உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேட்டது 5 ரூபாய் கிடைத்தது 50 காசு

கேட்டது 5 ரூபாய் கிடைத்தது 50 காசு

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதிக காலி பணியிடங்களால் ஒரு ஊழியரே, இரண்டு - மூன்று கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டி உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு கார்டுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கார்டுக்கு, 50 காசு ஊக்கத்தொகை வழங்க, அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு, ஒரு கார்டுக்கு 50 காசு வீதம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுரை வழங்கி, அத்தொகை ரேஷன் ஊழியர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜன 09, 2025 07:29

ரேஷன் கடை பணியாளர்கள் அரசாங்கத்திடம் கேட்பதற்கு பதிலாக 01/07/1992 முதல் அமலுக்கு வருமாறு ரேஷன் கடை பணியாளர்களில் விற்பனையாளர்/அட்டண்டர் மற்றும் ஏவலர்/காவலர்/கட்டுனர் சம்பளம் நிர்ணயித்து அரசு ஆணைகளை வெளியிட்டதை அமல்படுத்துமாறு கேட்டால் பல லட்சங்கள் சம்பள பாக்கி கிடைப்பதோடு வருங்காலங்களில் ஏவலர் வாங்கும் சம்பளத்தில் பாதி கூட வழங்காமல் அரசு சுரண்டுவதை நிறுத்தலாம்.


முக்கிய வீடியோ