உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிச..,9ல் கூடுகிறது சட்டசபை; டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

டிச..,9ல் கூடுகிறது சட்டசபை; டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சட்டசபை தலைவர் அறையில் நடைபெற்றது. எல்லா கட்சி உறுப்பினர்களுடன் கூடி ஆலோசித்தோம். டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vb3oa44k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். இரண்டாம் நாள் பல விவாதங்கள் நடைபெற்று மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Barakat Ali
டிச 02, 2024 20:35

அதாவது திட்டம் நல்லதா, கெட்டதா என்கிற தெளிவே இல்லாமல் திட்டத்தைக் கேட்பார்கள் ... அறியா மக்கள் எதிர்த்தால் உடனே பல்ட்டியடித்து ஒன்றியத்தை எதிர்ப்பார்கள் .... பாரதி அப்போதே பாடிவிட்டார் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி.


Ramesh Sargam
டிச 02, 2024 20:34

முதல்வருக்கு சுயமாக ஒரு முடிவு எடுக்கும் திறன் போய்விட்டது. முதலில் ஒன்று கூறுகிறார். பிறகு எதிர்ப்பு வந்தவுடன் முதலில் கூறியதற்கு மாறாக ஒன்று கூறுகிறார். .??


ponssasi
டிச 02, 2024 17:25

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு தடைபோடுவது இருக்கட்டும், முதலில் உங்க முதல்வருக்கு ஒரு தடை போடுங்க, என்னனா அவசரப்பட்டு எல்லா திட்டத்தையும் கொடுங்கன்னு மத்திய அரசிடம் கேட்டுட்டு, பிறகு மக்கள் எதிப்பு வந்தவுடன் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் எதற்க்காக? முதல்வர் அவசரப்பட்டு கேட்டுட்டு அதை நிறுத்த மக்கள் வரிப்பணத்துல ஒரு தீர்மானம். ஒருமுறை சட்டமன்றம் கூட்ட எவ்வளவு செலவு ஆகும், இதில் கலந்துகொள்பவர்களுக்கு சம்பளம், இதர பேட்டா, கேண்டின் சமோசா, டீ இன்ன பெற செலவுக்கள் அனைத்தும் மக்கள் தலையில். இந்த சுரங்கத்தை கேட்ட முதல்வர்தான் தன் சொந்த செலவில் இதை செய்யவேண்டும்


Nandakumar Naidu.
டிச 02, 2024 16:58

இந்தக் கேடுகெட்ட விளங்காத விடியல் ஆட்சியை அடுத்த தேர்தல்களில் தமிழக மக்கள் தூக்கி நிரந்தரமாக குப்பையில் போட வேண்டும்.


vadivelu
டிச 03, 2024 07:33

ஐயா காமாட்சி கோபித்து கொள்ள போகிறார்.


Kumar Kumzi
டிச 02, 2024 16:08

கிருஸ்தவ மிஷநரியின் கைக்கூலிளான இவனுங்க தமிழ் நாட்டை வேலை வாய்ப்புகள் அற்ற டாஸ்மாக் நாடாக்க முடிவு பண்ணிட்டான் சூப்பாவு


Venkatesan
டிச 02, 2024 15:40

தமிழகத்தில் உள்ள சாராய ஆலைகளுக்கு எப்போ நீங்க எதிராக தீர்மானம் போடுவீங்க? இப்படிதான் ஸ்டெர்லிட் ஆலய இழுத்து மூடி 40% செப்பு விலை ஏற காரணம் ஆனீங்க... இப்போ டங்ஸ்டன்ஆ?


