உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை

சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை

சென்னை: '' என் வீட்டின் மீதான தாக்குதல் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருக்கிறார் ,'' என்று யுடியூபர் சவுக்கு சங்கர் கூறினார்.யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நேற்று காலை துப்புரவுப் பணியாளர்கள் என்ற போர்வையில் சென்ற கும்பல் தாக்குதல் நடத்தியது. சாக்கடை கழிவு நீர் மற்றும் மலக்கழிவு நீரை வீட்டிற்குள் ஊற்றி அராஜகம் செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tyu0bzuw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் பின்னணி பற்றி சவுக்கு சங்கர் கூறியதாவது: தமிழக அரசு, சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது உண்மையிலேயே துாய்மை பணியாளர்களுக்கான சிறந்த திட்டம் தான்.துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 213 துாய்மை பணியாளர்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும் மற்றொரு நபரும், ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, துாய்மை பணியாளர்களை கணக்கு காட்டி, கழிவுநீர் அகற்றும் ஊர்திகளை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாதம், 20 - 50 ஆயிரம் ரூபாய் வரை, துாய்மை பணியாளர்களுக்கு கொடுத்துவிட்டு, கோடிக்கணக்கில் சட்ட விரோதமாக சம்பாதிக்கின்றனர் என்பதை ஆதாரத்துடன், 'வீடியோ' வெளியிட்டு இருந்தேன்.இதனால், செல்வப்பெருந்தகை துாண்டுதலின்படி, துாய்மை பணியாளர்கள் என்ற போர்வையில், கூலிப்படையினர் என் வீட்டை சூறையாடி உள்ளனர். இதற்கு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உடந்தையாக இருந்துள்ளார். வீடு சூறையாடப்பட்டதால், அதன் உரிமையாளர், 10 நாட்களில் காலி செய்யுமாறு கூறி விட்டார். இச்சம்பவம், தி.மு.க., அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு அனுப்பி இருப்பதாக டி.ஜி.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Anantharaman
மார் 26, 2025 10:12

மத்திய அரசின் மெத்தனம்தான் இது போன்ற இழி செயல்களுக்குக் காரணம். திமுக அரசை டிஸ்மிஸ் செய்திருந்தால் பயம் இருந்திருக்கும். எல்லாக் கட்சிகளுக்கும் குளிர் விட்டுப் பயிற்று. ஜனநாயகதைதை அழிப்பதில் பாஜக முன்னிற்கிறது என்பதில் ஐயமில்லை.


Ethiraj
மார் 26, 2025 09:01

Congress party may sack selvaperunthagai from congress party


வாய்மையே வெல்லும்
மார் 26, 2025 06:31

சவுக்கு சங்கர் ஐயா அவர்கள் தீவிர காங்கிரஸ் பக்தர். அவருக்கு தாயகத்தில் இருந்தே அதுவும் தமிழக காங்கிரஸ் ஆட்களே ரவுடியிசம் செய்தது வன்மையாக கண்டிக்கிறேன். சவுக்கு அரசியல் புரோக்கர் தான் எனக்கும் தனிப்பட்ட முறையில் அவர்மேல் வருத்தம் உள்ளது. ஆனால் அன்னாரின் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் வீரவசனம் பேசி ரவுடிகளின் அட்டகாசம் யாருக்குமே பிடிக்காத ஒன்று. வீட்டில் சாக்கடை மனித கழிவு போட்டு அசிங்கப்படுத்தியது கொடுமையின் உச்சம் ..இதற்கு மூர்க்க அரசு மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் மக்கள் ஒதுக்கவேணும் ..


Kasimani Baskaran
மார் 26, 2025 04:00

தீம்க்காவில் ஆயை கையாள தொழில்நுட்ப்ப வல்லுநர்கள் அல்லது அடிதடி நிபுணர்கள் இல்லை... ஆகவே கூலிக்கு காங்கிரஸ் மாநில தலைவரை வைத்து சவுக்கரை மிரட்டி இருக்கிறார்கள்... வேறு விதமாக பார்த்தால் திராவிடத்தை தெளித்து இருக்கிறார்கள்...


M R Radha
மார் 26, 2025 10:05

சூப்பர் கமெண்ட்


Mohanakrishnan
மார் 25, 2025 21:22

கர்ம வினை இதற்கு பிறகாவது சவுக்கு திருந்த வேண்டும்


நிக்கோல்தாம்சன்
மார் 25, 2025 20:55

காமராஜரை பார்த்த காங்கிரஸ் இன்று ஈன பெருங்காயத்தையும் பார்க்க வேண்டியுள்ளது , சசிகாந்த் செந்தில் இருக்கும் காங்கிரசில் இது போன்றவர்கள்.


m.arunachalam
மார் 25, 2025 20:46

அவர்கள் கற்று தேறிய கலாச்சாரத்தை நடைமுறை படுத்துகிறார்கள் . மக்கள் கொந்தளிக்கும் முன் திருத்திக்கொள்வது நல்லது .


Nagarajan D
மார் 25, 2025 20:26

மொத்த கேவலத்தின் உச்சம். இந்த பொறுக்கி சிருந்தகையின் செயல்... இவர் வேறு எப்படி இருப்பார்.அவர் தலைவரை போலவே செயல்படுகிறார்


KavikumarRam
மார் 25, 2025 20:18

ஏண்டா சவுக்கு ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னால மோடியும் அவரது தாயாரும் உணவருந்து போட்டோவுக்கு நீ என்ன கமெண்ட் போட்ட??? “கிழவிக்கு தண்ணி வைடா. அடுத்தவாட்டி போட்டோ எடுக்கமுடியாது” அப்படின்னு எவ்வளவு கேவலமான கமெண்ட் போட்ட. இப்ப பாரு உன் தாயார் தனியா இருக்கும்போது 50 பேரு வீட்டுக்குள்ள புகுந்துப்மலத்த கரைச்சு ஊத்திட்டு போயிருக்கானுங்க. இப்ப உனக்கு வலிக்குதோ. ஒரு தன்னலமற்ற தாயைக்கேவலப்படுத்துன உனக்கு கிடைச்ச கர்ம் வினையை பாத்தியா???


TRE
மார் 25, 2025 20:07

சவுக்கு சார், வீடு மீது தாக்குதல் நடந்தால் போலீஸ்ல புகார் கொடுங்க. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் .அதை விட்டு பத்திரிகையை கூப்பிட்டு புகார் கொடுக்குறீங்க


M R Radha
மார் 25, 2025 21:51

போலீசிடம் தாக்குதல் நடக்கின்றபோதே புகார் கொடுத்து விட்டார். போலீஸ் வரவேயில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை