வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஐயா, இது போன்ற நிகழ்வு அனைத்து அலுவலகங்களிலும் நடக்கிறது மக்கள் முன்வந்து இவர்களைப் போல் புகார் அளிக்க வேண்டும்
இதற்கே இப்படியா. பதிவுத்துறை போக்குவரத்து துறை சென்று பாருங்கள். லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள்.
இளையான்குடி:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் 35. இவர் வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இளையான்குடி ஊரக மின் வாரிய உதவி பொறியாளர் சிவக்குமாரை 51, தொடர்பு கொண்ட போது 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுகுறித்து ரமேஷ் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார். நேற்று அந்த மின் வாரிய அலுவலகத்தில் வைத்து, ரமேஷ் உதவி பொறியாளர் சிவக்குமாரிடம் ரசாயனம் தடவிய 1,500 ரூபாயை கொடுத்த போது டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.