GMM
டிச 02, 2024 15:33

சுரங்கம் ஒரு தொழில் நடவடிக்கை. சட்ட நடவடிக்கை அல்ல. சட்ட பேரவையை சட்டை பையில் வைத்து விளையாடுகிறது திராவிடம். இந்த சுரங்கம் அமைக்க, நிலம் , மின்சாரம் , உபகரணம் வழங்கும் மக்கள், நிறுவனத்தை பணத்திற்கு பதில் பங்குதாரர் ஆக்க முடியுமா என்று மத்திய அரசு யோசிக்கலாம். இதில் மாத வருமானம் நிரந்தரம் ஆகிவிடும். ஊழியருக்கு குறைந்த சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு.


ஆரூர் ரங்
டிச 02, 2024 15:28

மமதா , சிங்கூரில் டாடா கார் ஆலையை வரவிடாமல் தடுத்தார். இப்போது நிலம் விவசாயிகளிடம் திரும்ப வந்துவிட்டது. ஆனால் ஆலைக்காக கான்க்ரீட் தளம் போடப்பட்ட அந்த நிலத்தில் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கின்றனர் டாட்டா மீண்டும் வா கெஞ்சுகின்றனர் . அந்த நிலைமையைத்தான் உருவாக்கப் பார்க்கிறது திமுக. ஆனால் நெய்வேலி சுரங்க விரிவாக்கத்தை மட்டும் திமுக ஆட்கள் எதிர்க்கவில்லை. காரணமும் புரியவில்லை.


ஆரூர் ரங்
டிச 02, 2024 15:23

ஸ்டெர்லைட் டை மூடி தீர்ப்பைக் கொண்டாடிய நீங்கள் அந்த வேலையிழப்புகளால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்களுக்கு என்ன செய்தீர்கள்? மாதாமாதம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த குடும்பங்கள் இன்று தினக்கூலி வேலை கூட கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். நகரின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே சீரழித்து விட்டீர்கள். அது சரி. மக்கள் வேலையின்றி வறுமையிலும் அறியாமையிலும் இருந்தால்தானே 200 க்கு கொடி பிடிக்கவும் பொது கூட்டம் போராட்டம் என வெயிலில் அல்லாடவும் ஆள் கிடைப்பர்?


sridhar
டிச 02, 2024 16:58

கிறிஸ்துவ மிஷ …நரிகள் கேட்ட பணத்தை கோடிகளை கொடுக்க மறுத்த sterlite ஆலைக்கு நல்லா வேணும்.


RAMAKRISHNAN NATESAN
டிச 02, 2024 15:17

டங்ஸ்டன் வளங்கள் மற்றும் இருப்புக்களின் அடிப்படையில் சீனா உலகில் முதலிடத்தில் உள்ளது மற்றும் மிகப்பெரிய வைப்புக் கொண்டுள்ளது -Tungsten Deposits .... ஜென்னிங்ஸ் கேபிடல் என்ற நிறுவனத்தின்படி, உலகளவில் உற்பத்தி செய்யப்படும் டங்ஸ்டன் செறிவூட்டலில் 83% மற்றும் டங்ஸ்டன் இருப்புக்களில் 62% ஆகியவையே சீனாவின் அதிக டங்ஸ்டன் செறிவு உற்பத்திக்குக் காரணமாகும். இந்தியாவும் உற்பத்தியைத் துவக்கினால் எஜமான் சீனாவின் பிசினஸ் பாதிக்கப்படும் என்ற கவலை அடிமைகளுக்கு இருக்கக்கூடாதா ???? தவிர இந்த ப்ராஜெக்ட் ஐ துவக்கப்போகும் தனியார் நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் யாரு தெரியுங்களா ???? தங்களது நிறுவனமாகிய ஸ்டெர்லைட் இல் பிரச்னையைச் சந்தித்த அதே வேதாந்தா தான் ..... இந்த ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் பப்லிக் ஷேர்களைக் குறைவாக ஒதுக்கியுள்ளது .... ஆங் .... மாப்ளெ கேட்டும் கூட மறுத்திருக்கலாம் .... இப்படி எல்லா விதத்திலும் மன்னர் குடும்பத்தைக் கோபமூட்டினா எப்படி ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை