் விஜய். உங்கள் தொண்டரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கட்சியை கலைத்து விடுங்கள். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பெரிய ராசு
அக் 01, 2025 16:27

அப்ப 52 பேரு கள்ளசாராயத்தில செத்தாங்களே யாரை கைது பண்ண


Vijay D Ratnam
அக் 01, 2025 16:27

கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் கம்பெனி, திமுக. அதை அப்டியே நட்ட நடுவாக்கில் பொளப்பது போல ஜோசப் விஜய் தவேக என்று ஒரு கட்சி ஆரம்பித்து கிருஸ்தவர்கள் வாக்கை கழட்டினால் திமுகவுக்கு கோவம் வருமா வராதா. கிருஸ்தவர்கள் முழுமையாக அவிங்க ஆளை ஆதரித்தால் பொறவு திமுக அரசியல் பொழப்பு நடத்த முடியாதே. இனிமே ஆட்சியை பறிகொடுத்தால் காலத்துக்கு நடுத்தெருதான். தலைவரு கோடீஸ்வரர். ஆனால் தொண்டர்கள் என்ன செய்வார்கள் பாவம். உழைத்து சாப்பிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுவார்கள் .


vbs manian
அக் 01, 2025 15:30

வோட்டு வராது.


RRR
அக் 01, 2025 10:50

ஒரே ஒரு பெண்மணி இறந்து போனதற்கே அல்லு அர்ஜுனை கைது செய்தார்கள்... 41 பேர் மரணத்துக்கு பொறுப்பேற்கவேண்டிய தற்குறி விஜய்யை கைது செய்யாதது ஏன்...


Senthoora
அக் 01, 2025 11:24

அதான் விஜய்யை கைது இது


அப்பாவி
அக் 01, 2025 10:14

அனுதாப அலை வீசிரும்.


Indian
அக் 01, 2025 09:18

யார் இவர் ??


மாபாதகன்
அக் 01, 2025 09:43

Entertainment and Time Pass for Tamil People.


அன்பே சிவம்
அக் 01, 2025 08:22

1).பாகுபலியில் வரும் காலகேயர் கூட்டம் போல கரூரில் TVK தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் செயல்பட்டனர். 2).வடிவேல் காமெடியில் வரும் சீன் போல காலை 6 மணி போட்டிக்கு மாலை 6 மணிக்கு வந்ததால்தான் இவ்வளவு pronlem. 3). ரோடு ஷோ நடத்த அந்த இடம் போதுமானது. ரோடு ஷோ என்பது கை காட்டி கொண்டே நிற்காமல் செல்வது அதாவது நமது பிரதமர் மோடி ரோடு ஷோ செல்வது போல் தான் ரோடு ஷோ இருக்க வேண்டும். 4). ஆனால் விஜய் ரோடு ஷோ நடத்தாமல் திட்டமிட்டு லேட்டாக வந்ததால் அது பொது கூட்டம் போல் மாறி விட்டது. போதாது என்று அந்த பெறிய Bus. 5). மக்களை பார்க்காமல் வண்டிக்குள் அமருந்து வந்தது. 6). நாமக்கலில் இருந்து வரும் போது கூடவே சுமார் 10,000 பேரை அழைத்து வந்தது. 7). கூட்டம் சேர்க்க அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து ஆள் கூட்டி வந்தது. 8). சனி கிழமை பள்ளி கல்லுரி விடுமுறை அன்று கூட்டம் நடத்துவது. 9). இந்த நிகழ்விருக்கு முழுக்க விஜய் மற்றும் ஆதவ் அருச்சுனன் மற்றும் புஸ்ஸி ஆனந்த மற்றும் விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தான் காரணம். 10). ஆதவ் அருச்சுனன் மற்றும் புஸ்ஸி ஆனந்த இவர்களை குண்டர் சட்டத்தில் கைது பண்ணி நிரந்தரமாக சிறையில் களி சாப்பாடு போட வேண்டும். 11). விஜயை கைது பண்ண வேண்டும். முதல்வர் ஏன் தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரியவில்லை. 12). விஜய் கட்சியை கோர்ட் தடை விதிக்கக் வேண்டும்.


மாபாதகன்
அக் 01, 2025 09:46

உண்மை ....விஜயை கைது செய்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்க முதல்வர் விரும்பவில்லை.


Priyan Vadanad
அக் 01, 2025 08:10

திருச்செந்துருக்கு காவடி எடுத்து பக்தர்கள் ஆடிக்கொண்டு போவார்கள். உண்மையிலேயே பரவசமாக இருக்கும். இடும்பன் சாமி என்று அந்த கூட்டத்தில் ஒருவர் காவடி சுமந்து வருவார். மற்றவர்கள் ஆடும்போது சும்மா இருந்துவிட்டு, எல்லோரும் ஆடி முடிந்ததும், தலை தெறிக்க ஆடுவார்.


Priyan Vadanad
அக் 01, 2025 08:06

சும்மா ஆடுமாம் ஆவி. கொட்டு சத்தம் கேட்டால் கொணட்டி கொணட்டி ஆடுமாம்.


RAMAKRISHNAN NATESAN
அக் 01, 2025 07:56

திமுகவுடன் கொள்கைக் கூட்டணி உறுதியாயிருச்சா ?


மாபாதகன்
அக் 01, 2025 09:47

இல்லை


புதிய வீடியோ