உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை விதைக்க முயற்சி; விஜய்க்கு ஆதரவான சர்வே பற்றி முதல்வர் விமர்சனம்

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை விதைக்க முயற்சி; விஜய்க்கு ஆதரவான சர்வே பற்றி முதல்வர் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நடிகர் விஜய், ஜனநாயகன் படப்பிடிப்புக்காக, மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கடந்த மே 1ம் தேதி சென்றார். மதுரை விமான நிலையத்தில் இருந்து, திறந்தவேனில் நின்றபடி, அவர் பயணித்தார்.அப்போது, தொண்டர்களும் மக்களும் விஜயை பார்க்க திரண்டனர். வாகனங்களிலும், மரக்கிளைகளிலும் ஏறி நின்று, விஜயை பார்த்தனர்.விஜயின், 'ரோடு ஷோ' வீடியோவையும், மதுரையில் கடந்த 31ல், முதல்வர் ஸ்டாலின் நடத்திய 'ரோடு ஷோ'வையும் ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் த.வெ.க.,வினர் விமர்சித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w3onjn7s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உங்ககிட்ட பணம் இருக்கலாம்; உச்சபட்ச அதிகாரம் இருக்கலாம். அவதுாறு பரப்ப ஆயிரம்ஊடகங்கள் இருக்கலாம். ஆனால், மதுரையில் விஜய்க்கு வந்த மாதிரி எதையும் எதிர்பார்க்க முடியாது. அளவு கடந்த அன்பைக் காட்டுற மக்கள் படை மட்டும் என்னைக்குமே உங்களிடம் இருக்காதுமதுரையில், விஜய்க்கு அன்பால் தன்னெழுச்சியாக அலை கடலென திரண்டது மக்கள் கூட்டம். முதல்வர் ஸ்டாலினுக்கு, வெளியூரில் இருந்து காசு கொடுத்து கூட்டியும் கூடாத கூட்டம். அதாவது நீங்கள் நடத்தியது 'ரோடு ஷோ' அல்ல, காமெடி ஷோ. இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.இதற்கிடையில், மதுரையில் நடந்த பொதுக்குழுவில், விஜய் கட்சிக்கு ஆதரவாக வெளியான 'சர்வே' விவகாரத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். சமீபத்தில், மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், வரும் சட்டசபை தேர்தல் குறித்து சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வே முடிவில், நடிகர் விஜய் கட்சியான த.வெ.க., தனித்துப் போட்டியிட்டு, 95 முதல் 105 தொகுதிகளை கைப்பற்றும் எனக் கூறியுள்ளது.மேலும், தி.மு.க., 75 முதல் 85 தொகுதிகளும், அ.தி.மு.க., 55 முதல் 65 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், சொல்லப்பட்டுள்ளது. இந்த சர்வே, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி தரப்பில், அதற்கு எந்த விமர்சனமும் வராமல் இருந்த நிலையில், பொதுக்குழுவில், முதல்வர் ஸ்டாலின் அதுபற்றி கருத்து கூறியிருக்கிறார்.இதுகுறித்து பொதுக்குழுவில் அவர் பேசியுள்ளதாவது:சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றன. அதனால், வழக்கத்தைவிட அதிகமாக, தி.மு.க.,வுக்கு எதிராக, தி.மு.க., அரசுக்கு எதிராக, அவதுாறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவர்.கருத்துக்கணிப்பு என்ற பெயரில், மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பர்; சமூக ஊடகங்கள் வாயிலாக விதைப்பர். இதையெல்லாம் முறியடிக்க, நாம் தயாராக வேண்டும். அவர்களைவிட, ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். அவர்களது பொய்களுக்கு முன்னால், நம் உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

ரவிச்சந்திரன்
ஜூன் 04, 2025 16:33

உங்களுக்கு சாதகமாக கருத்து கனிப்பு வராது. இருப்பது தான் வரும் பொய்யா சொல்லி ஆட்சியில் இருக்கும் நீங்கள் இத்தோடு ஒழிந்தீர்கள்.


Matt P
ஜூன் 03, 2025 21:14

கருத்துக்கணிப்பு இவருக்கு சாதகமா வரலைன்னு இந்த குழந்தை இப்படி கதறுது பக்கத்து வீட்டு அம்மா அவன் பயனை திட்டுனாங்க. . நீ வூரு சுத்துற நீட் பாஸ் ஆக மாaaattai என்ற உடன் அழுகையை அடக்க முடியலை அவனுக்கு. பாவம்.


Padmasridharan
ஜூன் 03, 2025 18:11

இந்த 3 கட்சிதான் இருக்கிற மாதிரி செய்தி இங்கே, ஆனால் வோட்டு போட போனால் 20 க்கு மேற்பட்ட சின்னங்கள் இருக்கின்றது. . இதில் வேற NOTA, வோட்டு போடற எங்க கண்களையும் கையையும் கவனிக்கும் கூட்டம் வேற அறைக்குள்ள. வோட்டு போட்டவுடன் சத்தம் வருது ஆனா விளக்கு உடனே அணைய மாட்டேங்குது


உ.பி
ஜூன் 03, 2025 17:31

ஆக..சர்வேய பாத்து பதட்டபடும் மாடல்


என்றும் இந்தியன்
ஜூன் 03, 2025 16:32

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவன் பொய்யிலே பிழைப்பு நடத்துபவன் பொய் பேசுவதில் தவறு ஒன்றும் இல்லையே என்ன சுடலை மாயாண்டி ஜோசப் கான் சரிதானே உன்னை பற்றி சொல்வது


venugopal s
ஜூன் 03, 2025 15:27

இப்போது எல்லாம் பணம் கொடுத்தால் யாருக்கு சாதகமாக வேண்டும் என்றாலும் ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிடுவார்கள்!


venugopal s
ஜூன் 03, 2025 15:25

விஜய்யை தமிழக மக்கள் இன்னும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகத் தான் பார்க்கின்றனர். அதனால் தான் அவரைப் பார்க்க ஆவலுடன் வருகின்றனர் என்பது தான் உண்மை!


RAVINDRAN.G
ஜூன் 03, 2025 13:11

கருத்து கணிப்பு விடுங்க. ஸ்டாலின் உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நடத்துவது மக்கள் ஆட்சியா? இல்லை மக்கள் விரோத ஆட்சியா?


Rengaraj
ஜூன் 03, 2025 12:40

கூட்டணி உங்கள் பலம் என்று ஒரு பொய்யை கடந்த ஆறு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். அவர்கள் உண்மையிலேயே உங்கள் ஆட்சி திறமையான ஆட்சி என்று சொல்கிறார்களா அல்லது உங்கள் அதிகாரத்துக்கும் பணபலத்துக்கும் நீங்கள் தரும் பணத்துக்கும் கட்டுப்பட்டு அவ்வாறு சொல்கிறார்களா ?


Rengaraj
ஜூன் 03, 2025 12:34

முதல்வர் அவர்களே நீங்கள் மட்டும் உண்மைதான் சொல்கிறீர்களா ? எந்த கொம்பனும் குறை கூற முடியாத ஆட்சி இந்த ஆட்சிக்கு ஆதரவாக மக்கள் இருக்கின்றனர் என்ற பொய்யை ஏன் விதைக்கிறீர்கள் ?


சமீபத்திய செய்தி