உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி

சென்னை: தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மின்னணு முறையில், சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி, வரும் 2ம் தேதி துவங்கி 4ம் தேதி வரை, சென்னை ஈக்காடுதாங்கல், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ., அலவலக சாலையில் நடக்கிறது.இதில், ஏ.ஐ., முறையில் சந்தைப்படுத்துதல், எஸ்.இ.ஒ., முறை, விளம்பர பிரசார மேம்படுத்துதல் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். இதில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது.கூடுதல் விபரங்களை, 86681 02600,70101 43022 என்ற எண்களிலும், www.editn.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.Ethirajan
டிச 31, 2024 11:52

2025ம் ஆண்டு சிந்தனை தேவை அறிவியலுக்கு அதிகமுதலீடு ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியுடன் எளிமையாக வாழ அறிவியல் துணைபுரிகிறது. மனிதனின் ஆயுட்காலம் பெருகிக்கொண்டே செல்வதற்கு அறிவியல் பங்களிப்புடன் கூடிய மருத்துவ கண்டுபிடிப்புகளே ஆகும். மனிதனின் சராசரி வயது 25ல் தொடங்கி இன்று 70வயது வரை நீடிக்க மிக முக்கிய காரணம் மருத்துவ ஆராய்ச்சிகளே ஆகும். இன்னும் சில ஆண்டுகளில் மனிதனுக்கு இறப்பே இல்லை என்ற நிலை உருவாகும். அறிவியலின் துணையோடு நாள்தோறும் பயணிக்கும் பெரும்பாலான மக்கள் புதிய அறிவியல் செய்திகளை, கண்டுபிடிப்புகளை வெளியிடும்போது, ஏளனம் மற்றும் மறுப்பு தெரிவிப்பது வழக்கமாகும். அறிவியல் துணையின்றி சில நிமிடங்கள் கூட செயல்பட முடியாது என்பதற்கு மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பான செல்போன் ஒன்றே சாட்சியாகும். ஆகவே மனித சமுதாயம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு, அறிவியல் சிந்தனையுடன் முற்போக்கு கருத்துக்களை வெளியிடும் அறிவியல் அறிஞர்களை, அமைப்புகளை பாராட்டி அவர்களுக்கு துணைநிற்க வேண்டும். இந்திய அரசியல் சட்டம் 51A h படி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் அறிவியல் செய்திகளை பரப்புவதை கடமையாக Duty கொள்ளவேண்டும். இரா.எத்திராஜன் சைதைமேற்கு 30ஆண்டுகளாக தொடர்ந்து குருதி கொடையை வழங்கி வருபவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை