உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்க முயற்சி: கவர்னர் ரவி

அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்க முயற்சி: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அரசியலமைப்பு மற்றும் அதன் நிறுவன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்க சமூக விரோதிகள் முயற்சிக்கின்றனர்,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.சென்னையில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: நமது அரசியலமைப்பு நாட்டின் உச்சபட்ச சட்டம். பாரதத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட லட்சக்கணக்கான தியாகிகளின் கனவுகளால் உருவானது நமது அரசியலமைப்பு. அது, சுதந்திர இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அழகாக விளக்குகிறது. அரசியலமைப்பு என்பது பாரதத்தின் ஒவ்வோர் குடிமகனின் உணர்விலும் உத்வேகத்திலும் இருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு, அதைப் பற்றி மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. தேச விரோத சக்திகளுடன் சில சுயநலவாதிகள் கூட்டு சேர்ந்துள்ளனர். அவர்களிடம் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இன்று போலியான மற்றும் பொய்யான கதைகளைப் பரப்புவதன் மூலம் அராஜகத்தை உருவாக்க விரும்புகின்றனர். அரசியலமைப்பு மற்றும் அதன் நிறுவன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

S.Martin Manoj
நவ 27, 2024 10:46

அரசியல் அமைப்பை சீரழிப்பதே மத தீவிரவாத கட்சிகள்தான்


முருகன்
நவ 27, 2024 06:27

இவர் வேலை இது இல்லை


இறைவி
நவ 27, 2024 05:35

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை மொத்தமாக விற்று காசு பார்க்க முடியாமல் போனதால்தான் நீட் எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது. இம்மாதிரி ஒன்றிரண்டு இடங்களை விற்றால் என்ன சம்பாதிக்க முடியும். இந்த காலி இடங்களுக்கும் ஒன்றிய அரசு, முதல் வருடம் பொது பாடம் ஆனதால், இரண்டாம் வருடம் தகுதி உள்ள இளநிலை பட்டம் பெற்றவர்களை நேரடியாக சேர்க்கலாம்.


அப்பாவி
நவ 27, 2024 04:59

இப்பிடி பொத்தாம் பொதுவுல எதையாவது அடிச்சு உட வேண்டியது.


வைகுண்டேஸ்வரன்
நவ 26, 2024 22:20

சார் மைண்ட் வாய்ஸ் னு நெனச்சி சத்தமா பேசறீங்க. அரசியல் அமைப்பு சட்டத்தை முதலில் மீறியது நீங்க தான். அதன் மீதான நம்பிக்கையைக் குலைத்ததும் நீங்கள் தான். தமிழ் நாட்டில் ஆட்டோ டிரைவர் முதல் விமான பைலட் வரை எல்லோருக்கும் உங்களின் நடத்தைகள் தெரியும்.


hari
நவ 26, 2024 23:25

எல்லா புகழும் ஸ்டாலினுக்கு என்று கூறுகிறார் நம்ம வைகுண்டம்


Muthu Kumaran
நவ 27, 2024 06:30

நம்ம அளவுக்கு வருமா, சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் அறிந்து அரசியல் அமைப்பை கேலி கூத்துக்காவது , சாதி அரசியல் செய்வது , கட்ட பஞ்சாயத்து செய்வது


SUBBU,
நவ 26, 2024 21:39

In 1989, Rajiv Gandhis goons had rigged ballot boxes in Amethi Lok Sabha elections to get re-elected. No wonder why Congress wants to bring back paper ballot tem.


kantharvan
நவ 26, 2024 21:26

எனக்கு ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது மேதகு ரவி அவர்கள் இன்றுதான் உண்மையை தைரியமாக பேசியுள்ளார்.சொந்த கட்சியை இப்படி விமர்ச்சனம் செய்ய இவரால் மட்டும்தான் முடியும்.


ஆரூர் ரங்
நவ 26, 2024 21:24

அரசியல் சட்டத்தையே எரித்த கட்சிதான் உங்க கீழே ஆள்கின்றது.என்ன பண்ண முடிஞ்சுது? சோற்றாலடித்த பிண்டங்கள் நிரந்தரமாக அவர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள்.


Ramesh Sargam
நவ 26, 2024 21:21

யார் அந்த சமூக விரோதிகள்? தனி நபர்களா அல்லது அரசியல் கட்சியா அல்லது அரசியல் கட்சியின் ஆதரவாளர்களா?


Raj S
நவ 26, 2024 23:36

கோபாலபுரத்துல இருக்கும் திருட்டு ட்ராவிடிய கும்பல்தான் அது...


சமீபத்திய செய்தி