உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாய்மை பணியாளர் மீது தாக்குதல்; தி.மு.க., வட்ட செயலருக்கு வலை

துாய்மை பணியாளர் மீது தாக்குதல்; தி.மு.க., வட்ட செயலருக்கு வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் உள்ள, 70 வார்டுகளிலும், 'அவர்லேண்ட்' என்ற தனியார் நிறுவனம் குப்பை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், 1,600 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.இதில், இரண்டாவது மண்டலத்தில் குப்பை சேகரிக்கும் பணியில், ஆந்திராவை சேர்ந்த காசராஜ், 42, என்பவர் ஈடுபட்டு வருகிறார். அவர், பெருங்களத்துார் குண்டுமேடு பகுதியில் தங்கியுள்ளார்.இரண்டாவது மண்டலத்தில் சேகரமாகும் குப்பை, பம்மல் விஸ்வேசபுரம் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. எஞ்சிய 3, 4, 5 ஆகிய மூன்று மண்டலங்களில் சேகரமாகும் குப்பை, மேற்கு தாம்பரம் கன்னடப்பாளையம் கிடங்கில் கொட்டப்படுகிறது.விஸ்வேசபுரம் கிடங்கிற்குள் செல்லும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டதால், அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. அதனால், இரண்டாவது மண்டல குப்பை, கன்னடப்பாளையம் கிடங்கில் இரண்டு நாட்களாக கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, லோடு ஆட்டோவில் குப்பை ஏற்றிக்கொண்டு, கன்னடப்பாளையம் கிடங்கிற்கு சென்ற காசராஜ், அங்கு குப்பையை கொட்டிவிட்டு திரும்பினார்.அப்போது, தாம்பரம் மாநகராட்சி, 52வது வட்ட தி.மு.க., செயலர் விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் சேர்ந்து, 'பல்லாவரம் குப்பையை, எதற்காக எங்கள் பகுதிக்கு கொண்டு வந்து கொட்டுகிறாய்' என கேட்டு, உருட்டு கட்டையால் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.தொடர்ந்து, இரும்பு பைப் மற்றும் கட்டையால், காசராஜை சரமாரியாக தாக்கினர். இதற்கிடையில், மூன்று வாகனங்களில் குப்பை கொட்ட வந்த ஊழியர்கள், காசராஜ் தாக்கப்படுவதை பார்த்து சத்தம் போட்டனர். இதையடுத்து, விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள், அங்கிருந்து தப்பினர்.காயமடைந்த காசராஜை, சக பணியாளர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக, அவர்லேண்ட் நிறுவனத்தினர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Balaji Radhakrishnan
ஜூன் 10, 2025 14:30

இவன், இவனுடைய கூட்டாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.


Palanisamy T
ஜூன் 10, 2025 12:17

வழக்குப் பதிவோடு நின்றுவிடாமல் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கூடிய பட்சம் அதிக தண்டனையை வழங்குவதை உறுதிச் செய்யவேண்டும். சட்டங்கள் கடுமையாக இருந்தால்தான் நாட்டில் நல்லாட்சி நடக்கும். ஆளும் கட்சிக்காரன் என்ற முறையில் பாகுபாடும் அச்சத்தில் பின்வாங்கி தங்களின் மக்கள் கடமையிலிருந்து யாரும் பின்வாங்கக்கூடாது. இப்படி செய்ய வில்லையென்றால் நாளை பாஜக தமிழகத்தில் ஏதாவதொரு வகையில் நுழைவதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. திராவிடம் திராவிடம் என்று சும்மா அறிவதால் எந்த பயன்களுமில்லை.


JANA VEL
ஜூன் 10, 2025 11:52

அந்த வட்ட செயலாளருக்கும் மாவட்ட செயலாளர் சுகாதார மந்திரி மா சுப்பிரமணிக்கும் எந்த தொடர்பும் சம்பந்தமும் இல்லை.


Padmasridharan
ஜூன் 10, 2025 11:17

அரசியல் அராஜகம் அதிகமாகி இருக்கிறது. அநியாயத்தை எதிர்த்து உண்மையை காக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அப்பாவிகளை மிரட்டியும், அடித்தும் சாகடிக்கின்றனர். கெட்டது பண்ணாதான் ஆண் பிள்ளைகலென்று நிறைய பேர் நினைத்து சண்டைதான் எல்லோரிடமும், எல்லா இடத்திலும். .


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 10, 2025 09:50

நாங்கள் இரும்பு கரம் கொண்டு சமூக நீதியை காப்போம் ...சமூக நீதியை பேங்க் லாக்கரில் வைத்து இமைப்பொழுதும் கண் அயராமல் ..சுற்றிலும் ராணுவத்தை நிறுத்தி பாதுகாப்போம் .. மற்றபடி மாஸ்டர் ரோல் ஊழல் .. தூய்மை பணியாளர்களை தாக்குவது எங்கள் பொழுதுபோக்கு .. கழகத்தின் உயரிய பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தப்பி தவறி கூட தாழ்த்த பட்டவருக்கோ ..பட்டியலினத்தவரோ வராமல் பார்த்துக்கொள்வோம் ...


Prasanna Krishnan R
ஜூன் 10, 2025 09:47

திமுக கட்சி அயோக்கியர்கள் எனக்கு அந்த தைரியத்தைக் காட்டலாம்.


சிவா. தொதநாடு.
ஜூன் 10, 2025 09:46

அடுத்து ஆட்சிக்கு வருபவர் திமுகவின் ரவுடிகளை அடக்குவதற்கு ஒரு துறை ஏற்படுத்த வேண்டும் போல் உள்ளது


Ramesh
ஜூன் 10, 2025 09:07

வழக்கு பதிவு செய்து விட்டார்கள். இரண்டு மாதத்திற்கு பிறகு சார் வந்து ஆதாரம் இல்லை என்று சொல்வார். உடனே வழக்கு முடிவுக்கு வரும். இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த அடி வாங்குவனவன் என்ன பண்ணுவானுகன்னு நினைக்கிறீர்கள்? துட்டை வாங்கிட்டு அடிச்சவனுக்கே தேர்தல் பிரசாரம் செய்ய போயிடுவானுக. மாக்களும் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவர்.


raja
ஜூன் 10, 2025 08:55

இது தான் திருட்டு ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட திராவிட மாடல் ஆட்சி.....


V RAMASWAMY
ஜூன் 10, 2025 08:49

ஒரு குறுப்பிட்ட கட்சி சார்ந்தவர்கள், தங்களுக்கு பஞ்சாயத்து போர்டிலோ, முனிசிபாலிடியிலோ அல்லது கட்சியிலோ ஒரு சிறு பதவி கிடைத்தவுடன் தங்களை மஹாராஜாவாக நினைத்து, அவர்கள் கையில் சட்டமிருப்பதாக மமதை கொண்டு மற்றவர்களை அவர்களின் கூலிகளாகவோ, ஏவலாளர்களாகவோ நினைத்து அநியாயமாக அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கும் இந்நிலை தண்டிக்கப்படவேண்டும், அடக்கப்படவேண்டும், தண்டனை கொடுக்கப்படவேண்டும். அப்பொழுதான் அக்கட்சிக்கு சிறிதளவாவது மதிப்பு இருக்கும்.