கருப்பண்ண சுவாமி கோவிலில் பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து ஊர்வலம்
குளித்தலை அருகே குமாரமங்கலம் கிராமத்தில் கருப்பண்ண சுவாமி கோவிலில் தை அமாவாசையொட்டி பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் வந்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் கிராமத்தில் கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் பௌர்ணமி அம்மாவாசை அன்று கோவில் பூசாரி அருண் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி வருகிறார்.இக்கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள திருச்சி. புதுக்கோட்டை. தஞ்சை. சேலம். தர்மபுரி. நாமக்கல். திருப்பூர். மயிலாடுதுறை திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்அருள்வாக்கு பெற்ற பக்தர்கள் காரியம் வெற்றி பெற்றவுடன் கோவிலுக்கு வேண்டுதலை நிறைவு செய்து வருகின்றனர்.அந்த வகையில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை அன்று அருள் வாக்கு பெற்ற பக்தர்கள் மற்றும் சுற்றுப்பகுதி கிராம பொதுமக்கள் பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வந்து அடைந்தனர்.தொடர்ந்து கருப்பண்ண சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து கருப்பணசாமி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்றது.கோவில் பூசாரி அருண் பக்தர்கள் மத்தியில் ஒவ்வொருவருக்கும் குலதெய்வத்தை அழைத்து அருள் வாக்கு கூறினார் .தொடர்ந்து பூசாரி மகன் வேம்படி சாமி அருள் வந்து அருவாள் மேல் ஏரி சாமி ஆடினார்.தொடர்ந்து வேம்படி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்ஆட்டு குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.கருப்பண்ணசாமி கோவில் பூசாரி அருண் அருவாள் மேல் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார் .இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியில் வருகை புரிந்த அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது