உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதிகளை கட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடு ஆபத்தானது: எழுத்தாளர் சோ.தர்மன் கண்டனம்

நீதிபதிகளை கட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடு ஆபத்தானது: எழுத்தாளர் சோ.தர்மன் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சுதந்திரமாக செயல்படும் நீதிபதிகளை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை' என, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவு:சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், ஜாதிய மனோபாவத்துடன் நீதிமன்றத்தில் செயல்படுவதாக, வழக்கறிஞர் ஒருவர் குற்றம் சுமத்த, விஷயம் போராட்டமாக மாறி விட்டது. இக்குற்றச்சாட்டு, நீதித்துறையின் ஆணி வேரில் வெந்நீரை ஊற்றுவது போல உள்ளது. நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை பற்றி விவாதிக்கலாம்; கருத்துக்கள் கூறலாம். ஆனால், நீதிபதிகள் ஜாதிய மனோபாவத்துடன் செயல்பட்டால் என்னவாகும்; நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை, தகுந்த சாட்சியங்கள் இல்லாததால், நீதிபதி ஒருவர் விடுதலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். குற்றவாளியும் நீதிபதியும் ஒரே ஜாதி; அதனால் விடுதலை செய்து விட்டார் என்றோ, தண்டனை வழங்கி விட்டால், குற்றவாளிக்கு எதிர் ஜாதி என்பதால், நீதிபதி தண்டித்து விட்டார் என்றோ பேசினால், நீதித்துறை என்னவாகும்; நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. இதுபோன்ற குற்றச்சாட்டு, இதுவரை எந்த நீதிபதியின் மீதும் சுமத்தப்பட்டதில்லை. சில ஆண்டுகளுக்கு முன், என் முகநுால் பதிவு ஒன்றை மேற்கோள் காட்டி, நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு சொல்லியிருந்தார். அது நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, மதுரையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், அவரை சந்தித்தேன். அவர் உணவு சாப்பிட உட்கார்ந்திருந்த நிலையில், எதிரே நின்று, 'நான் தான் எழுத்தாளர் சோ.தர்மன்' என்றேன்.சடாரென எழுந்து வந்து, என் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய், அவருக்கு அடுத்த சேரில் என்னை அமர வைத்தார். பரிமாறுகிறவர்களிடம் சொல்லிச் சொல்லி எனக்கு பரிமாற வைத்ததோடு, நான் கூனிக்குறுகி அமர்ந்திருக்க, வெகு நாட்கள் பழகிய ஒரு நண்பரை போல் பல விஷயங்களை பேசினார். ஜாதிய மனோபாவம் கொண்டவராக இருந்தால், நான் வணக்கம் வைத்தவுடன் பதில் வணக்கம் சொல்லி விட்டு பேசாமல் இருந்திருப்பார்.ஒரு உயர்நீதிமன்ற நீதியரசர் தன் அருகில் என்னை அமர வைத்து என்னுடன் பேசிக்கொண்டே உணவருந்துகிறார் என்றால் அவரிடம் எப்படி ஜாதி துவேஷம் இருக்கும் .என்னைப் பொறுத்த வரையில் கீழ்மை நீதிமன்றங்களிலும் சரி,உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம் எதிலுமே நீதியரசர்கள் ஜாதிய மனோபாவத்துடன் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றே கூறலாம்.என்னைப் பொறுத்தவரை சுதந்திரமாக செயல்படும் நீதியரசர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துடிக்கும் அதிகார வர்க்கத்தின் செயல் பாடுகள் கண்டிக்கத் தக்கவை.இவ்வாறு அந்த பதிவில் எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

மூர்க்கன்
ஜூலை 31, 2025 13:45

நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே?? அந்த சாமியே நாதனா வந்தாலும் இதாண்டா தீர்ப்பு? என்ன சோதனை வந்தாலும் நீதியை வழுவாமல் காக்க துடித்த எம் மக்கள் நக்கீரன் பரம்பரை. அவர்கள் முன்னால் சர்வ சக்தி வாய்ந்தவனும் மண்டியிட்டுதான் ஆகணும். இதுதான் விளையாடல்.


Ravi Kulasekaran
ஜூலை 30, 2025 13:20

நீதிபதி சுவாமி நாதன் வழக்கு திட்டம் மிட்ட திமுகவின் சதி இன்றைய காலக்கட்டத்தில் ஆளும் திமுகவின் மக்கள் வீரோத ஆட்சியிக்கு எதிராக பால் விலை உயர்வு சொத்து வரி காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளை அடித்து கொள்வது போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இதனை மனதில் வைத்து நீதிபதிகள் மேல் அச்சுறுத்தல் நடக்கிறது


Mani . V
ஜூலை 30, 2025 03:40

மன்னிக்கனும் திரு. தர்மன். ஏற்கனவே "அப்பா" குடும்பம் நீதிபதிகளை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். பல வழக்குகளின் தீர்ப்பைப் பார்த்தால் இது தெரிந்து விடும். உதாரணத்துக்கு நம்ம ஐந்து கட்சி அமாவாசை வழக்கைப் பாருங்கள்.


Natarajan Ramanathan
ஜூலை 30, 2025 02:06

இந்த வக்கீல் வாந்திநாதன் ஏற்கனவே ஒருமுறை அசிங்கமாக செயல்பட்டு வக்கீல் தொழிலே செய்யக்கூடாது என்று சஸ்பெண்ட் செய்யப்பட்டவன்தான். இவனுக்கு பின்னால் திராவிடர் கழகம் போன்ற தீயசக்திகள் இருப்பதால் இப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறான்.


Raj S
ஜூலை 30, 2025 00:37

திருட்டு திராவிடர்களுக்கு வேற என்ன தெரியும்? ஜாதி, மத, மொழி அரசியல் தான தெரியும்


Karthikeyan Palanisamy
ஜூலை 29, 2025 23:32

எல்லாம் திராவிடமயம்


panneer selvam
ஜூலை 29, 2025 22:23

Dharman ji , who are that powerful authorities who wants to bring judiciary under their control ? Please do not run away with out identifying that forces .


Nagarajan D
ஜூலை 29, 2025 22:07

சரி அவனுங்க ஜாதிய ரீதியா வேலை பார்த்தால் தவறு தான் எவனோ இருந்தாலும்... ஆனால் இந்த கேடுகெட்ட நீதிபதிகள் எல்லோரும் கட்சி ரீதியா வேலை பாக்குறானுங்க அதுக்கு ஒரு குரல் கொடுக்கலாமே


Perumal Pillai
ஜூலை 29, 2025 22:02

இவர் புரோக்கர் ஆக இருப்பாரோ ?


Arunkumar,Ramnad
ஜூலை 29, 2025 22:38

ஊருக்கு ஒரு பிள்ளை இருந்தால் போதும் அந்த ஊர் வெளங்கிரும் என்று சும்மாவா சொன்னார்கள்


Kannan
ஜூலை 29, 2025 21:59

கிரேட் ஸ்பீச்


புதிய வீடியோ